நீட் டை ஒழிக்க சரியான வழி.

‘‘நீட் தேர்வு பிரச்சனையில் நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களை தெருவில் நிறுத்தி விட்டோம்.
அங்கே நிற்கும் பிள்ளைகள் அனைவரும் விளையும் பயிர்கள். இந்த பிரச்சனையில் அவர்கள் போராட வேண்டியஅவசியம் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. 

நாம், நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பைஎங்கோ தவற விட்டு விட்டோம் என்பதுதான் பாமரத்தனமான என்னுடைய கருத்து.நான் எடுத்து வைக்கும் கருத்து விமர்சனத்துக்கு உரியது.
நல்ல விமர்சனமாக இருந்தால் நான் சந்தோஷப்படுவேன். 

கடுமையான விமர்சனமாக இருந்தால் உங்களுக்கு தெரிந்தயோசனைகளை சொல்லுங்கள் என்று உங்களிடம் கேட்பேன்.

நாம் எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.எனக்கு தோன்றும் கருத்து என்னவென்றால், கல்வியையும் கல்வி திட்டங்களையும் வகுக்கும் பொறுப்பு மாநிலங்கள்கையில் இருக்க வேண்டும் என்பதுதான்.


பன்முகம், பல மொழிகள் ,பல கலாசார ம் என்று இருக்கும் இந்த நாட்டில் மாநில அரசுகளிடம்தான் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
முன்பு அப்படித்தான் இருந்தது என்று சில பெரியவர்கள் சொன்னார்கள். ஒரே பாடத்திட்டம்,தேர்வு என்பது சரியானதாக அமையாது.

சென்னை,கோவை,மதுரையில் படிக்கும் மாணவர்களுடன் சிறிய தமிழக கிராமங்களில் படிக்கும் கிராமப்புற மாணவர்களே போட்டியிட இயலா நிலை இருக்கையில் பலமொழி .இனம்,கலாசாரம் உடைய இந்தியா முழுக்க உள்ள பெருநகரங்களில் உள்ள மாணவர்கள்தான் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.இதனால் கிராமப்புற,பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்வி எட்டாக்கனி.

எங்கே அந்த உரிமையை தவற விட்டோம் என்று கேட்டபோது எமர்ஜென்சி சமயத்தில் அதை மையத்தில்கொண்டு போய் வைத்துக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். 

அதன்பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்படவில்லை.மாநிலங்கள் கல்வி திட்டங்களை வகுக்கும் அந்தஸ்தை, பொறுப்பை, பலத்தை, சக்தியை தங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடையை ஆசை. 


பக்கத்து மாநிலங்களில் இருக்கிறவர்கள் ‘நீட்’டை ஏற்றுக்கொண்டு விட்டார்களே நீங்கள் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்கலாம்.

அவர்களெல்லாம் அதற்கு தேவையான முன் ஜாக்கிரதையில் தயார் நிலையில் இருந்தார்கள். 
அதனால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. 

இங்கே அதற்கானஎந்த ஏற்பாடுகளையும் நாம் செய்யவில்லை. காரணம் நம் அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவதாக கடைசிவரை  நம்பவைத்து அரசியல் செய்ததால்தான்.

நாம் என்பதை அரசு என்று சொல்லி மறுபடியும் அரசியல்வாதிகளைத்தான் திட்ட வேண்டியது இருக்கும்.
நான் அரசு என்று சொல்வது நம்மையும் சேர்த்துதான். 

இந்தகுரலை இன்னும் முன்பாகவே எழுப்பி இருக்க வேண்டும். 
இந்த பிரச்சனையில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோம்.’’
                                                                                                                                                                  - பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

=======================================================================================
"தமிழக சாரண - சாரணியர் இயக்க தலைவர் பதவியை, ராஜாவிற்குதாரைவார்க்க, முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் செங்கோட்டையனும் கூட்டு சதி செய்து வருகின்றனர். 
நீண்டநாட்களாக, தேர்தல் நடைபெறாமல் இருந்த, சாரண - சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு, செப்., 16ல், தேர்தல் நடக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள்அனைவரும் ஓட்டளித்து, தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். 

இந்த பதவிக்கு, ராஜா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 
இதற்காகவே, சில தினங்களுக்கு முன், முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார். 

