நெஞ்சம் இல்லை,நேர்மை இல்லை ஒட்டு ராசா

ரோம் எரியும் போது நீரோ பிடிலோ ,கித்தாரோ வாசித்து பொழுதை இன்பமாக கழித்தான் என்று சொல்வார்கள்.

அதெப்படி தனது நாடு இன்னலில்  இருக்கையில் நாட்டை ஆளும் ஒருவன் அப்படி செய்வான் என்பது எனது கேள்வியாக இருந்தது.

ஆனால் மாண்புமிகு தமிழக பினாமி ஆட்சியின் முதல்வர் இ.பழனிசாமி தற்போது நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் நீரோ கதை உண்மைக்கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இதோ ஓராண்டு விலக்கு எசமான் மோடி தந்து விட்டார்.நீட் இந்த ஆண்டு கிடையாது.இதற்காக உங்கள் அம்மா ஆன்மா வழி நடத்தும் அரசு எத்தனை முறை டெல்லி சென்று வந்தது தெரியுமா?என்று வீர வசனம் பேசியே தமிழக மாணவர்களை முழுமனதுடன் நீட் தேர்வுக்கு படிக்கவிடாமலாக்கி மண்ணைக் கவ்வ வைத்தார்.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 25 மாணவர்களில் 18 பேர்கள் வடபுலத்தார்.மீதி 7 நம் தென் மாநிலத்தவர்கள்.ஆனால் இந்த 7இல் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் கிடையாது.
காரணம் நம்ப வைத்து கழுத்தறுத்த எடப்பாடி,மோடி அரசுகள்தான்.

அதன் பயன் தான் நம்மை எல்லாம் மிகவும் துயரப்பறவைத்த அனிதா மரணம்.இது உண்மையிலேயே மத்திய ,மாநில அரசுகள் செய்த படுகொலை.

இப்படுகொலையால் தமிழகமே எட்டு நாட்கள் போராட்டக் களமாகி நீட் எதிர்ப்புத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது.
இது போதாதென்று ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்து ஊதியகே குழு பரிந்துரைப்படி யூதேயாம் கேட்டும்,பழைய ஓய்வூதியத்திட்டத்தையே  மீளக்கொண்டு வரக்கோரியும் போராடி ஜெயாவின் ஒப்புக்கொள்ளப்பட்டு  இன்றுவரை வெறும் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு வந்த அரசு ஊழியர்கள் ஒரு புறம் போராட்டத்தில் குதித்து அரசு அலுவலகங்கள் இயங்காமல் செய்து விட்டனர்,

ஏற்கனவே செயல்படா இந்த எடப்பாடி அரசு மக்கள் பெற்று வந்த சான்றுகளை கூட வாங்க முடியா அளவு முடக்கி வைக்கப்பட்டு விட்டது.


ஆனால் இதை எல்லாம் பற்றி இந்த பினாமி அரசுக்கு கவலை இருப்பதாகவே தெரியவில்லை.மக்கள் படும் துயரங்கள்,இன்னல்கள் பற்றி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இது வழமைதான் அதிமுக அரசுக்கு.

ஆனால் இந்தப்போராட்டங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ,போராடுபவர்களை அழைத்து பேசாமல் ,போராட்டக்களத்தில் சென்று குறைகளை கேட்டு அரசு தரப்பு வாதங்களை வைக்காமல் மிக முக்கிய பணியில் எடப்பாடி அழைக்கிறார்.
அது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்  கொண்டாட்டங்கள்தாம்.

மாவட்ட தலை நகரங்கள் தோறும் அவர்கள் கட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100 வயது கொண்டாட்டத்தை மக்கள் வரிப்பணத்தை வரி இறைத்து கொண்டாடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஒவ்வொரு விழாவுக்கும் அரசுப்  பணம் கோடிகளில் செலவு.

 விவசாயிகள் கடனைத்தள்ளுபடி செய்ய இயலாத அதிமுக அரசு,கருவூலத்தில் பணம் இல்லை என்று சொல்லி அரசு ஊழியர்கள்,போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப்பலன்களை தர வக்கில்லாமல் இருக்கும் அதிமுக அரசு ,தனது கட்சித்தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அரசு பணத்தை வரையறை இல்லாமல் வாரி  இறைக்கிறது.
இது நீரோத்தனத்தைவிட மிகக்கொடுமை அல்லவா?

தங்கள் ஊழல் அரசை காப்பாற்றிக்கொள்ள டெல்லிக்கு எடுத்த காவடிக்கெல்லாம் நீட் பிரச்னை,விவசாய பிரச்னை என்று மூலம் பூசி தமிழக மக்களை,விவசாயிகளை,மாணவர்களை ஏமாற்றிய இந்த டெல்லி பாஜக அடிமை அரசுக்கு மனசாட்சி கொஞ்சமும் இல்லை என்பது வேதனை.

ஊழல் செய்து பாஜகவிடம் தனது குடுமியை கொடுத்து விட்டு ஜெயலலிதா காலில் விழுந்ததை அமித் ஷா காலுக்கு நீட்சி செய்த இந்த அடிமை,பினாமி அராசாள்வோருக்கு பகுத்தறிவு,ஆண்மை,சுயமரியாதை என்ற மூன்றுமே இல்லாத போது மனசாட்சி பற்றியோ ,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு இருக்கும் என்று எண்ணி  பேசுவது தவறுதான்.

அதிமுக தலைவர்கள் முன் இருக்கும் பாஜக தந்த வாய்ப்புகள் இரண்டுதான்.
நாற்காலி அல்லது புழல்.

பிழைக்கத்தெரிந்த அரசியல்வியாதிகள் செய்வதை எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் செய்கின்றனர்.

இதற்கு ஆண்மை தேவையில்லை.மனசாட்சி தேவை இல்லை.
ஆளுமை இருந்தால் போதும் என்பதே எடப்பாடி கட்சியினர் கொள்கை.
இதற்காக எத்தனை அனிதாக்களை பலி கொடுத்தாலும் நெஞ்சு குத்திக் கேட்கப்
போவதில்லை.
நெஞ்சம் இல்லை,நேர்மை இல்லை  ஒட்டு ராசா.என்ற எம்ஜிஆர் பாடல்தான் காதில் கேட்கிறது.
(பாடல் வரிகள் தவறோ?)
======================================================================================

ன்று,
செப்டம்பர்-09.
  • உலக முதலுதவி தினம்
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)
  • ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • வட கொரியா குடியரசு தினம்(1948)
  • ======================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?