கருகியவர்கள்

பாகிஸ்தான்  தென்பகுதியில் சீதா பகுதியில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் ஒருவர் இரவு வேளை  தங்கியிருந்தார் .
மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
suran
எரிக்கப்பட்டவர் 
அப்போது அங்கு இரவில் தங்கியவர் தான்  குரானை எரித்திருக்க வேண்டும் எனக் கருதிய கிராமவாசிகள் ஆத்திரமறைந்து  அவரைத் தாக்கினர் .அந்த நபர் எரிந்த குரானைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று புலம்பியுள்ளார்.அதானால் அவரை போலிசாரிடம் ஒப்படைத்த னர்.

ஆனால் ஒரு சில மணி நேரம் கழித்து  இருநூறு பேர் அடங்கிய பெரிய கும்பல் ஒன்று காவல்நிலையத்துக்குள் வெறியுடன்புகுந்தது .அவர்கள் போலீசாரிடமிருந்து  அந்நபரை கைப்பற்றி வெளியில் இழுத்துப் போட்டு அவரைக் தீவைத்துக் கொளுத்தினர்.அந்த நபர் தீ உடலில் எரியும் நிலையிலும் தான் அந்த குரானை எரிக்கவில்லை.தனக்கு ஒன்றும் தெரியாது என கதறியவாரே தீயில் கருகி இறந்துள்ளார்.
இத்தாக்குதல் அங்கு பரபரப்பை உண்டாக்கியது.அவரை தீவைத்துக் கொளுத்திய கும்பலை சேர்ந்த  முப்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
suran
கவனக்குறைவாக இருந்தார்கள் என்பதற்காக ஏழுபோலீசார்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குரானை அவமதிப்பது 'மதநிந்தனை" என்று  பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றம்.
 இதுவரை மிகச் சிலருக்கே அங்கு இக்குற்றச்சாட்டுக்காக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
suran
குரான்  எரிக்கப்பட்ட பள்ளிவாசல் 
ஆனால் மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுக பாகிஸ்தானில் அதிகம்.முன்பு ஒருபள்ளி  சிறுமியின் பையில் கிழிந்த குரான் இருந்ததாக அந்த சிறுமியை சிறையில் அடைத்து விசாரித்தனர்.ஆனால் அந்த சிறுமி பள்ளி சென்று படிப்பதை விரும்பாத அடிப்படைவாதிகள்தான் இந்த பொய் குற்றசாட்டை கூறியதாக கண்டுபிடிக்கப்பட்டது.அந்த சிறுமி விடுவிக்கப்பட்டார்.
குரானை கிழித்து  அந்த சிறுமியின் பையில் வைத்த அடிப்படைவாதிகள் குரானை கிழித்ததற்கு இதுவரை மத நிந்தனை க்கான தண்டனை வழங்கப்படவில்லை.
---------------------------------------------------------------------------------------------


அசாஞ்சே  கிருஸ்துமஸ் வாழ்த்து. 

லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்தபடி  விக்கி லீக்ஸ்  ஜூலியன் அசாஞ்சே கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
suran
அப்போது தனது விக்கிலீக்ஸ் மூலம்  2013ம் ஆண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.



------------------------------------------------------------------------
 
போரில் செத்தவர்களை விட 
----------------------------------
அமரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேரடியாகவும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது ஆக்கிரமிப்பு படைகளை நிறுத்தியுள்ளது.
 அங்கெல்லாம் மக்கள் தமது விடுதலைக்காக உலகின் பலம் மிக்க அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடுகின்றனர்.
suran
 . இப்போது 2012 ஆம் ஆண்டு அமரிக்க இராணுவத்தின் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அச்சத்தை தரும் அளவு உள்ளது. 
2012 இல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட அமரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை 303 ஆகும் எனக் கணிப்பிடுகிறார்கள். 
suran
ஏகபோக வியாபார நிறுவனங்களுக்காகவும் அவற்றின் சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்காகவும் நடத்தப்படும் அமரிக்கப் போரின் கோரம் தற்கொலைக்கான அடிப்படைக் காரணமாகும் எனக் கூறப்படுகிறது. 
2012 இல் தற்கொலை செய்துகொண்ட இராணுவத்தின் தொகை போரில் இறந்தவர்களின் தொகையிலும் அதிகம்.
அமெரிக்க போர் வீரர்கள் சொந்த நாட்டை விட்டு வேண்டா விருந்தாளிகளாக அடுத்த நாட்டில் மக்கள் வெறுப்புக்கிடையில் பணியாற்றுவதும் ,குடும்பத்தை விட்டு ஆண்டு கணக்கில் இருப்பதும்  படை வீரர்களுக்கு மிக மன அழுத்தத்தை தருகிறதாம். அதன் விளைவுதான் இந்த தற்கொலைகள்.
suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?