வெள்ளி, 19 ஜூலை, 2013

மின் பற்றாக்குறை தொடருமா?

                                                                                                                                    -கே.விஜயன்
 
இந்திய நாட்டின் மக்கள்தொகை 120 கோடி ஆகும். சுதந்திரமடைந்து 67 ஆண்டு கள் ஆகின்றது.
ஆனால் மக்களின் அடிப் படைத் தேவைகள் பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை. நமது நாட்டில் செல் வந்தர்கள் உள்ளனர்.ஒருவேளை சாப்பாடு இல்லாமல் வாழ் பவர்களும் பெரும்பான்மையாக உள்ளனர். வறுமையை விரட்டுவோம் என்று உணவு உற் பத்தியில் தன்னிறைவு பெற்று இருக்கலாம். ஆனால் மக்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் சேமிப் புக்கிடங்குகளில் அழிந்து கொண்டிருக் கின்றன.
suran

வீடில்லாதவர்கள் கோடிக்கணக்கில் உள் ளனர். இப்பொழுதும் சாலையோர நடை மேடையில் உறங்குபவர்கள் மீது மெர்சிடஸ் கார் ஏறி உயிரை பறிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தவைகளாக உள்ளது.மின்சாரத்தின் மூலம் சக்தியை உரு வாக்கி அதன் மூலம் நாட்டின் வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்லும்முறை இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அனைவருக்கும் மின்சாரம் 2012ல் கிடைத்து விடும் என்ற அரசின் உறுதிமொழி ஒரு லட் சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சென்ற டையவில்லை.
மின்சாரத்தின் பயனை இந்தியாவில் அனு பவிக்காதவர்கள் கோடிக்கணக்கான எண் ணிக்கையில் உள்ளனர். அனை வருக்கும் மின்சாரம் எப்பொழுது கிடைக் கும். அதற்கான மின் உற்பத்தியை அரசு செய்வதற்கு முடியவில்லை.
முதலாளிகள் மின் உற்பத்தி செய் வதற்கு முன்வந்தால் அவர்கள் முதலீட் டை மேலும் வளர்த்துக்கொள்ள வழி வகைகள் அரசினால் போட்டு காட்டப்பட்டது. மின்உற்பத்திக்கு சிறிய முதலீட்டை கொண்டு வந்தாலே போதும். மீதியை அரசே மக்கள் கோடிக்கணக் கான ரூபாய் நிதி சேமிப்பு களில் (வங்கி எல்ஐசி) இருந்து தேவையான நிதியை அளிப்பதற்கு ஒப்புக் கொண்டது.மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை வெட்டிக்கொள்ளவும் சுரங்கங்கள் எந்தவித விலையும் இல்லாமல் இயற்கை வளத்தை மானியமாக அளிக்க முன் வந்தது.
அதுபோக மின்உற்பத்திக்கான செலவு போக 16சதவீதம் வரை லாபம் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. வெளி நாட்டு முதலாளிகள் என்றால் இன்னும் ச லுகை, மாநில அரசுகள் மின்சாரம் வாங்கியதற் கான பணத்தை அளிக்க தாமதம் செய்தால் மத்திய, மாநில அரசின் வங்கிக் கணக்கி லிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
மின் சாரம் மக்க ளுக்கு வழங்கிட பணமில்லை என்று கூறிக் கொண்டு மறுபுறம் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான நிதிகளை முதலாளிக்கு சலுகை, வரிச்சலுகை என்ற பெயரால் அளித் துள்ளது. ஆனாலும் அரசு அறிவித்த சலுகை களை மட்டும் அனுபவித்த என்ரான், ஹிந்து ஜா, ரிலையன்ஸ் போன்ற முதலாளிகள் அரசின் திட்டத்தை நிறைவேற்றவில்லை.
suran
2013 ஆம் ஆண்டில் 23 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ள மின் உற்பத்தி இரண்டு லட்சத்து 7ஆயிரம் மெகாவாட் மட்டுமே ஆகும். இந்தியாவின் மின் உற்பத்தியை அதிகப்படுத் திட 1972களில் உருவாக்கிய தேசிய அனல் மின்கழகம், தேசிய நீர் மின் உற்பத்திக்கழகம், கோல் இந்தியா, பாரத ஹெவி எலக்ட்ரிகல்ஸ் பலவீனமாக்கப்பட்டது.
முதலாளிகளு டன் வியாபார போட்டியில் நிற்க கொள்கை உரு வாக்கப்பட்டது. மத்திய அரசு 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின் மின் உற்பத்தியை உருவாக்கிட சுண்டுவிரலைக் கூட அசைக்க வில்லை.பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து இந்திய தொழிலாளர் வர்க்கம் இடதுசாரிகளின் தலைமையில் நடத்திய போராட்டங்களே இந்த பொதுத்துறை நிறுவனங்கள் முதலாளி களின் போட்டியில் நின்றன.
அதனால்தான் மத்திய அரசிற்கு சொந்த மான தேசிய அனல்மின்கழகம் மட்டுமே 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை கொண் டுள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வாழ்ந்து வருகிறது. ஆசியாவிலேயே ஆண் டுக்கு 5 ஆயிரம் லட்சம் டன் நிலக்கரி நிறு வனம் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
 பெல் நிறுவனத்திற்கு போட்டி பகாசுர நிறுவனம் எல்&டி நிறுவனம் என்றாலும் இந்தியாவின் பெரும்பான்மையான மின் நிலையங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொதிகலன் களால் உருவாக்கப்பட்டது.ஆனால் முதலாளிகளை நம்பி ஒப் படைத்த மின்திட்டங்களின் கதியை நினைத் தால் வேதனையான ஒன்றாக உள்ளது. அவர் களிடம் ஒப்படைத்த மின் திட்டங்கள் நிறை வேறியிருக்குமானால் இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். 2008ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக உள்ளது. இதனால் ஏராளமான பொருளாதார இழப்புகளும் வேலை யிழப்புகளும் ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில் தனியாரிடம் ஒப்படைத்த மின்திட்டங்கள் 5 ஆயிரத்து 585 மெகா வாட் மின்சாரம் திட்டமிட்ட அடிப்படை யில் மின் உற்பத்தியை துவங்கியிருந்தால் இன்று தமிழகம் சந்தித்துவரும் நான் காயிரத்து ஐநூறு மெகாவாட் மின்பற்றாக் குறை இல்லாமல் ஓரளவு நிலைமை சரியாக இருந்திருக்கும்.
suran
