புதன், 12 டிசம்பர், 2012

விரித்த இறகு ! நடுவில் வால் ?


suran

"எம்ஜிஆர் சமாதியின் முகப்பில் வைக்கப்பட்ட வளைவில் பொருத்தப்பட்டது இரட்டை இலை சின்னம் அல்ல. பறக்கும் குதிரை வைக்கப்பட்டுள்ளது. அதன்மேம்படுத்தப்பட்ட இறகுகள்தான் பொருத்தப்பட்டுள்ளது. கிரேக்கர்களின் சித்தாந் தத்தை உள்ளடக்கிய வெற்றி சின்னம்தான் இது . இதை திமுகவினர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்."
                                            --நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதம்.

கருணாநிதி மட்டும் அல்ல . எனக்கும் கூ ட அதை பார்க்கும் போது இரட்டை இல்லை போல் தான் தெரிந்தது.
 எங்கள் கண்களிலில் கோளாறா என்பது உங்களுக்கு தெரியும் வடிவத்தைப் பொறுத்துதான் தெரியவரும்.
ஒரு அரசு நீதிமன்றத்தில் இப்படி முழுப்பூசணிக்காய்  மறைப்பு பொய்களை சொல்வது மிக அநாகரிகம் மட்டுமல்ல.அசிங்கம்.அரசனை போல் தான் மக்கள் என்று திருவள்ளுவர் கூ றி யுள்ளார் .
கிரேக்கர்களின் பறக்கும் குதிரையை வைத்து விட்டீர்களே  .
பிறகு எதற்கு அதன் இறகுகளை பிய்த்து தனியே பெரிதாக பார்வைக்கு வைத்துள்ளீர்கள் .
சரி.
இறக்கைகளின் நடுவில் காம்பு போல் இருப்பது என்ன?
குதிரையின் வாலா ?
அது இப்படி கம்பு அல்லது காம்பு போன்றா இருக்கும்?குதிரையின் வால் வளைவாக மயிர் கற்றை களுடன்தான்  இதுவரை நான் பார்த்து வந்துள்ளேன்.
இது கிரேக்க பறக்கும் குதிரை .வால் அப்படித்தான் இருக்கும் என்று அட்வகேட் ஜெனரல் சொல்லுவார்.
  நீதிபதி இதை குதிரையின் மேம்படுத்துப்பட்ட இறகுதான் என்று ஒத்துக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
suran
டான்சி நில ஆவணத்தில் போடப்பட்ட கையெழுத்து தனது அல்ல என்று நீதி மன்றத்திலேயே மனமார கூ றி யவர் ஆட்சியில் அட்வகேட் ஜெனரல்கள் இப்படித்தான் இருப்பார்கள் நாம்தான் மேம்படுத்தப்பட்ட இறகுகளை சரியாக புரிந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
அதற்குள் காந்தி மண்டப ராட்டைக்கு போய் விட்டார் .ராட்டை என்பது காந்தியின் உருவகம்.அவரின் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற கருவி.
தெரியாமலா இருக்கிறார்.?
நமது இந்திய கொடியில்  சில காலம் [உங்கள் அதிமுக ஆரம்பக்காலத்தில் தாமரைக்கொடி இருந்தது போல் ]இடம் பேற்ற  பெருமைக்கு உரியது ராட்டை.
மாயாவதி யானை சிலைகளை இழுத்துக்கொண்டு வந்துள்ளார்கள்.
அவர் யானை சிலையை மாநிலம் முழுக்க வைத்தப் பிறகுதான் மிகப்பெரும் தோல்வியை பெற்றார் .
அரியணையை இழந்தார்.
இதை உங்கள் அம்மாவிடம் சொல்லி வையுங்கள்.
_________________________________________________________________________
இது பறக்கும் குதிரை அல்ல.கிறிஸ்துமஸ் தாத்தா செல்லும் கலைமான்.
________