21.12.2012 உலக அழிவு .12ராசிகளுக்கும் பரிகாரம்
இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த உலக அழிவு பரபரப்பை நமக்கு தெரிந்த அளவு சின்ன அலசல் .
கடந்த சில நாட்களாக, மாயன் நாள்காட்டி
21.12.2012 ஆம் தேதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள்
காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் ,சில பத்திரிகைகளும் மக்களை
பயமுறுத்தி வருகின்றன.
இதில் செய்திகளை முந்தித் தரும் குழும மாலை தினசரி உலக அழிவில் பாதுகாக்க 12 ராசிகளுக்கும் பரிகாரம் செய்வது எப்படி? என்று ஜோதிடம் வெளியிட்டு முரசறைந்து மக்களின் அப்பாவித்தனத்தை வைத்து காசு பார்த்துள்ளது.உலகம் அழியும் போது என்னவோ இவர்கள் நேரடி செய்திகளை வெளியிடப போவதுபோல் நினைப்பு.
பத்தில் ஒருவர் உலகம் அழியப் போவதை நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.
இதில் செய்திகளை முந்தித் தரும் குழும மாலை தினசரி உலக அழிவில் பாதுகாக்க 12 ராசிகளுக்கும் பரிகாரம் செய்வது எப்படி? என்று ஜோதிடம் வெளியிட்டு முரசறைந்து மக்களின் அப்பாவித்தனத்தை வைத்து காசு பார்த்துள்ளது.உலகம் அழியும் போது என்னவோ இவர்கள் நேரடி செய்திகளை வெளியிடப போவதுபோல் நினைப்பு.
பத்தில் ஒருவர் உலகம் அழியப் போவதை நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.
மாயா 2012 என்ற குறிச்
சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர்
தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999, என இடையிடையே சில ஆண்டுகளில் இப்படி உலக அழிவு பேச்சு கிளம்பியது.
இப்போது உண்டான பயத்தால்
இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகல்-வயதானோர் மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இந்த உலக அழிவு பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்திவருகிறது .
சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இந்த உலக அழிவு பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்திவருகிறது .
ஆனால் இந்த பயம் உலக நாடுகளில் அமெரிக்காவில் தான் திட்டமிட்டு அதிகரிக்கப் படுவதாக சிலர் ஐயம் எழுப்பியுள்ளனர்.அதற்கு கீழ் நோக்கி
விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதார கவலைகள் அதற்கு எதிரான
போராட்டங்கலில் மக்கள் தங்கள் மனதை திருப்பி அரசுக்கு எதிராக மாறி விடக்கூடாது என்பதற்காக உலக அழிவு பயம் பரப்பப்படுகிறதோ -
மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களை உலக அளவில் சிலர் எழுப்பியுள்ளனர்.
இந்த உலக அழிவு பயத்தில் சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
இந்தியாவில் யேசு ஜீவிக்கிறார் போன்ற
கிறீஸ்தவ அமைப்புக்கள் மாயன் உலக அழிவு வதந்தியைப் பயன்படுத்தி தமது
குழுக்களுக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
"மாயன் கலண்டரின் அடிப்படையில் 21-12-2012க்குப்பின் புதிய
சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயன் வாரிசுகள் எனக்கூறப்படும் குழுவின்
தலைவர் கூறுகிறார். மாயன் கணக்குகளில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை
என்று அவர் அடித்து சொல்கிறார் .இது திட்டமிட்ட வதந்தி என்றும் அவர் கூறிவருகிறார்.
அமெரிக்காவின் மாயன் அப்படி என்றால் இந்தியாவில் உள்ள புராண இந்து காலண்டரின்படி கலியுகம்
முடிய இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன.
கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய
யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக வரும் என்று தான்
கூறப்பட்டுள்ளது.
ஒவ்வோர்
ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப்
போலத்தான்.
இப்போதைக்கு மாயனின் காலண்டர் ஒன்று முடிகிறது.புதிய காலண்டர் தனது புதிய 5200 ஆண்டுகள் பயணத்தை ஆரம்பிக்கப் போகிறது.இந்த உலக அழிவு பயம் இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு தேவை இல்லை.உலகம் சுருங்கி அழிய சூரியன் தனது தீக்கனலை -சூடை இழக்க ஆரம்பிக்கும் போதுதான் துவக்கும் .
மாயன் காலண்டர் முடிந்தால் உலகம் அழியும் என்பதை ஒரு வாதமாக எடுத்துக்கொண்டாலும் மாயன் காலண்டர் ஆரம்பமான பின்தான் உலகம் உண்டானதாக ஒப்புக்கொள்கிறீர்களா?