ராஜாவிற்கு எதிராக, முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர், மணிபோட்டியிட விரும்புகிறார் என, தெரிந்ததும், அவர் ஆளுங்கட்சி சார்பில் மிரட்டப்பட்டு உள்ளார். "
                                                                                                                                              -ஸ்டாலின்.
=====================================================================================
ன்று,
செப்டம்பர்-12.
  • ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)
  • சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
  • ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
  • துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)
  • ஹாங்காங்கில் ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)
=====================================================================================

சாமியார்களில் பலே சாமியார்கள்.
பஞ்சமா பாதகங்களை செய்பவர்கள் யார் என்றால், கொஞ்சமும் யோசிக்காமல் அவர்கள் சாமியார்கள் தான் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

காடுகள் அழிப்பு, கற்பழிப்பு, மோசடி, போதை மருந்து விற்பனை,கூலிப்படை கொலை என அத்தனை யிலும் கொடிகட்டப் பறப்பவர்களாக- அதன்மூலம் பெருந்தொழிலதிபர்களாக சாமியார்கள் இன்று மாறியிருக்கின்றனர். 

அதில் ஆசா ராம் பாபு, குர்மீத் ராம் சிங் போன்ற ஒரு சிலர் மாட்டிக் கொண்டி ருக்கிறார்கள். 
பலர், ஆட்சியாளர்களின் துணையுடன் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், குர்மீத் ராம், ஆசா ராம், அசீமானந்தா, ராதே மா உட்பட 14பேரை போலிச்சாமியார்கள் என்று ‘அகில பாரதிய அக்காரா பரிஷத்’ என்ற சாமியார்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனுக்காகவே இந்த போலிச் சாமியார்களின் பட்டியலை வெளியிடுவதாக இந்த அமைப்பு சப்-டைட்டிலும் போட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சாமியார்கள் சிறைக்கு செல்வது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அகிலபாரதிய அக்காரா பரிஷத் என்ற அமைப்பில் இடம்பெற்றுள்ள சாமி யார்கள், அவசர அவசரமாக அலகாபாத்தில்கூடி ஆலோசித்தனர். 

மஹந்த் நரேந்திர கிரி தலைமையில் 13 அக்காராக்களைச் சேர்ந்த 26 சாமியார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அதன்முடிவில் 14 போலிச் சாமியார்களின் பட்டியலை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

போலிச் சாமியார்களின் பட்டியலில் குர்மீத் ராம் பெயர் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. அடுத்து பாலியல் வல்லுறவு உட்பட பல வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் 76 வயதான ஆசா ராம் பாபுவின் பெயர் உள்ளது. 

பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் ஆசிரமம் நடத்தி வரும், அசுமல் சிருமாளனி, அவரது மகனும் பல்வேறு கொலை வழக்குகளும் சிக்கியுள்ள வருமான நாராயண் ஆகியோரின் பெயர் களும் போலிகள் பட்டியலில் உள்ளது.


சாய் ராதே மா என அழைக்கப்படும் சுக்வீந்த்ர் கவுர் எனும் பெண் சாமியார், வங்கிக் கடன், அடுக்குமாடி வீடுகள் மோசடி வழக்குகளை கொண்டுள்ள நொய்டாவைச் சேர்ந்த ‘பில்டர் பாபா சச்சின் தத்தா’ எனும் சச்சினாந்தா, 
மகாராட்ஷ்டிராவின் அஜ்மீர் தர்ஹா மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புகள் வழக்கில் சிக்கிஅப்ரூவரான அசீமானந்தா, உத்தரப்பிரதேசத்தின் பிரஹஸ்பதி கிரி, ஹரி யானாவின் ராம் பால், மகாராஷ்டிராவின் இச்சாதரி பீமானந்த், ஜார்க்கண்டின் நிர்மல் பாபா, தில்லியைச் சேர்ந்த ஓம்ஜி மற்றும் ஆச்சார்யா குஷ்முனி ஆகியோரும் போலிச் சாமியார்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

‘நாங்கள் அறிவித்துள்ள 14 போலிச் சாமியார்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்; இவர்களுக்கு கும்ப மேளா, மஹாகும்பமேளா மற்றும் ஆன்மிகக் கூட்டங்களில் மத்திய - மாநில அரசுகள் எந்தவிதமான அங்கீகாரமும் அளிக்கக் கூடாது; 

அவர்களுக்கு மற்ற சாமியார்களை போல இடங்களையும் அரசுகள் ஒதுக்கக் கூடாது’ என்று அக்காரா பரிஷத் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
=========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?