 அதற்குப்பதிலாக தனியார் போட் டுள்ள 7 தனியார் மின்நிலையங்கள் தமி ழக மின்வாரி யத்தின் வருமானத்தையே சாப்பிட்டுவிட்டது. இன்று தமிழக மின்வாரியம் நிதிநிலைமை இவ்வளவு மோசமாக போவதற்கு வாய்ப்பில் லை. இதேநிலைதான் இந்தியா முழுவதும்.மின்சார உற்பத்திக்கு தேவையானது நிலக்கரி. அதுபோதுமான அளவில் உற் பத்தி செய்யப்பட்டால்தான் மின்உற்பத்தி முழு அள வில் கிடைக்கும். நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ஏற்பாட்டைச் செய்தார்கள். அதன் விளைவு நிலக்கரி உற் பத்தி நடக்க வில்லை. நிலக்கரி பற்றாக்குறை யினால் மின்சாரம் வரவில்லை. ஆனால், ஊழல் நடைபெற்றுள்ளது. நிலக்கரி சுரங்கங் கள் முதலாளிகளுக்கு ஒதுக்கீட்டின் காரண மாக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட் சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஆகும்.
ஆந்திரா மாநிலம் கோதாவரி எரிவாயுப் படுகையை ரிலையன்ஸ் கம்பெனிக்கு கொடுத்ததின் மூலம் எரிவாயுவின் விலையை ஒப்புக் கொண்ட அடிப்படை யில் வழங்காமல் விலை யை உயர்த்திய தால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கள் தேசிய அனல்மின் கழகத் திற்கு நஷ்டம். இதனால் மின் உற்பத்தியின் செலவு கூடும்.
அரசுக்கு 45,000 கோடி ரூபாய் அள விற்கு வருவாய் இழப்பு. வரலாறு காணாத அளவிற்கு 32 மாநிலங்களிலும் மின்கட் டணம் உயர்த்தப் பட்டது. மின்சாரம் விற்ற வகையில் 90 ஆயிரம் கோடி ரூபாய் முத லாளிகள் லாபம் ஈட்டியுள் ளார்கள். ஆக இவை எல்லாம் சேர்த்து மின் சாரம் என்ற பொருளினால் முதலாளிகளுக்கு கிடைத்துள்ள வருமானம் 4 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.ஆனால் இதே காலத்தில் நமது அண்டை நாடான சீனா இருபது ஆண்டு களுக்கு முன்பு இரண்டு லட்சம்... மெகா வாட் மின் உற்பத்தி இருந்தது. தற்போது 9 லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை அடைந்து தலைக்கு 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் என்பது இருக்கிறது.
 சீனாவில் அனல்மின் நிலையங் கள்தான்70சதவீதமின்உற்பத்தியைஅளிக்கின் றன. அதற் குத் தேவையான நிலக்கரியை அந் நாட்டில் கிடைக்கும் நிலக்கரி உற்பத்தியைக் கொண்டு முடிந்தவரை ஈடுகட்டுகின் றார்கள். பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சீன அரசே நிலக் கரியை வெட்டியெடுத்து கொண்டு வருகிறது. அந்த நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. இந்தியாவைப் போன்று மின்சாரத்தைப் பார்க் காத கிராமங்கள் எதுவும் இல்லை.
அங்கு எப் படி இது சாத்தியமாயிற்று.?
மக்கள்நலன் முன் னிறுத்தப்படுவதே இதன் காரணமாகும். முதலாளித்துவ நலன்களுக்காக திட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை.நமது இந்தியாவில் இந்த ஆண்டும் மின் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். மத்திய எரி சக்தி துறையின் கணக்குப்படி 17 மாநிலங் களில் மின்பற்றாக்குறை நீடிக்கும். தென் மாநி லங்களில் குறிப்பாக தமிழகம், கர்நாடகா மாநி லங்களில் மின் பற்றாக்குறை 25சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த பற்றாக்குறை அதிகமாகாமல் இருக்க வேண்டுமென்றால் பருவகாலம் சரியாக அமைய வேண்டும். நிலக்கரி யானது அனல்மின்நிலையங்களுக்கு பற்றாக்குறை யின்றி கிடைத்திட வேண்டும்.
மின்பாதைகள் மாநிலங்களுக்கு இடையில் முழுமையாக அமைக்கப்பட்டு உபரியாக மின்சாரம் உள்ள மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங் களுக்கு கொண்டுவர ஏற்பாடு இருக்க வேண்டும்.ஆனால் நிலைமை நேர்மாறாக இருக்கிறது. கோல் இந்தியாவின் பங்குகள் விற்பனை மூலம் தொழிலமைதி கெடுவதற்கு வாய்ப்புள் ளது.
 இதனால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப் படும். வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி அதிக மாக்கப்பட்டுள்ளது. பணத் தின் மதிப்பு குறைவதால் நிலக்கரியின் விலைக்கு அதிகமாக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் மின்கட்டணம் உயரும். புதிய மின் தேவைகள் கூடு கின்ற பொழுது கிடைக்கும் மின்சாரத்தையே பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கும்.மின்சார உற்பத்தி என்பது சமூகம் சார்ந்த உற்பத்தி ஆகும். பூமியில் கிடைக்கும் நிலக் கரி அனைவருக்கும் சொந்தமானது. மின் உற் பத்திக்கு நிலக்கரி எரிக்கின்ற பொழுது உரு வாகும் கரியமில வாயுவானது காசு கொடுத்து மின்சாரம் வாங்குபவரை மட்டும் பாதிப்பதில் லை. மின்சாரம் பயன்படுத்துவோர் பயன்படுத் தாதவர் ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் பாராமல் அனைவரையும் பாதிக்கக்கூடியது. சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப் படுகின்ற காரணத் தினால் பூமியில் ஏற்படும் பல்வேறு பருவ கால மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கின்றது.ஆனால் அதனால் ஏற்படும் பயனை மட் டும் ஒருசிலரின் நலனுக்காக அளிப்பதானது நியாயமில்லை.
அனைவருக்கும் பகிர்ந்தளிப் பதே சரியான ஒன்றாகும். அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதற்கான வழியைப் பற்றி சிந்திப்பதற்கு உண்டான உயர்மட்ட ஆலோச னைக் குழுவானது மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஜோதி ஆதித்திய சிந்தியா தலை மையில் டாட்டா, ரிலையன்ஸ், அடானி, லேன்இகோ முதலாளிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள்தான் அனைவருககு மான மின்சாரம் வழங்குவது குறித்து திட்டம் தயாரிக்க உள்ளார்கள். முதலாளித்துவ நியாயம் தான் திட்டமாக முன்வரும்.
suran

