ரூ.4000 கோடி போச்சே
''அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. எங்கும் எந்த பணியும் நடக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்திருக்கிறது என்று கூட நான் கூறுவேன்'' என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
இந்த ஆறு மாத காலத்தில் தமிழக அரசு நிர்வாகம் எப்படி சீரழிந்து, சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு, உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய்கள் மத்திய அரசால் கொடுக்கப் படுவது வழக்கம்.
இந்த முறை உள்ளாட்சிகளுக்கான இந்த தொகை அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பபட்டுவிட்டது.
இதே போல தமிழ் நாட்டில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாறுவதற்காக 400 கோடி ரூபாயை ஏற்கனவே அனுப்பி விட்டது நபார்டு வங்கி. இதில் 100 கோடி ரூபாய், 2016 - 17 ம் ஆண்டுகளுக்காக செலவிடப் பட வேண்டும்.
மீதமுள்ள 300 கோடி ரூபாய் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு செலவிடப் பட வேண்டும் என்பது விதி.

'''100 கோடி ரூபாயை ஏற்கனவே செலவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதரங்கள் ஒன்று கூட தமிழக அரசால் காட்டப்பட வில்லை.
மாறாக நீங்கள் அந்த 100 கோடி எப்படி செலவு செய்யப் படப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பற்றி எதுவும் கேட்காதீர்கள். இனிமேல் செலவு செய்யப் பட வேண்டிய 300 கோடி ரூபாய் பற்றி கேளுங்கள்.
இத்தகைய பணிகளை நிறைவேற்றுவதற்காக வழக்கமாக நியமிக்கப் படும், பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவிலான ''குடிமராமரத்து கமிட்டிகளை' நியமிக்க ஏற்கனவே உத்தரவு போட்டு விட்டேன் என்று என்னிடம் கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுகிறார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.

இந்த விவகாரத்தில் நபார்டு வங்கியையும் பாண்டியன் சாடுகிறார்.
''தான் உதவி செய்யும் திட்டங்கள் எந்த லட்சணத்தில் செயற்படுகின்றன என்பதை கண்காணிக்கும் பொறுப்பு நபார்டு வங்கிக்கு இருக்கிறது. இதற்கான தொழில் நுட்ப அறிவு கொண்டவர்களின் குழு இது. ஆனால் 100 கோடி ரூபாய் விவகாரத்தில் நபார்டு வங்கி வாய் திறக்க மறுக்கிறது.
100 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப் பட்டது என்பதை பற்றிய தெளிவான ஆதாரங்களை நபார்டு வங்கி வெளியிட வேண்டும்.
இல்லையென்றால் இந்த 100 கோடி ரூபாய் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது, இதில் நபார்டு வங்கிக்கும் பங்கு இருக்கிறது என்பது தான் பொருள்.
எங்களது நியாயமான கோரிக்கைக்கு நபார்டு வங்கி உண்மையான காரணத்தை தெரிவிக்காவிட்டால் நாங்கள் இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை விரைவில் வழக்கு தொடுப்போம்''' என்று மேலும் கூறுகிறார் பாண்டியன்.

ஒவ்வோர் துறையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத, பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
'''தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு ஆண்டு தோறும் வழங்கப் பட வேண்டிய உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப் பட்டு விட்டது.
கோவை மாநகராட்சியில் 500 துப்புரவுத் துறை ஊழியர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஊதியம் சில மாதங்களாக கொடுக்கப்படாததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவை எல்லாமே இந்த ஆட்சி நிர்வாகம் சரிவதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் என்றே நான் பார்க்கிறேன்''.

தமிழக அரசின் வருவாயும் பெரிய அளவில் பாதிக்கப் பட துவங்கியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுபான கடைகள் அகற்றப் பட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்திரவு தமிழக அரசின் வருவாயை கடுமையாக பாதிக்கத் துவங்கியிருக்கிறது.

'''குடி மன்னர்களின் தாலியை''' ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் அறுத்து எறிந்து கொண்டிருக்கும் டாஸ்மாக் விற்பனை இவ்வாறு தொடர்ந்து சரிவது மாநிலத்தின் நிதி நிலைமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இது இன்னும் சில மாதங்கள் நீடித்தால் மாநிலத்தின் நிதி நிலைமை மேலும் மோசமாக மாறி விடும்''' என்கிறார் மாநில அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார நிபுனர் ஒருவர்.
'''மு.கருணாநிதி, எம்ஜிஆர் போன்றவர்கள் முதலமைச்சர்களாக பதவி வகித்த, கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது இல்லை''' என்று மேலும் கூறுகிறார் அவர்.

அரசியல் ரீதியில் ஸ்திரமான ஆட்சி இல்லையென்றால் என்ன வெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை எல்லாமே கள சாட்சிகளாக இன்று இருந்து கொண்டிருக்கின்றன.
24 மணி நேரமும் தன்னுடைய ஆட்சியையும், தான் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் நாற்காலியையும் எப்படி காப்பாற்றிக் கொள்ளுவது என்பதை தவிர வேறெதிலும் கவனம் செலுத்தும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லை.
இத்தகைய '''ஸ்திரமற்ற அரசியல் சூழல்''' வேறெந்த தமிழக முதலமைச்சரும் சந்திக்காத ஒன்றுதான். இதனை நாம் மறுப்பதற்கு இல்லை.

ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்களில் ஒன்று, தனியார் துறையின் முதலீடுகள். தற்போது தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழலில் எந்த முதலீட்டாளரும் தமிழகத்தின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார் என்பது கூடுதல் தகவல்.
இன்று எல்லாவற்றுக்கும் மோடியின் கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதுதான் எடப்பாடி அரசின் ஒரே சாதனை.
2019 ல் மக்களவை தேர்தலை சந்திக்க விருக்கும் மோடி, எடப்பாடி அரசுக்கு மத்திய அரசின் ஆதரவு கரங்களை நீட்டலாம். நாம் மறுப்பதற்கு இல்லை....
ஆனால் அதற்கு அரசியல் ரீதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசும், அவரது கட்சியும் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும்.
இந்த விலை எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது கட்சிக்கும் வேண்டுமானால் லாபத்தை கொண்டு வரலாம்.
ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அந்த விலை தாங்க முடியாத இன்னல்களையும், பிரச்சனைகளையும் தான் கொண்டு வரும். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ...
ஏற்கனவே முடங்கி கிடக்கும் தமிழக அரசு நிர்வாகம், தற்போது அழிவிலிருந்து பேரழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர்கள்,அதிகாரிகள் மற்றும் அரசு பற்றிய விவரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த வேதனையான உண்மை.
"எல்லோரும் சசிகலா கூறச் சொன்னதைத்தான் சொன்னோம்." அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் .
"ஆளுநருமா? "

=======================================================================================
இன்று,
செப்டம்பர்-24.
- உலக காதுகேளாதோர் தினம்
- முகமது நபி, மெக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்(622)
- அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது(1789)
- இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)
========================================================================================