புதிய யுக்தி
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கி ஜனவரி மாதம் திரைக்கு
வரும் `விஸ்வரூபம்' திரைப்படத்தை திரையிடுவதில் புதுவகையான சிக்கல் உண்டாகியி ருக்கிறது.
பிரச்சினை கமல்ஹாசனுக்கும் -திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில்.
தனது
ஒவ்வொரு முயற்சியிலும் புதிது புதிதாக சிந்தித்து, செயல்படும் கமல்ஹாசன்,
விஸ்வரூபம் படத்தில் மட்டுமன்றி, அதை வெளியிடுவதிலும் புதிய யுக் தியைப்
புகுத்த முடிவு செய்ததற்குத்தான் எதிர்ப்பு.
இப்போது ஒரு திரைப்படம்,
திரையரங்குகளில் வெளியாகி மூன்று மாதங்களுக்குப் பிறகுதான்
தொலைக்காட்சிகளில் திரையிட அனுமதிக்கப்படும். ஆனால், விஸ்வரூபம்
வெளியீட்டில் கமல் புதிய முறையைக் கையாளப் போகிறார்.
அதாவது, திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு
எட்டு மணி நேரம் முன்னதாக, DTH எனப்படும் வீடுகளில் நேரடியாக
தொலைக்காட்சிகளில் திரைப்படங்களைக் காணும் வசதி மூலம் அதை வெளியிட
இருக்கிறார். பல்வேறு கேபிள் சேவை நிறுவனங்கள், பணம் கட்டி திரைப்படம்
பார்க்கும் வசதியை தனது தொலைக்காட்சி சந்தாதாரார்களுக்கு வழங்குகின்றன.
அவ்வாறு படம் பார்க்க அனுமதிப்பதன் மூலம், அந்தத்
திரைப்படத்தைப் பார்க் மேலும் ஆர்வம் ஏற்பட்டு, அதிக அளவிலான ரசிகர்கள்
திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது கமலின் வாதம்.தொலைக்காட்சியில் பார்த்தாலும் திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்கள் அதிகம் என்கிறார்.மேலும் இப்படம் பார்க்க 1000 ருபாய் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும்.இதை வெளியில் படம் பார்க்க செல்லாத பெரிய மனிதர்கள் மட்டுமே செலுத்துவதால் சாதாரண ரசிகர்கள் திரையரங்கிற்குத்தான் வருவார்கள் என்பது கமல் வாதம்.முதலில் தொலைக்காட்சியில் காட்டுவது ரசிகர்களை திரையரங்கிற்கு படம் நன்றாக இருந்தால் அழைத்து வரும் என்கிறார்.
ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் அதை ஏற்க
மறுக்கிறார்கள். இந்த முறையை எல்லோரும் பின்பற்ற முடிவு செய்தால்,
திரையரங்குகளை இழுத்து மூடிவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று
அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கும்
கமல்ஹாசன், தனது நிலைப்பாட்டை திரையரங்கு உரிமையாளர்களுக்குப் புரிய வைக்க
தளராமல் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
அந்த முயற்சியின் ஒரு படியாக, சனிக்கிழமையன்று,
கமல்ஹாசன் அவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே
பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற திரையரங்க
உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்
கருத்துத் தெரிவிக்கும்போது, 'கமல் அவர்கள் தெரிவிக்கும் கருத்து
ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது என்றும், வரும்
செவ்வாய்க்கிழமையன்று திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும்
திரையரங்க உரிமையாளர்களின் கூட்டுக் கூட்டத்தில் அதுபற்றி இறுதி முடிவு
எடுக்கப்படும் 'என்றும் தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்களின் பிடிவாதம் தளர்ந்து
வருவதாகக் கருதப்படும் நிலையில், இந்திய திரையுலகில் கமல்ஹாசனின் இன்னொரு
புதிய முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும் என்று திரையுலக விமர்சகர்கள்
கூறுகிறார்கள்.
ஏற்கனவே திருட்டு விசிடி கலை ஒழிக்க படம் வெளியாகும் போதே குறைந்த விலையில் விசிடிகளையும் பாடல் சிடி போன்று வெளியிட்டால் தயாரிப்பாளர்கள் -திரையரங்கு உரிமையாளர்கள் திருட்டு விசிடி தங்கள் பணத்தை பங்கு போடுவதை தடுக்க முடியும்.
திரையரங்குக்காரர்களுக்கும் பட வெளியிட்டு தொகை குறையும் .திரையரங்கு கட்டணமும் குறையும் வாய்ப்புள்ளது.
திரையரங்கு கட்டணம் உயர்வுதான் ரசிகர்களை முதலில் திரையரங்குக்கு வரவிடாமல் தடுக்கும் காரணி.
திருட்டு விசிடி 30 ருபாய் என்பது இரண்டாவது காரணியாக அமைந்து விடுகிறது.
ஒருவருக்கு 100 ரூபாய் கொடுத்து நான்கு பே ர்கள் கொண்ட குடும்பம் படம் பார்த்து வர செலவுகள் உட்பட குறைந்தது 500 ருபாய்கள் .
அதை 30 ருபாய் திருட்டு விசிடியில் குடு ம்பத்துடன் எத்தனை முறை வேண்டுமானால் போ ட்டு பார்த்துக்கொள்ளலாமே?
கமல்ஹாசன் கூறும் முறை ஒரு முறை சோதித்துதான் பார்க்கலாமே.
எப்படியும் கொஞ்ச நாட்களில் திரையரங்குகள் மால்களா கத்தான் போகின்றன.அது காலத்தின் கட்டாயம்.
நாட க கொட்டாய்கள் திரையரங்குகளாக மாறவில்லையா என்ன ?
__________________________________________________________________________________
ஆரம்பமே லஞ்சம்தான்
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய
முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த
ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி
பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி
பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில்,
அமெரிக்காவின் சில்லரை வணிக பகாசுர வால்மார்ட் நிறுவனம்,
இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125
கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு
முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட்,
பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும்
வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம்,
இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம்
பேசியுள்ளது வால்மார்ட்.
2012 இல் இதுவரை ரூ. 18 கோடி
செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் இந்தியாவில் வால்மார்ட் வர சிகப்பு கம்பளத்துடன் அலையும் கைக் கூ லிகளுக்கான தொகை அடங்க வில்லை.இந்த 18 கோடி அமெரிக்க செலவு மட்டுமே . நிச்சயம் இந்தியாவில் அதிகம் செலவாகியிருக்கும் லாலு,மாயாவதி,முலாயம்,கருணாநிதி என்று சில எதிர்ப்பாளர்கள வாயை அடைக்க செலவாகியிருக்கும்தானே ?
வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444
மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது.
இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன்
அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம்
மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம்
ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த மக்களின் வாங்கும் திறனே , வால்மார்ட்
போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு
காரணமாம் .
__________________________________________________________________________________