எரிவாயு விலை உயர்வு.ஆபத்து.!


suran

எண்ணெய் நிறுவனங்கள் வரவைவிட செலவு அதிகம் என்று கணக்கு காண்பித்து “நட்டம்” எனவே கட்டுபடியான விலை கொ டுங்கள் என்று கேட்கவில்லை.
முதலீட்டை பெருக்கி காட்ட கப்பல் வாங்கியதில் கள்ளக் கணக்கெழுதி காட்டிய ரிலையன்ஸ் கூட “நட்டம்” என்று கிங்பிஷ்ஷர் மல்லையாபோல் புலம்பவில்லை.
 நாட்டுக்கு அவசியமான எரிவாயு உற்பத்தியை பெருக்க அந்நிய முத லீடு தேவை அதை கவரவே “கட்டுபடியான விலை” கேட்கிறோம் என்றன.
“நிபுணரான” முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் கட்டுபடியான விலை என்று கணக்கு போட்டு சிபாரிசு செய்ய இந் திய அரசும் பொதுத் துறையிலிருக்கும் , மின்சா ரம், உர அலைகள், இதர, ரயில்வே போன்ற நிறுவனங்கள் இனி உலக சந்தையில் நிலவும் விலையைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலை கொடுத்து எரிவாயுவை வாங்க எண் ணெய் நிறுவனங்களோடு மூன்று வருட முன் பேர வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளது.
இன்று ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் நிறுவனம், கெயிர்ன் இந்தியா(பிரிட்டன் தனியார் நிறு வனம்) என்ற மூன்று நிறுவனங்கள் இந்தியா வில் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த கூடுதல் விலை ஆங்கிலோ-அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய தூண்டும் என்று அரசு கூறுகிறது.அநேகமாக அடுத்த சில வருடங்களில் நமது மண்ணுக் கடியில் கிடக்கும் திட, திரவ, வாயு எரி பொருள் கள் நேட்டோ நாடுகளின் எண்ணெய் நிறுவ னங்கள் பிடிக்கு போய்விடும் ஆபத்து உள்ளது
. உலக அரசியலில் பெட்ரோலியத்தின் பங்கை இந்திய அரசு உணரமறுப்பது வேதனையே.இந்த விலை உயர்வால் அந்நிய முதலீடு எரிவாயுத் துறையில் பெருகி சக்தி பஞ்சத்தை போக்கும் என்று எக்னாமிக் டைம்ஸ், இந்தி யன் எக்ஸ்பிரஸ் எழுதுகின்றன.

suran
 ரிலை யன்ஸ்- பி.பி கூட்டாக (பிரிட்டீஷ். பெட்ரோலி யம் ஒரு பகாசூர மேலை நாடுகளின் பன் நாட்டு நிறுவனம். மெக்சிகோ வளை குடாவை எண்ணை கடலாக ஆக்கிய விபத்தை உரு வாக்கிய நிறுவனம்) முதலீடு செய்யப் போ வதாகவும் விரைவில் அமெரிக்க நிறுவனங் களும் வரப் போவதாகவும் அதே பத்திரிகை கள் தெரிவிக்கின்றன.
கிடுக்கிப்பிடி : இதை ஒட்டி ஒரு செய்தி என்னவெனில் சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க வெளி விவகார செயலாளர் ஜான் கெர்ரி இந்தியாவை பாராட்டிவிட்டுச் சென்றார். ஏன் தெரியுமா? ஈரா னிடமிருந்து இனி பெட்ரோலிய இறக்குமதி இல்லை என்று இந்திய அரசு அறிவித்ததை யே அவர் பாராட்டினார்.
 இதனால் இந்தியா பெட்ரோலியப் பொருட்களைதங்களிடமிருந்து வாங்க தள்ளப்படுகிறது என்பதை அறிந்தே பாராட்டினார். அவர் எதிர்பார்ப்பது போலவே நம்மூர் சந்தை நிபுணர்கள் அந்த உண்மையை பார்க்காமல் இந்த விலை உயர்வை “கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?” என்று கேட்பது போல் எழுதுகின்றன.“உங்களது சேமிப்பு பணத்தை குவிக்க வேண்டுமா ! தங்கத்தில் முதலீடு செய்வதோ, வேறு சரக்குகளில் முதலீடு செய்வதோ பாது காப்பானது என்று சொல்ல முடியாது அவைக ளின் விலைகள் தாறுமாறாக ஏறி இறங்கும். எரி வாயு பியுச்சரில் முதலீடு செய்யுங்கள், பாது காப்பானது, விலை ஏறுமுகமாகவேஇருக்கும், பணம் தானாக குவியும்” என்று இந்திய சரக்கு பியுச்சர் சந்தை நிபுணர்கள், மத்தியதர வர்க் கத்தின் காதுகளிலே தேனை பாய்ச்சுவது போல் ஓதுகின்றனர்.
 கவனம் முழுவதும் பண த்தை பெருக்க ஓடும்பொழுது இனி அந்நிய முதலீட்டால்வரும்இந்தியஎரிவாயுவின்விலை இரண்டு மடங்காக உயரப் போகிற எதார்த்தம் கண்ணில் படாது. டாலர் வரத்தைவிட டாலர் வெளியேறுவது அதிகப்படும் என்பதும் தெரி யாது. உணவுப்பொருளின் விலையும், எரிசக்தி விலையும் உயர்கிற ஒரு நாட்டில் பொருளாதா ரம் வளராது. வறுமையும் ஏற்றத்தாழ்வுமே வள ரும் என்ற உண்மையும் கண்ணில்படாது.

