புதிய இந்தியா பிறந்ததுதான்..ஆனால்..?


பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம்செய்யும் அதிகாரத்தை மத்திய அரசேமீண்டும் எடுத்துக் கொள்ள உள்ளதாககாட்சி ஊடகங்களில் செய்திகள் வெளி யானதையடுத்து, புதன்கிழமையன்று மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களின் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்தன.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கு 6.30 சதவிகிதம் சரிந்து 500.20 ரூபாயில் முடிவடைந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கு 5.12 சதவிகிதம் சரிந்து 457.50 ரூபாயில் முடிவடைந்தது. 
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு 4.36 சதவிகிதம் சரிந்து 415.95 ரூபாயானது.
இதனால் பதற்றத்திற்கு உள்ளான அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயிக்கும் விவ காரத்தில் தலையிடும் எண்ணமெல்லாம் மத்திய அரசுக்கு துளியும் கிடையாது என்று அறிவித்துள்ளார்.


சர்வதேச விலைக்கு ஏற்ப, தினசரிபெட்ரோலிய பொருட்களின் விலையைமாற்றியமைப்பதுதான் வாடிக்கை யாளர்களுக்கு நல்லது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக புயலின் தாக்கம் இருப்பதால் பெட்ரோலிய உற்பத்தி 13 சதவிகிதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது;

 கூடிய விரைவில் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்உரிமையை எண்ணெய் நிறுவனங் களுக்கே வழங்கிய மத்திய ஆட்சி யாளர்கள், சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை ஏற்ற- இறக்கத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங் களே விலையை நிர்ணயித்துக் கொள்ள லாம் என்று கூறிவிட்டனர்.
அதன்படி அவ்வப்போது பெட்ரோல் - டீசல் விலையை அறிவித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், ஒரு கட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைப்பதை வழக்கமாக்கினர். 
பின்னர், அதையும் கைவிட்டு கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர்.
இந்த தினசரி விலை நிர்ணயம் முறை அமலுக்கு வந்ததிலிருந்து மட்டும், இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 51 காசு அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஒரு லிட்டர்பெட்ரோலின் விலை 65 ரூபாய் 46 காசாக இருந்தது.
 ஆனால் அது ஆகஸ்ட்1-ஆம் தேதி 2 ரூபாய் 25 காசுகளாக உயர்ந்து67 ரூபாய் 71 காசாக விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் பெட்ரோல் விலைகணிசமாக அதிகரித்துக் கொண்டே வந்தது. 
செப்டம்பர் 1-ஆம் தேதி 71 ரூபாய் 78 காசாக இருந்த பெட்ரோலின் விலை இன்று 72 ரூபாய் 97 காசாக அதிகரித்துள்ளது. 

கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோலின் விலை 7 ரூபாய் 51 காசுகளாக அதிகரித்துள்ளது.

சில நகரங்களில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல்விலை உயர்ந்திருக்கிறது. 


