ஆடு நனைகிறதே அழுகை வருகிறது.
தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
" டி.டி.எச். நிறுவனங்களின் பசப்பு மொழியில் அவர் தன்னிலை இழந்தாரானால்
அவரையும் அவரது திரைப்படத்தையும் காப்பற்ற கடவுளாலும் முடியாது.
இதையெல்லாம் மீறி டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை
ஒளிப்பரப்பியே தீருவேன் என்று கமலஹாசன் முடிவெடுப்பாரானால் நூற்றாண்டுகால
சினிமா வளர்ச்சியை கவுரவப்படுத்திட டி.டி. எச்.சில் இந்த படம்
ஒளிபரப்பாகும்போது பட்டிதொட்டி எங்கும் வீடியோ ஸ்கோப் என்னும் அகன்ற திரையை
பொருத்தி ஊர்மக்கள் ஒன்று கூடிட இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்பி,
கமலஹாசனை வாழ்த்திட நாங்களும் தயாராகி விடுவோம் என்பதை தெரிவித்துக்
கொள்கிறோம்."திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் தொழில் பாதிப்பு ஏற்படலாம் என்று பயப்படுவதில் ஒரு தொழில் தர்மம் இருக்கிறது.அவர்கள் பயம் ஓரளவு நியாயமானதுதான்.ஆனால் கேபிள் தொலைக்கட்சி மூலம் வெளியான படத்தை திருட்டு விசிடி மூலம் ஒளிபரப்பிவரும் காயல் இளவரசு போன்றவர்களுக்கு இந்த திமிர் பேச்சு எப்படி வரலாம்?
படத்தை ஒளிபரப்ப உரிமை வாங்கி சன் ,கலைஞர் ,விஜய் போன்ற தொலைக்காட்சிகளை சனி,ஞாயிறு ஒளிபரப்பாகப்போகிறது என்று அவர்கள் தெரிவித்த உடனே தங்கள் உள்ளூர் தொலைக்காட்சியில் அதே படத்தை அதற்கு முதல் நாள் பல முறை திரும்பப்போடும் கேபிள் காரர்களுக்கு இப்படி பேச தகுதியே கிடையாது.
ஒரு புதிய படத்தை குட்டையைக் குழப்பி தங்கள் கேபிளில் ஒலிபரப்பப் போவதாக திமிருடன் கூ றும் காயல் இளவரசு மீது கண்டிப்பாக நடவடிக்கை தேவை.
சினிமா தயாரிப்பாளர்-திரையங்கு உரிமை யாளர்கள் தகராறில் திருட்டுப்படம்,பாடல்களை ஒளிபரப்பி வரும் திருடர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து வேலை கொடுப்பது அனைவருக்குமே ஆபத்து.
இதை திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமல்ல இந்த அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இது ஆடு நனைவதற்கு ஓநாய் அழும் கதைதான்.
காயல் இளவரசு க்கு கேபிள் அரசுடைமையான பின் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன .
MSOக்களை ஆளுங்க்கட்சியினர் கைப்பற்றிக் கொண்டு தாங்கள் இலவசமாக அனுமதி பெறாத சானல்களை நடத்திக்கொண்டு தங்களுக்கு பணம் தராத உள்ளூர் தொலைக்காட்சிகளை காட்டாமல் இருக்கிறார்கள்.
பல இடங்களில் பணம் கட்டி உரிமை பெற்றவர்களை அமைச்சர்கள் ஆதரவாளர்கள் விரட்டி அவர்களின் அறையையே கைப்பற்றி தொழில் செய்கிறார்கள்.பல மாவட்டங்களில் அரசு சானல் சிக்னல்களைத் தர அதிகப்பணம் ஜெனரேட்டர் வகைக்கு என்று அடாவடி வசூல் செய்கிறார்கள்.கேபிள் நடத்துபவர்கள் அரசுக்கு மனு மேல் மனு போடுகிறார்கள் ,அது பற்றி எந்த நடவடிக்கையும் போராட்டமும் நடத்த காயல் இளவரசுக்கு நீரம் இல்லையா? அல்லது திராணி இல்லையா?
அதை கண்டு கொள்ளாமல் எதிர்த்து அரசை அணுகாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விடயத்தில் தேவை இல்லாமல் தலையை விடுவது ஏன் ?

_____________________________________________________
ஏலம் போன காந்தி கடிதம்.
காந்தி, தன்கைப்பட பென்சிலால் எழுதிய அந்த 90 ஆண்டு பழமையான கடிதத்தை ஏலம்விட, லண்டனில் உள்ள சோத்பை ஏல நிறுவனம் முடிவு செய்தது.
ஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள சபர்மதி சிறையில் மகாத்மா காந்தி 1922 ம் ஆண்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது தேசிய கீதத்தை இயற்றிய வங்காள மொழி
கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் அண்ணன் துவிஜேந்திர நாத்திற்கு சிறையில்
இருந்த படியே, கடிதம் ஒன்றை காந்தி எழுதியிருந்தார்.
இந்த கடிதம் சுமார் 5 ஆயிரம் பவுண்டிலிருந்து 7 ஆயிரம் பவுண்ட் வரை ஏலம் போகும் என அந்நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே காந்தியின் கடிதங்கள் ஏலம் விடப்படுவதை தடுத்து
நிறுத்தும்படி கிரிராஜ் கிஷோர் என்ற காந்தியவாதி, காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்திக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் அந்த கடிதம் 49 ஆயிரத்து 250 பவுண்டுக்கு(ரூ.43 லட்சம்) ஏலம் போனது.
இதே போல், கடந்த 1922ம் ஆண்டு, தனது நண்பரின் தாயார் மறைவுக்கு இரங்கல்
தெரிவித்து காந்தி எழுதிய மற்றொரு கடிதமும் எதிர்பார்க்கப்பட்ட 4 ஆயிரம்
பவுண்டுக்கும் அதிகமாக, 5 ஆயிரத்து 625 பவுண்டுக்கு ஏலம் போனது.
இந்த கடிதங்களை ஏலத்தில் வாங்கியவர் யார்? என்பதை அந்நிறுவனம் வெளியில் தெரிவிக்கவில்லை.
தொலைபேசி மூலம் ஏலத்தில் பங்கேற்ற ஒருவர் இவற்றை வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.______________________________________________________________________________
சித்தார் ரவிசங்கர் காலமானார்,
பிரபல சித்தார் இசைக்கலைஞர் ரவிசங்கர் [ 92 வயது ] கலிபோர்னியாவில் காலமானார்.
சாந்தியாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அவர் இதய அறுவைச் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்திய காலாச்சார பாரம்பரிய சித்தார் இசையில் உலகப் புகழ் பெற்றவர் ரவிசங்கர் .
''த பீட்டில்ஸ்'' போன்ற சர்வதேச கலைஞர்களுடனும் சித்தாரை வாசித்து அதன் மூலம் உலக அரங்கில் ரவிசங்கர் பிரபலமாகினார்.
சுமார் 70 வருடங்கள் இசை
வாழ்க்கையில் அவர் மூன்று கிராமி விருதுகளையும், இந்தியாவின் பாரத ரத்னா
விருதையும் பெற்றுள்ளார்.
காந்தி உட்பட சில திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
____________________________________________________________________________