தடுத்திருக்க வேண்டிய இழப்பு.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 15ம் தேதி கடும் மழை பெய்தது.
அடுத்தடுத்த நாட்கள் மேகங்கள் வெடித்து வானமே கிழிந்தது போல் மழை கொட்டியது. இதில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பல இடங்களில் நிலச்சரிவு. சாலைகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை. ஆங்காங்கே புனித யாத்திரை சென்ற பக்தர்கள், உள்ளூர் மக்கள் என்று ஆயிரக்கணக்கானோரை வெள்ளம் சுருட்டி சென்றது. பல கட்டிடங்களை தரைமட்டமாக்கி வெள்ளம் அடித்து சென்றது.
மாநில சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் கூறுகையில் உத்தரகண்டில் "இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும்"என்று தெரிவித்தார். 
"பயங்கர மழை பெய்ய போகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் மேக வெடிப்பு நிகழ போகிறது. அசம்பாவிதம் நடக்கலாம். அதற்குள் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுங்கள். புனித யாத்திரையை தள்ளி போடுங்கள் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ஒரு முறையோடு நிற்காமல் தொடர்ந்து 15, 16, 17ம் தேதிகளில் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.
ஆனால்" வழக்கமான வானிலை அறிக்கை" என்று அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே, உத்தரகண்ட் மாநிலத்தில் பேரழிவு நிகழ்ந்ததற்கு காரணம் என்ற  தகவல் வெளியாகி உள்ளது.
 உத்தரகண்ட் தலைமை செயலர், மாவட்ட கலெக்டர்கள், இயற்கை பேரிடர் மேலாண்மை துறை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை, சார்தாம் யாத்திரை உயர்அதிகாரிகள் என பல துறையினருக்கும் வானிலை மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. ஆனால், இத்தனை துறையினரும் வழக்கமான வானிலை அறிக்கைதான் என்று அலட்சியமாக இருந்துள்ளனர். வானிலை மையத்தின் எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொண்டு அதிகாரிகள் செயல்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். பேரழிவில் இருந்து மாநிலத்தை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும், மாநில அரசு அதிகாரிகளை மட்டுமன்றி, டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையிடத்துக்கும், உத்தரகண்ட் மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.
 அந்த தகவலை அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
மாநிலத்தில் இருந்து எச்சரிக்கை வந்தவுடன் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த அளவிற்கு அழிவையுமுயிர் இழப்பையும் எதிர் கொள்ள
வேண்டியதி ருந்திருக்காது .
  இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை,மத்தியஅரசாவது மாநில அரசை எச்சரித்திருக்க வேண்டும் . அதுவும் நடக்கவில்லை. ஒட்டுமொத்த அதிகாரிகளும் வழக்கமான வானிலை அறிக்கை என்று இருந்துவிட்டதால் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய பேரழிவு நடந்து விட்டது.
இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் காணவில்லை என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.
அரசு சொல்லும் கணக்கும் சரியில்லை வழமையான குறைவான மதிப்பு.உண்மையில் இறந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று  பொதுமக்கள் குமுறுகின்றனர்.
தடுத்திருக்க வேண்டிய இமாலய சுனாமி மாநில அரசின் இமாலய தவறால் இழப்பை இமாலய அளவிற்கு உயர்த்தி விட்டது.
எச்சரிக்கையுடன் செயல் பட்டிருக்க வேண்டிய மாநில அரசு வானிலை மையத்தை எச்சரிக்கையின் கடுமை போதாது என்று குற்றம் சாட்டியிருக்கிறது .வானிலை மையம் மழை-புயல் வரக்கூடும் என்று அறிக்கைதான் தரும்.மாநில ஆட்சியாளர்களை கையில் பிரம்புடன் வந்து வேலையா வாங்க முடியும்?அல்லது நடவடிக்கை எடுங்கள் என்று ஆள்வோர் காலில் விழுந்து கதறவா செய்யும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதம் பிடித்த செயல்.
--------------------------------
மழையை கண்ட ஆனந்தத்தில் ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்றனர் .இந்த  வெறிச்செயல் பொது மக்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் - சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன.
உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர்.
அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது.
தலைமறைவாக இருக்கும் குத்தோர் என்ற பழமைவாதியையும்,அவருடன் வந்து  இந்த படுகொலையை செய்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இயற்கையிலேயே மனித உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சியை கூட வெளிப்படுத்த தடை போடுமா மத வெறி.?
அதை கூட அனுமதிக்காதவரா கடவுள் என்பவர்.?
பின் இயற்கை அழகை எல்லாம் ஏன் உங்கள் கடவுள் படைத்தார்.?
அதை கண்டு மயங்கும் மனதையும் தந்தார்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?