எல்லோரும் சமமே.

"வக்கீல்களையும், நீதிபதி யும் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம்  தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், 2–ந்தேதி அனைத்து நீதிமன்றம்கள், தீர்ப்பாயங்களில் வக்கீல்கள் ஆஜராகமாட்டார்கள். இதுவரை கைது செய்யப்பட்ட வக்கீல்கள் விடுவிக்கப்பட வேண்டும். பொய் வழக்குகளின் அடிப்படையில் வக்கீல்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். "
suran
இவையாவும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பிணியாக்கி கைதான நீதிபதி [?]என்பவருக்கு ஆதரவாக நாளைய நீதிபதிகளாகும் இன்றைய வக்கீல்கள் சங்க தீர்மானம்.

நீதியை வழங்க வேண்டிய வர் குற்றம் செய்தால் அதை கண்டு கொள்ளகூடாதாம்.வழக்குரைஞர்கள் என்னதான் அடாவடி செய்தாலும் அதையும் கண்டு கொள்ள கூடாதாம்.
அதைத்தான் நீதிபதி கைதை கண்டித்து இவர்கள் நடத்தும் போராட்டம் சொல்லுகிறது.
தமிழ் நாடு முழுக்க வழக்குரைஞர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை தகர்ந்து வருவதை இவர்கள் அறியாமல் மேலும் அட்டகாசம் செய்வதும்,சட்டத்தின் வலிமையை காட்ட வேண்டிய இவர்களே சட்டத்தை துச்சமாக மதித்து விதி மீறல்கள் செய்வதும் வழக்குரைஞர்கள் மீது உள்ள மதிப்பையே மக்களிடம் குறைத்து விட்டது.ஆனால் அதை இவர்கள் உணராமல் இன்னமும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் எந்த தவறு செய்தாலும் யாரும்,காவல்துறையும் தங்களை தட்டிக்கேட்கக் கூடாது என்ற எண்ணம் சட்டம் படித்த ஒரே காரணத்தால் இவர்கள் மனதில் உள்ளது.அதற்கு காரணம் நீதிபதிகளும் இவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதுதான்.காவல்துறையும் இவர்களிடம் அடங்கிப் போவதுதான்.
அந்த காரணமே இவர்களை சட்டவிதிமுறைகளை மீறியே எல்லாவற்றையும் செய்ய வைக்கிறது.காவல் நிலையத்துக்குள் நுழைந்தே கலவரம் செய்யவும் இவர்களுக்கு தைரியத்தை தந்துள்ளது.
இன்று வரை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தினுள் நுழைந்து காவலர்களைத் தாக்கி வாகனங்களையும்,காவல்நிலைய கோப்புகளையும் தீவைத்து எரித்ததற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததும் இவர்களுக்கு தைரியம் வரக் காரணம்.
பெண்ணை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த மனிதருக்கு என்ன தண்டனையோ அ தைத்தான் கைது செய்யப்பட நீதிபதிக்கும் தர வேண்டும் .
இல்லை இவருக்கு வக்கீல்கள் போராட்டத்தினால் விதி விலக்கு என்றால் இனி யாருக்கும் இதே குற்றத்துக்கு தண்டனை விதிக்க இது போன்ற நீதிபதிகளுக்கு அருகதையே கிடையாமல் போய்விடும்.
நீதிபதிகள் இங்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் தீர்ப்புகள் வழங்குகிறார்கள்.வக்கீல்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் வாதாடுகிறார்கள்.யாரும் மக்களுக்காக ,சமூகத்தின் சட்டம் ஒழங்கை பாதுகாக்க பிறப்பெடுத்து வரவில்லை.அவர்களுக்கு தனி சட்டதிட்டங்களும் இல்லை.எல்லோருக்குமான விதிகள்தான் அவர்களுக்கும் .
வக்கீல்கள் போராட்டம் என்றாலும் தனிப்பட்ட அமைப்பின் போராட்டம் நடத்தினால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் படுமோ அதையே காவல்துறையும், அரசும் எடுக்க வேண்டும் .
கட்சிக்காரரிடம் காசை வாங்கிக்கொண்டு வழக்கிற்கு செல்லாமல் நீதிமன்ற புறக்கணிப்பில் அடிக்கடி வேடிக்கையாக செல்லும் இவர்களை நுகர்வோர் நீதிமன்றத்தில் சென்று தண்டிக்கும் உரிமை நுகர்வோர் என்ற அடிப்படையில் இவர்களிடம் வழக்கை ஒப்படைத்து விட்டு அல்லல் படுவோருக்கு வேண்டும் .சட்டத்தின் முன் எல்லோரும் சமமே.
அது நீதிபதியோ,வக்கீலோ எல்லோரும் சமமே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சின்ன ,சின்ன மருத்துவம்.
-------------------------------------------- 


* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.
ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
 சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
  திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் பறந்துபோய்விடும், கண்களின் சிவப்பு.

* சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில்வெடிப்பைப் பார்க்க முடியாது.* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

* முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.

* மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நெல்லி காய்.
----- --------- -----------
நெல்லிக்கா அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் மூகூன்றுநோய்களையும் போக்கவல்லது. ெஇதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத நுல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.
நமது முன்னோர்கள் இதனை இரசாயனம் என்றே அழைத்துள்ளனர்  தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூயிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.
ஐந்து சுவை
ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.
உயிர்சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்சு தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் யீரணமாகும்.

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புச்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?