சட்டம் - ஒழுங்கு சரியில்லை


'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு  ஆளுநர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளார்.இதனால்  முதல்வர் பழனிசாமி தலைமை யிலான சசிகலா பினாமி அரசுக்கு கடுமையான  சிக்கல்  உண்டாகியுள்ளது.

இதைவைத்துதான் விரைவில் பொதுத்தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்று பாஜக பினாமி பன்னிரு செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. 

சசிகலா அணியில் அவரது பினாமி  எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்  அமித் ஷா கட்டளைக்கேற்ப பாஜக  பினாமியாக செயல்பட்டு வருகிறார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. 

ஆனால், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், வீட்டில் சோதனை நடத்தினர். 

அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின. பணம் பட்டுவாடாவில், முதல்வர் பழனிசாமி உட்பட, 7 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதற் கான, ஆதாரங்களும் கிடைத்துள் ளன. ஜெயலலிதா வின், கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை நடந்தது. 

இந்த கொலை வழக்கின், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட, டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிர் இழந்தார். 
அவரது நண்பர், சயான் விபத்தில் சிக்கி, கோவை யில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 
இந்நிலையில், இது பற்றிய விபரங்களை தொகுத்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு, அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி கொலையான தும்,அதைத்தொடர்ந்து நடந்த பல சம்பவங்களும், தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந் துள்ளதையே காட்டுகின்றன. 

பெங்களூரு சிறை யில் உள்ள சசிகலாவின் வழிகாட்டுதலில் தான், தமிழக அரசு நிர்வாகம் செயல்படு கிறது. இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு தினகரன் லஞ்சமாக கொடுக்க இருந்த, பல கோடி ரூபாய் பணத்தை, நான்கு அமைச்சர்கள் ஹவாலா மூலமாக தர திட்ட மிட்டிருந்தனர். 
இது போன்ற விபரங்கள் எ ல்லாம் ஆளுநர்றிக்கையில் சுட்டி காட்டப் பட்டு உள்ளதாக தெரிகிறது. 

ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவில், முதல்வர், அமைச்சர்களுக்கு தொடர்பு வருமான வரித் துறை சோதனை,அமைச்சர்கள் மீது வழக்கு, விசாரணை என, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 
தற்போது ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் அறிக்கை வாயிலாக மத்திய அரசு சட்டம் ஒழுங்கை காரணம் கட்டி எடப்பாடி பழனிசாமி அரசை கலைக்கலாம்.
அதன் முன்னோட்டமாக நிதி தொடர்பான முதலவர்கள் ஆலோசனை  கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க விரும்பி நேரம் ஒதுக்க கேட்டும் மோடி தரவில்லை.
ஆனால் பாஜக மாநில முதல்வர்களை எல்லாம் தனித்தனியாக சந்தித்து மோடி பேசியுள்ளார்.
ஆனால் இப்போது அதிமுக ஆட்சியை கலைத்து பொதுத்தேர்தல் நடத்தினால் அதில் திமுகவே ஆட்சியமைக்கும் என்று வரும் தகவல்களால் மோடி,அமித் ஷா யோசனையில் இருப்பதாக தெரிகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோடநாடு மர்மங்கள்.
இன்று தமிழகத்தின் டிமான்டி காலனி ,அரண்மனை படங்கள் அளவுக்கு திகில்,மர்மம் நிறைந்த இடங்கள் போயஸ் தோட்டம்,கோடநாடு தான்.
போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதாவின் ஆவி (இதை இப்போது ஆன்மா என்று அம்மாவின் ஆசைக்கிணங்க அழைக்கிறார்கள்,)இரவு அலறல் குரல் கொடுப்பதாகக் கூறி யாருமே தங்க வில்லை.
ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா மற்றும் எஸ்டேட், அவரது மறைவுக்கு பின், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. 
அங்கு, சமீபத்தில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள், பல யூகங்களை கிளப்பி விட்டுள்ளன. 
இங்கு பல கொலைகள்,விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது,
இந்த சூழ்நிலையில், கோடநாடு எஸ்டேட்டை, பிரிட்டனை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம், ஜெயலலிதா, சசிகலா மிரட்டி வாங்கியதகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர், பிரிட்டனை சேர்ந்த, பீட்டர் கிரேக் ஜோன்ஸ். இவர், தன்னிடம் இருந்து, கோடநாடு எஸ்டேட் கைமாறியது குறித்து, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

