500 கோடி

நம் இந்தியாவின் அடுத்து வரும் மன்மோகன் சிங் ஆட்சியின் நிர்வாக இழப்பு வைர ஏற்றுமதி இழப்புதான் .
வைர ஏற்றுமதி செய்வதில் ரூ.500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 
சில வைர ஏற்றுமதியாளர்கள் ஹாங்காங்கிற்கு வைர ஏற்றுமதி செய்வதற்காக அரசு வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாகவும், அந்த விற்பனையாளர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை எனவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. 
அந்த வியாபாரிகள் யார் என்று தெரியாமலா இவ்வளவு தொகைகளை வாரி கடனாக கொடுத்துள்ளனர்.
கல்விக்கடன் கேட்டு வங்கியை 
ஆனால் வங்கிகள் தனது முன்பணத்தை இழந்துள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பீடுகளை சரிசெய்ய பொதுத்துறை வங்கிகள், அரசு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியான இந்திய ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகத்தை அனுகி உள்ளன. சம்பந்தப்பட்ட 13 அரசு வங்கிகளுக்கும் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் 200 சதவீதம் வரை இழப்பீடு வழங்கி உள்ளன. வங்கிகளின் இந்த நிலைப்பாடு அவற்றின் தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு துறை வங்கிகளின் தணிக்கை அறிக்கையை நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்த சிஏஜி இதனை அம்பலபடுத்தி உள்ளது.
வாடிக்கையாளர் குறித்த விபரங்களை முறையாகவும், முழுமையாகவும் பெறாமல் வங்கிகள் தங்களால் வழங்க கூடி அளவை மீறி கடன் வழங்கியதாலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் தெரிவித்துள்ளார். 
அரசு வங்கிகள் செய்த அதே தவறை அரசு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகளும் எவ்வாறு செய்தது என சிஏஜி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பட்டியலையும் வங்கிகள் சமர்ப்பிக்காதது ஏன் எனவும் வினா எழுப்பி உள்ளது. இழப்பீடு கோறும் போது இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தையும் சமர்ப்பிக்க வலியுறுத்த தவறி உள்ளது. 29 கூற்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட தணிக்கை ஆய்வில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 26 வங்கிகளில் 9 வங்கிகள் வைர ஏற்றுமதிக்காக மட்டும் கடன் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. வங்கிகள் 4 ஏற்றுமதியாளர்களுக்கு 477 தவறையாக ரூ.519 கோடியை வழங்கி உள்ளன. இதில் ரூ.278 கோடி மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________ 


கமல், நடித்து, இயக்கி, பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்துள்ளனர். ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது. நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசை வைத்துள்ளார்



இந்நிலையில், விஸ்வரூபம் ரிலீசாகும் அதேநாளில் 8 மணிநேரத்திற்கு முன்பாக டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும் என்றும், தியேட்டர்களுக்கு போகாதவர்களையும் படம் பார்க்க வைக்க முடியும் என்றும் கமல் கருதுகிறார். இதற்காக பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடன் பெரும் தொகைக்கு கமல் பேசியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளையும் கமல் சந்தித்து பேசி அவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார். திரையுலக சங்கத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டி இதுபற்றி முடிவு செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் தியேட்டர் உரிமையாளர்கள் இதனை எதிர்த்துள்ளனர். கமலை பின்பற்றி எல்லா படங்களையும் டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப முடிவெடுத்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?