ஆ ...சாமியே சரணம்.
ஹரியானா மாநிலம், சிர்சாவைச் சேர்ந்த, சர்ச்சைக்குரிய, 'செக்ஸ்' சாமியார், குர்மீத் ராம் ரஹீம், சொகுசு பங்களாவின் அடியில், எலும்புக் கூடுகள் புதைக்கப்பட்டது, சோதனையில் தெரிய வந்துள்ளது.
அவனது சொகுசு அறையில் இருந்து, சாத்வி எனப்படும், பெண் துறவியர் வசித்த வீட்டிற்கு, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தோண்டத் தோண்ட, 'பகீர்' விஷயங்கள் வெளிவருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிர்சா நகரில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங், இரண்டு பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான , பா.ஜ., அரசு ராமராகிம் சாமியாருக்கு ஆதரவாக இருந்து அவ்வழக்குகளை விசாரிக்கவிடாம செய்து வந்தது.
அந்த காமசாமியார் ஹரியானாவில் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தந்தார்.அதன் மூலம் 28 சட்டமன்றத் தொகுதிகளில் சாமியாரின் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.
அதற்கு கைமாறாக அச் சாமியார் மீதான வழக்குகளை ரகசியமாக திரும்பப் பெறுவதாக பாஜக அமித்ஷா ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் இந்த வழக்கில், ராம் ரஹீமுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், சமீபத்தில், தீர்ப்பு வழங்கிவிட்டது.
இதை தொடர்ந்து, அவன் ஆதரவாளர்கள்,ஹரியானா பாஜக அரசு உதவியுடன் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர்.
ரோதக்கில் உள்ள சிறையில், அவன் அடைக்கப்பட்டு உள்ளான்.இந்நிலையில், ஹரியானா மாநிலம், சிர்சாவில், ராம் ரஹீமுக்கு சொந்தமான, 800 ஏக்கர் பரப்பளவிலான, பிரமாண்ட ஆசிரமத்தில், மாநில உயர் நீதிமன்ற அனுமதியுடன், நேற்று முன்தினம், சோதனை துவங்கியது.இரண்டாவது நாளாக, நேற்றும் சோதனை நடந்தது.
துணை ராணுவப்படை உதவியுடன், போலீஸ் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த, பல்வேறு துறை அதிகாரிகள், இந்த சோதனையில் ஈடுபட்டனர்.ஆசிரமத்திற்குள், நவீன வசதிகளுடன், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை உள்ளன.
சோதனையில், பதிவு செய்யப்படாத சொகுசு கார், 'டிவி' நேரடி ஒளிபரப்புக்கு பயன்படும் வேன், செல்லாத ரூபாய் நோட்டுகள், வாக்கி - டாக்கி, கம்ப்யூட்டர் உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.ஆசிரமத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.
ஆசிரமத்தில், சட்ட விரோதமாக, வெடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. 85 பெட்டிகள் நிறைய, வெடி மருந்து பொருட்களும் சிக்கின.
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை, பதுக்கி வைக்கும் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்து, வெடி மருந்து தொழிற்சாலைக்கு, 'சீல்' வைத்தனர்.ராம் ரஹீம் தங்கியிருந்த சொகுசு அறையின் கீழ், குவியல் குவியலாக, எலும்புக் கூடுகள் புதைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இவை, தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட உள்ளன.
அதன் பின்னரே, மனித எலும்புகளா என்பது தெரிய வரும்.ரஹீமின் சொகுசு பங்களாவில் இருந்து, இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு சுரங்கப்பாதை, அங்கிருந்து, பெண் துறவியர் தங்கியிருந்த வீட்டிற்கு செல்கிறது; மற்றொன்று, 5 கி.மீ., தொலைவு சென்று, ஆசிரமத்திற்கு வெளியே, சேறு நிறைந்த பகுதியில் நிறைவு பெறுகிறது.ராம் ரஹீமின் ஆசிரமத்தில், தோண்டத் தோண்ட, 'பகீர்' தகவல்கள் அம்பலமாகி உள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராம் ரஹீம் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டால் அதை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பிருந்த்தால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன
சிர்சா முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ராம் ரஹீம் ஆசிரமத்தில் நடந்த சோதனை முழுவதும், 'வீடியோ' படம் எடுக்கப்பட்டது' பத்திரிகையாளர்கள் உட்பட பிறர், பல கி.மீ., துாரத்திற்கு முன், தடுத்து நிறுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், தீயணைப்பு படையினர், தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
அந்த பகுதியில், 'மொபைல் போன்' சேவையும் துண்டிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம், சிர்சாவில் உள்ள, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் ஆசிரமத்தில் இருந்து, உ.பி., மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு, 14 சடலங்கள், தானமாக வழங்கப்பட்டு உள்ளன.
மருத்துவக் கல்லுாரிகள், இறப்பு சான்றிதழ்களுடன் மட்டுமே, உடல்களை, வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது;.
ஆனால், ஆசிரமத்தில் இருந்து இறப்பு சான்றிதழ் ஏதுமின்றி, தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு உடல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
அந்த உடல்களுக்குரியவர்கள் குறித்த விபரங்களை, அவர்கள் எப்படி இறந்தனர்.இயற்கையான மரணமா,அவர்கள் உறவினர்கள் விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.
- கமல்ஹாசன்.
உண்மையில் நீட் பிரச்சனையின் ஆணி வேர் இதுதான்.
======================================================================================
செப்டம்பர் -10.
55 பண்டோரா |
- உலக தற்கொலை தடுப்பு தினம்
- 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)
- சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
- =======================================================================================
திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் நீட் எதிர்ப்பு பொதுக் கூட்டத்துக்கு அதே இடத்தில் மாபெரும் கூட்டத்தில் பதில் சொல்லும் அமைச்சர் பொன்னார் .