இலவச ஆன்லைன் படிப்புகள்....,
முன்னணி ஐஐடிக்கள் நிறுவனமான, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் தொழில் லாபி நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் இணைந்து இலவச ஆன்லைன் படிப்புகள் வழங்க உள்ளன.
இதன்மூலம் 100,000-150,000 மக்களுக்கு சிறந்த உயர் கல்வியும் மற்றும் வேலைக்காகவும் உதவ முடியும்.
மாபெரும் திறந்த ஆன்லைன் படிப்புகள் (MOOCs) உபயோகித்து படிப்புகளை வழங்கப்படுகின்றன. இதனால் உலகில் உலகளாவிய உயர் கல்வியை உருவாக்குகின்றது.
கணினி அறிவியலில் முதல் மூன்று படிப்புகளை இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வரும் 'இந்த திட்டம், குறிப்பாக இந்தியாவிற்காக தான், ஏனேனில் அதிக எண்ணிக்கையில் இளம் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வேண்டும் என்பதற்காக' என்று காக்னிசண்ட் துணை தலைவர், லட்சுமி நாராயணன், கூறியுள்ளார்.
மாபெரும் திறந்த ஆன்லைன் படிப்புகள் (MOOCs) மிக சிறந்த பழ்கலைகழகத்தில் இருந்து சிறந்த உயர் கல்வியை உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு வருக்கும், ஆன்லைனில் இலவசமாக வழங்கும்.
இதில் தில்லி, சென்னை, காரக்பூர், கான்பூர், ரூர்க்கி, பம்பாய் மற்றும் கவுகாத்தி போன்ற ஏழு ஐஐடிக்கள் பங்குபெறும்.
நிறுவனங்களில் இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் தொழில் லாபி நாஸ்காம் உள்ளன.
ஏழு பழைய ஐஐடிக்கள் இருந்து சுமார் 15 ஆசிரிய உறுப்பினர்களை கொண்டு தற்போது வடிவமைத்து வருகிறது.
தொடக்கத்தில், ஐஐடிக்கள், கணினி அறிவியல் பாடத்தை மூன்று மினி தொகுதிகள் கொண்டு இயக்கும், அதில் புரோகிராமிங், அல்காரிதம், மற்றும் டேடா ஸ்டரட்சர் உள்ளடங்கி இருக்கும்.
ஒவ்வொரு தொகுதி 12 விரிவுரைகள் மற்றும் 12 வாரங்களில் மொத்தமாக 36 விரிவுரைகள் இருக்கும். படிப்புகள் எடுக்க மக்கள் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுதினால் தகுதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கணினி அறிவியல் படிப்புகளுக்கு, ஐஐடி சான்றிதழ் வழங்கும்.
அடித்தளம் படிப்புகள், தொழிற்துறை சான்றிதழ்கள் வழங்கும். இது ஐஐடிக்களின் கூட்டு சான்றிதழாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------