இயற்கை கனிமவளங்கள் அழிந்து போவ தைப்பற்றியோ அளவுக்கு அதிகமான அள வில் மின்உற்பத்தி செய்து புவியை நாசமாக்கு வது பற்றியோ இவர்கள் கவலைப்படப்போவ தில்லை. மின்பற்றாக் குறையும் தீரப்போவதில்லை. மின்பற்றாக் குறைதான் லாபத்தின் முதலாளி களின் தூண்டிலாக இருக்கிறது.
இவைகளை யெல்லாம் தவிர்த்திட மின்தொகுப்பில் இணைக்கப்படாத காற்று, சூரிய சக்திகளை பயன்படுத்தி மின்சாரம் வீடுகளுக்கு பயன் படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 மின் இழப்பை சரி செய்திட வேண்டும்.
அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வழங்குவதுடன் தனியாரிடம் மின் உற்பத்தி யை வழங்குவதை குறைத்திட வேண்டும். மின் சார சிக்கனம் தேவையான ஒன்றாகும்.
 அனைவருக்கும் பாகுபாடின்றி மின்சாரம் வழங்குவதையும் அதை வாங்கும் சக்தி அள வில் வழங்குவதற்கான உத்தரவாதம் தேவை யாகும்.
மாநிலங்களுக்கு இடையான மின்சார பரிவர்த்தனை வணிகமாக இல்லாமல் கொடுக்கல் வாங்கல் முறையாக இருத்தல் வேண்டும்.

suran