காலத்தின் கட்டாயம் .

தமிழகத்தில் தங்களது சொல்படி ஆடும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை காப்பாற்ற மத்திய மோடி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ஆளுநர், சபாநாயகர் போன்ற நடுநிலையாக செயல்பட வேண்டியவர்களை தங்களது வசதிக்கேற்ப மோடி அரசு வளைக்கிறது. மோடிஅரசின் இத்தகைய செய்கூலியால் சேதாரப்படுவது ஜனநாயக நெறி முறைகள்தான்.

ஆளுங்கட்சி சட்டமன்ற கொறடாவின் உத்தரவை பின்பற்றத் தவறியதாகக் கூறி தினகரன்அணியைச் சேர்ந்த 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். 

18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு சபாநாயகர் தனபால் கூறும் காரணங்கள் முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது.

 அதிமுகவின் மேல் வைத்திருந்த விசுவாசத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சியை நோக்கி அவர்கள் சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கேற்ப செயல்பட்டதாகவும் தனபால் கூறியுள்ளார். இதை அதிமுகவினர் கூறியிருந்தால் பரவாயில்லை.

ஆனால் நடுநிலையான சபாநாயகர் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது. கொறடாவின் உத்தரவை மீறி சபையில் வாக்களித்தால்தான் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்யமுடியும் என்றுவிதிகள் கூறுவதாக நிபுணர்கள் பலரும் கருத்துதெரிவிக்கும் வேளையில், எதிர்க்கட்சிகளின்பக்கம் இவர்கள் போக முடிவு செய்துவிட்டார்கள் என சபாநாயகர் முக்காலமும் உணர்ந்த ஞானியாக மாறி கூறியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்பின் மரியாதைக்கு உகந்ததாக இல்லை. 

இந்தப் பிரச்சனையில் ஆளுநர் வித்யாசாகர்ராவின் நடவடிக்கையும் உள்நோக்கம் கொண்டதாகவும் மத்திய பாஜக அரசின்அரசியல் சதுரங்க நகர்வுக்கு உதவி செய்வதாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று இவரிடம் மனு கொடுத்தபோதே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. 
ஆனால் இது அவர்களின் உள்கட்சி விவகாரம் என கூறிய ஆளுநர் குதிரை லாயத்தை திறந்து வைத்தார். இதைப் பயன்படுத்தி ஒரு குதிரை எதிரணிக்கு பாய்ந்தோடியது. 

எதிர்பார்த்த அளவுக்கு குதிரைகள் இடமாற்றம் நடைபெறாததால் தகுதிநீக்கம் என்ற அஸ்திரம் சபாநாயகர் மூலம் ஏவப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நடந்த முயற்சியை நீதிமன்றம் தடை செய்தது.
இல்லையென்றால் எடப்பாடி அரசை ஆதரிக்காத அனைவரும் தகுதிநீக்கம் என்ற அளவுக்கு போயிருப்பார்கள். 

எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட மறுத்த ஆளுநர் 18 பேர் தகுதிநீக்கத்திற்கு பிறகு அதாவது செயற்கையான, ஜனநாயகவிரோதமான பெரும்பான்மையை உருவாக்கிய பிறகு தமிழகத்திற்கு பறந்து வந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 

குடியரசுத் தலைவரும் கூட இந்த விசயத்தில் தன்னுடைய கடமையை செய்ததாக தெரியவில்லை. மொத்தத்தில் தமிழக அரசு ,அதிமுக வினர் டெல்லி தாளத்துக்கேற்ப ஆளுநர் ஆட்டிவைக்கும் பொம்மலாட்டமாகி விட்டது.

ஜெயலலிதா காலத்தில் தான் கார் டயரை கும்பிடும் முதுகெழுமில்லா கூட்டம் ஜெயலலிதா மறைவுக்குப்பின் கொஞ்சசமாவது முதுகு நிமிருதுவார்கள் என்று பார்த்தால் முன் போன்றே தங்கள் கொள்ளைக்கு ஒத்துழைக்கும் ,பாதுகாக்கும் யாராயினும் காலை நக்க காலம் பூராவும் தயார் என்ற முதுகெலும்பில்லா ஊர்வனவாகவே மாறி விட்டார்கள் .

இவர்களை பார்த்து சகித்துக்கொள்வதுதான் சிறிது நாட்களுக்கு தமிழ் நாட்டு மக்களுக்கு காலத்தின் கட்டாயமாகி விட்டது .வேறு வழி ?
                                                                                                                                                                       நன்றி:தீக்கதிர்,
=======================================================================================================================================

ன்று,
 செப்டம்பர் -20
  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிட்டது(1847)
  • பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)
  • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
========================================================================================
சர்க்கரை நோயின் பாதிப்புகள் ஆபத்தாக இருக்கும் என்பதால் இன்று இன்சுலின் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது.
தேவை என்று வரும் பொழுது அனைவரும் இதனை முறையாய் கற்றுக் கொண்டு விடுகின்றனர். என்றாலும் சில நேரங்களில் முறையான அளவு இல்லாமல் கூடுதலாக எடுத்துக் கொள்வதால் ஆபத்தான நிலைக்கு கொண்டு விட்டு விடுகின்றது.
* சாப்பிடும் முன் அவர்கள் சர்க்கரையின் அளவு
* அவர்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைடிரேட்டின் அளவு
* அவர்களின் அன்றாட உழைப்பின் அளவு
இவைகளைக் கொண்டே மருத்துவர் ஒருவரின் இன்சுலின் தேவையினை முடிவு செய்கின்றனர்.
இன்சுலின் வேலை சர்க்கரையை எரித்து சக்தியாக மாற்றுவதாகும். தவறுதலாக அதிக இன்சுலின் எடுத்துக் கொண்டால் திடீரென சர்க்கரையின் அளவு அதிகம் ரத்தத்தில் குறைந்து விடும்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைவது மிகுந்த ஆபத்தில் கொண்டு விடும். ஆகவே இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் சிறு சந்தேகம் கூட இல்லாது இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறையினை அறிவது மிக மிக அவசியம்.
இன்சுலின் அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்.
* குழப்பம்
* எரிச்சல்
* படபடப்பு
* உடல் நடுக்கம்
* மயக்கம்
* அதிக இருதய துடிப்பு
* பார்வை கோளாறு
* அதிக வியர்வை
இது[போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரி சோதிக்க வேண்டும். மருத்துவர் உதவியும் மிக மிக அவசியம்.
இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள் அதற்கான உரிய நேரத்தில் முறையான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
==========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?