என் பெற்றோர், பிரிட்டன் பிரஜைகள். எனக்கு, மார்கரெட், கிறிஸ்டின், ரோசலின் மற்றும் டயான் என, நான்கு சகோதரிகள். அவர்களில், மார்கரெட்டும், கிறிஸ்டினும், பிரிட்டனில் உள்ளனர். மற்ற இருவரும், பெங்களூரில் வசிக் கின்றனர். எங்களுக்கு, கர்நாடகாவின் குடகு பகுதியில், 298 ஏக்கர், காபி எஸ்டேட் உள்ளது. காபி கொட்டைகளை, பெங்களூரிலிருந்து ஏற்றுமதி செய்கிறோம். ஆந்திரா வங்கி மற்றும், விஜயா வங்கிகளில், எங்களுக்கு கணக்குகள் உள்ளன. 

1975ல், கோத்தகிரியில் உள்ள கோடநாடு டீ எஸ்டேட்டை, 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அதன் மொத்த பரப்பளவான, 958 ஏக்கரில், 60 ஏக்கரை, 1976ல், விற்று விட்டோம். மீதமுள்ள, 898 ஏக்கர் மட்டுமே எங்களிடம் இருந்தது. எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய போது, விஜயா வங்கியில், 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம். 

பின், 1978ல், கனரா வங்கியில் கடன் பெற்று, விஜயா வங்கி கடனை அடைத்தோம். 1995 வரை, அந்தக் கடன் தொகை, 3.5 கோடி ரூபா யாக உயர்ந்தது. இதற்கிடையில், கோடநாடு எஸ்டேட்டை, 1985 முதல் விற்க முயன்றோம். ராஜரத்தினம், சசிகலா மற்றும் உடையார்குடும்பத்தை சேர்ந்தவர்கள், கோடநாடு எஸ்டேட்டை விலைக்கு வாங்க என்னை சந்தித்தனர். அவர்களுடன், தமிழக அரசின், 'டேன் டீ' நிறுவன அதிகாரிகளும் வந்தனர். 


சில நாட்கள் கழித்து, முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவும், கோடாநாடு எஸ்டேட்டை பார்வை யிட்டார். அதன்பின், ராஜரத்தினம் என்பவர், எங்களை அணுகி, டீ எஸ்டேட்டை அவர் வாங்க விரும்புவதாக கூறினார். இதுதொடர்பாக, ஐந்து முறை பெங்களூரில் பேச்சு நடந்தது. இரண்டு முறை நான் பங்கேற்றேன்; மூன்று முறை, என் குடும்பத்தினர் பங்கேற்றனர். பேச்சின் போது, ராஜரத்தினம் விதித்த நிபந்தனைகள், எங்களுக்கு ஒத்து வரவில்லை; அதனால், அவர் சொல்பவருக்கு எஸ்டேட்டை விற்க முடியாது என, தெரிவித்து விட்டோம். 

இதன்பின், ஆறு மாதம் கழித்து, 'நம்பர் பிளேட்' இல்லாத வண்டியில், குண்டர்கள் சிலர் கோட நாட்டிற்கு வந்து, 'சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே எஸ்டேட்டை விற்க வேண்டும்' என மிரட்டியதாக, என் மேலாளர் தெரிவித்தார். 

இதுகுறித்து, 1993 அக்., 25ல், பெங்களூரு சூலுார் போலீசில், புகார் அளித்தேன். மறுநாள், நீலகிரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் என்னை சந்தித்து, புகாரை திரும்ப பெற வலியுறுத்தியதால், புகாரை வாபஸ் பெற்றேன்.