உதாரண த்துக்கு மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல்விலை ரூ. 79.48 ஆக இருக்கிறது. 
கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு, இப்போதுதான் மிகக்கடுமையான விலை உயர்வு ஏற்பட்டு ள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சொல்லப்போனால், 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 85 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 
ஆனால், 190 சதவிகிதம் அளவிற்கு பெட்ரோல் - டீசல்விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசானது, பெட்ரோல் மீதான கலால் வரியை மட்டும் 126 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடியை மக்களிட மிருந்து மறைமுகமாக பிடுங்கி வருகிறது. 
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர் என்ற அளவிற்கு இருந்தது. 
அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலைரூ. 73 என்ற அளவிலேயே இருந்தது.தற்போது, பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 53.06 டாலராக வீழ்ச்சி அடைந்து ள்ளது. ஆனால், இப்போதும் பெட்ரோல் விலை ரூ. 73 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை என்று பார்த்தாமானால், 26 ரூபாய் 65 காசுகள்தான். கச்சா எண்ணெய் மீதான சுங்கவரியையும் சேர்த்துத்தான் இந்த விலை. 
ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 72 ரூபாய் 97 காசுகளாக விற்கப்படுகிறது என்றால், அடக்கவிலையை விட 46 ரூபாய் 32 காசுகள் (190 சதவிகிதம்) அதிகமாகும்.அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை ரூ. 26-தான். 
ஆனால் 35 ரூபாய் 87 காசுகள் கூடுதலாக சேர்த்து, 61 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இந்த விலை மேலும் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறதே தவிர குறைவதற்கான எந்த சூழலும் இல்லை. அதனால்தான் விலையை கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து மத்திய பாஜக அரசு விலகிச் செல்கிறது.
பெட்ரோல், டீசலுக்கு, அடக்க விலையை விட பல மடங்கு லாபத்தையும் வரியையும் சுமத்துவது பற்றி உறுத்தல்இல்லாமல் இருக்கிறது. 
இந்தியாவின் எளிய மக்களுக்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின்போது கூட பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காமல், வரிகளை உயர்த்தி வஞ்சிக்கிறது.
கலால் வரி உயர்வால் 2014 - 2015-இல் ரூ. 99 ஆயிரம் கோடி மத்திய அரசுக்குகூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது.
2016- 2017-இல் இது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி கடந்த 3 ஆண்டுகளில், பெட்ரோல்- டீசலின் விலை உயர்வு மூலம் ஏழை, நடுத்தர இந்தியர்களிடமிருந்து சுருட்டிய ரூ. 2 லட்சம் கோடியை வைத்துத்தான், பெரும் பணக்காரர்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகள் வாங்கிய ரூ. 2 லட்சம் கோடியை மோடி அரசு தள்ளுபடி செய்திருக்கிறது.


நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு என்று ஜிஎஸ்டி-யை மோடி அரசு கொண்டு வந்தது. அப்போது, பெட்ரோலியப் பொருட்களை அந்த வரி விதிப்புக்குள் கொண்டுவராதது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. 

ஆனால், பெட்ரோலியப் பொருட்களை சரக்குமற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று கூறி விட்டது.ஆனால், பெட்ரோலியப் பொருட் களின் விலை 200 சதவிகிதத்திற்கு உயர்ந்துள்ள நிலையில், அவற்றை திடீரென ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவருவது பற்றி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.

மத்திய அரசின் கலால் வரியே 126 சதவிகிதம் இருக்கும்போது, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியை அதிக அளவில் உயர்த்துவதே பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று பழியைத் தூக்கிப் போட்டுள்ள தர்மேந்திரபிரதான், இதுவே பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வரசரியான நேரம் என்று அடித்துவிட்டுள்ளார்.

மக்களை கசக்கி பிழிந்து தனது லாபத்தை அதிகரித்துக்கொள்வது பன்னாட்டு,பெரும் தொழிலதிபர்களுக்கு வேண்டுமானால் வாடிக்கையாக இருக்கலாம்.
ஆனால் ஒரு அரசே தன்னை நம்பி வாக்களித்த மக்களை கொடும் வரிகளை விதித்து பண முதலைகள்,தொழிலதிபர்களை விட அதிகமாக  லாபம் சம்பாதிப்பது எந்த வகையில் மக்களாட்சி ஆகும்.
இது போல் செய்து விட்டு புதிய இந்தியா பிறக்க வைப்பதாக கதை விடுவது வேடிக்கை.
புதிய இந்தியா பிறந்துள்ளதுதான். ஆனால் அது இந்திய  மக்களுக்கானது அல்ல.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும்,அம்பானி,அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கும் மட்டும்தான்.
அதிலும் பெரும் கொடுமை விவசாயிகளுக்கு 1000 ரூபாய கடனில் ரூ 1/-மட்டும் தள்ளுபடி .கன தனவான்களுக்கோ 4லட்சம் கோடிகள் வரி தள்ளுபடி.
புதிய இந்தியா நன்கு  விளங்கும்.!

 ======================================================================================

ன்று,
செப்டம்பர்-15.
அறிஞர் அண்ணா

  • உலக  மக்களாட்சி தினம்
  • இந்திய பொறியாளர்கள் தினம்
  • தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு தினம்(1950)
  • அறிஞர் அண்ணா பிறந்த தினம்(1909)
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
=======================================================================================



ஏழைகளை ஒழிப்பது பாஜகவின் "தெர்மோகோல் தியரி."?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?