இந்திய முட்டாள்களான நாம்

மார்க்கண்டேய கட்ஜு  
 ---------------------------------
 , 2004ல், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.
 பின், 2006ல், உச்ச நீதிமன்ற  நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு, அக்., முதல், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் தலைவர் பொறுப்பில் உள்ளார். தனக்கு நியாயம் என தெரிந்ததை, அப்படியே சொல்வதிலும், நியாயமானதை செய்வதிலும், கட்ஜு வித்தியாசமானவராக திகழ்கிறார்.

டில்லியில் நடந்த, கருத்தரங்கம் ஒன்றில் நீதிபதி கட்ஜு,  கூறியது நம்மை பற்றிய விபரங்கள்.அதாவது ஒட்டு மொத்த இந்தியர்கள் மனப்பான்மை பற்றியது.

"நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன்; அவர்கள் தலையில் மூளை கிடையாது; அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.
வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம்; தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்.

அந்தத் தகவல் தெரிந்ததும், முட்டாள் ஜனங்கள், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தச் செயலுக்கு பின்னால், சில சமூக விரோத சக்திகள் இருக்கிறது என்பதை, அவர் கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நாட்டில், 1857ம் ஆண்டிற்கு முன், மதக் கலவரமே கிடையாது; மதத்தின் பெயரால், சண்டையிட்டுக் கொண்டதே கிடையாது.
ஆனால், இப்போது நிலைமையை யோசித்து பாருங்கள். 80 சதவீத இந்துக்கள், மத உணர்வுடன் உள்ளனர்; அதுபோலவே, 80 சதவீத முஸ்லிம்களும் மத உணர்வுடன் உள்ளனர்.
இதனால், நாம், 150 ஆண்டுகள் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, 150 ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். இதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் தான், மக்கள் மனதில் விஷத்தை பாய்ச்சி விட்டனர்.
சிப்பாய் கலகம் நடந்த, 1857ம் ஆண்டில், லண்டனில் இருந்த சில சக்திகள், "இந்தியர்களை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டார்கள்' என கருதி, இந்தியர்களை பிரித்தாழ, மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் துவங்கின. அதன் மூலம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் அடித்துக் கொள்ளச் செய்தனர்.

இந்தி மொழி, இந்துக்களுக்கும், உருது மொழி, இஸ்லாமியருக்கும் என, தவறாக பிரசாரம் செய்யப்பட்டது; அதையும், உண்மை என நம்பி, ஏராளமானோர், இன்னும் மோதிக் கொள்கின்றனர்.

ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், உருது மொழி படித்துள்ளனர்; இங்கு, மக்களை முட்டாள் ஆக்குவது எளிது; நிறைய பேர் முட்டாள்களாக இருப்பதால், அவர்கள் பிறரை எளிதாக முட்டாள் ஆக்கிவிடுகின்றனர்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, முட்டாள்களாக இருக்க வேண்டாம் என்பதற்காகத் தான்."
இவ்வாறு, கட்ஜு பேசினார்.
அவர் பேசியத்தில் நமக்கு கோபம் வரலாம்.
suran
ஆனால் அவர் கூ றி யவை  அனைத்தும் உண்மையானவை.அதை நாம் களைய வேண்டும்.
நமது முட்டாள் தனத்தை இந்து-முஸ்லிம் வெறித்தனம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியிலேயே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் .
நாட்டை விட மதத்தை முக்கியமாக கருதும் போக்கு நம்மிடையே இருக்கிறது.அதை தூண்டி வளர்ப்பது இந்திய வாக்கு பொறுக்கி அரசியல் வாதிகள் தான்.
மத சார்பின்மை என்று பேசி திரியும் நபர்கள் முக்கிய பணியே இந்த மத வெறியை அணையாமல் தூண்டி விட்டுப் பார்த்துக் கொள்வதுதான்.
நாட்டின் மீது தீவிரவாத செயல்களை செய்தவர்களை தண்டிப்பதில் கூட   மதம் குறுக்கே வருவது நாட்டின் மீதான கவலையை தருகிறது.

இந்தியர்களைப் பற்றி கருத்துத் தெரிவித்த நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
suran
சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களான தன்யா தாகூல் மற்றும் ஆதித்யா தாகூர், நீதிபதி கட்ஜுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், இந்தியர்களில் 90 விழுக்காட்டினர் முட்டாள்கள் என்று கருத்துத் தெரிவித்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 30 நாட்களுக்குள் மன்னிப்புக் கோரா விட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாணவர்களின் தேச பக்தி கவர்கிறது.ஆனால் உண்மை என்னவோ கட்ஜு கூறியதில்  நிரம்ப இருக்கிறது.
மாணவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.
மேலும் கூ றியவர் இந்தியர்தான்.வேறு நாட்டினர் அல்ல.
புஷ் இந்தியர்கள் நிறைய சாப்பிடுவதால் தான் உலகில் உணவுப்பஞ்சம் ,விலையேற்றம் உண்டாகிறது என்றாரே அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டிறிருந்தார்கள் ?ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.இவர்கள் மட்டுமா?நமது அரசே அது உண்மைதான் என்று ஒத்துக்கொள்வது போல் வாயை இழுத்து முடிக்கொண்டுதானே இருந்தது.
_____________________________________________________
suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?