பின், அடிசன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.குரூப்பை சேர்ந்தவர்கள் எங்களை அணுகினர். நாங்கள், 9.60 கோடி ரூபாய் விலை கூறினோம். சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தினரும், எங்களை அணுகினர். ஆனால், அரசியல் செல்வாக் கால், அவர்களை எஸ்டேட்டை வாங்க விடாமல், சிலர் தடுத்து விட்டனர்.

இதையடுத்து, சென்னையை சேர்ந்த உடையார், அர்ஜுன்லால் என்பவரை என்னை சந்திக்க அனுப்பி வைத்தார். அவரது சந்திப்பின் போது நடந்த பேச்சின் படி, சென்னையில், அவரையும், உடையாரையும் நான் சந்தித்தேன்; இது, 1994ல், நடந்தது. 

எங்களது பேச்சு, அப்போதைய, தமிழக அட்வகேட் ஜெனரலான, ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் நடந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி யார் என்றே எனக்கு தெரியாது. அதன்பின் தான், அவர் தமிழக அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் என்பதும், உடை யாரின் உறவினர் என்றும்தெரிய வந்தது. எஸ்டேட் டிற்கு, நான், 9.50 கோடி ரூபாய் விலை கூறினேன்; பின், 7.50 கோடி ரூபாய் தருவதாகவும், எஸ்டேட் பெயரில் உள்ள சில கடன்களை அடைப்பதாகவும் அவர்கள் சம்மதித்தனர். 

இதன்பின், எங்களுக்கு தருவதாக சொன்ன, 7.50 கோடி ரூபாயை, வங்கி வரைவோலையாக, எங்க ளது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கொடுத்தனர். ஆனால், வங்கியில் வாங்கிய கடனை அடைக்க பணம் எதுவும் தரவில்லை.இதையடுத்து, உடையார் குடும்பத்தினருக்கு, எஸ்டேட் கைமாறியது. ஜெ
யலலிதா  சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, போலீசாரிடமும், இந்தத் தகவலை தெரிவித்துள்ளேன். 

கொடநாடு டீ எஸ்டேட்டில், காவலாளிகள் மற்றும், 'கேட் கீப்பர்கள்' உண்டு. சில சமயங்களில் சுற்றுலா பயணிகளும், எங்கள் எஸ்டேட்டை பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வருவர். இவ்வாறு அவர் தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

இதே, சொத்து குவிப்பு வழக்கில், உடையாரின் மருமகள், ராதா வெங்கடாச்சலம் அளித்த வாக்குமூலத்தில், தங்களது குடும்பத்தினர் பெயரில், தன் மாமனார் வாங்கிய, கோடநாடு எஸ்டேட், பின், சசிகலா குடும்பத்தினருக்கு, 7.60 கோடி ரூபாய்க்கு கைமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவும், தன் மாமனாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால், இந்த சொத்து, ஜெயலலிதா , சசிகலா விருப்பத்தின்படி, மாற்றப்பட்டது என்றும், வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால் ஜெயலலிதா ஆசைப்படி  சசிகலா குடும்பத்தினரின் மறைமுக மிரட்டல் காரணமாகவே, பீட்டர் கிரேக் ஜோன்ஸ் கோடநாடு எஸ்டேட்டை, உடையார் குடும்பத்தினருக்கு கைமாற்றி, பின், அது ஜெயலலிதா,சசிகலா பெயருக்கு  மாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. 
============================================================================================
ன்று,
மே-08.
  • உலக செஞ்சிலுவை தினம்
  • செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
  • முதல் தடவையாக பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு இடைநிறுத்தப்படாத விமானப் பறப்பை மேற்கொள்ள முயன்ற சார்ள்ஸ் நங்கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர்  காணாமல் போயினர்.(1927)
  • சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. (1980)
  •  ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார். ( 1945)
  • அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது. (1984)
  • ==============================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?