 “ டாலர் வரத்து குறைவால் ரூபாயின் மதிப்பு கீழே சரிவதை உடனடியாக தடுக்கவே அந்நிய முதலீட்டை வரவேற்க வேண்டிய இன்னொரு அவசியம் வந்துவிட்டது”என்று அரசு கூறுகிறது. அரசின் பிரதான நோக்கம் எரிவாயு உற்பத்தியை பெருக்கி தொழில் வளர்ச்சியை பேணுவதல்ல,அமெரிக்காவில் அச்சாகும் டாலர் தாளை உடனடியாக சம்பா திக்க வேண்டும் என்பதே.அதற்கு சுரங்கங்க ளையும், கனிமங்களையும் விற்பது ஒன்றுதான் வழி என்கிறது. நம்முடைய அரசின் பணப் புழக்க கோட் பாடுகளை உருவாக்கும் மேதைகளான சிதம் பரங்கள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள், அலுவலர் கள், மன் மோகன் சிங்குகள் இது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு விளக்கம் கொடுக்க கட மைப்பட்டவர்கள்.
இன்று எரி பொருளில் உள்நாட்டு உற் பத்தி நமது தேவையை பூர்த்தி செய்யவில் லை. 80 சத எரி சக்திக்கு இறக்குமதியை நம்பி இருக்கிறோம் என்று அவர்களே கூறுகிறார் கள்! டாலர் தேவையை குறைக்க உள்நாட்டில் பெட்ரோலிய வயல்களில்லிருந்து திட, திரவ, வாயு எரிபொருட்களின் உற்பத்தியை பெருக் குவதே மாற்று என்றும் அவர்களே கூறுகிறார் கள்! இப்படி கூறுகிற அரசின் நடவடிக்கை யால் விளையப் போவதென்ன?
 நம்முடைய கோதாவரி ஆற்றுப் படுகையில் நமக்கு சொந்த மான பெட்ரோலியப் பொருளை அந்நிய நிறுவ னங்கள் முதலீடு செய்து உற்பத்தி செய்ததை இரண்டு மடங்கு டாலரை கொடுத்து வாங்க வேண்டும்.
இப்படி ஒப்பந்தம் போடுவதால் யாருக்கு லாபம் என்பதை இந்த மேதைகள் விளக்கினால் நல்லது.டாலர் பின்னால் ஓடு கிறவனுக்கு புத்தி வேலை செய்யாது என்பத ற்கு இதைவிட வேறு சான்று தேவையா?
கடந்த பல ஆண்டுகளாக அந்நிய முதலீடு என்ற பெயரில் டாலர்கள் வரத்தானே செய்கி றது. வந்ததைவிட வெளியேறுவதுதானே அதி கமாக உள்ளது. இப்பொழுது இந்திய அரசை நம்பி யாரும் கடன் கொடுக்க முன்வருவ தில்லை.
 சொத்துக்களை கேட்கிறார்கள்.
மின் உற்பத்திக்கு அமெரிக்க என்ரான் நிறுவனத் தோடு 18 சதம் லாபமாக எடுத்துச் செல்லுகிற அளவிற்கு விலையை நிர்ணயிக்க சம்மதத் தோடு போட்ட ஒப்பந்தம் என்ன விளைவை கொண்டுவந்தது என்பதை அறிவோம். எரி பொருள் விலை உயர்வை காட்டி மின்சாரத் தின் விலையை என்ரான் உயர்த்தியது, மராட் டிய மாநில வரி வருவாய் முழுவதையும் டால ராக்கி கொடுத்தே அவர்களிடம் மின்சாரம் வாங்கும் நிலை வந்துவிடக் கூடாது என்ப தால் மூட நேர்ந்தது.

 இப்பொழுது அரசு போட்ட ஒப்பந்தத்தால் பொதுத்துறை மின்நிலையங் கள் அனைத்தும் எரிசக்திக்கு இரண்டு மட ங்கு விலை டாலரில் கொடுத்து ஓட்டவேண் டிய நிலை வரும்.இதனால் டாலரின் தேவை குறையாது கூடவே செய்யும். எதுஎதற்கோ எல்லை வகுக்கும் இன்றைய அரசின் இந்த முட்டாள்தனத்திற்கு எல்லையேஇல்லையா!

 இந்தியா “பெட்ரோலிய தொழில்நுட்ப ஞா னப்பஞ்சம்” உள்ள நாடு என்று ரிலையன்ஸ் கூறுகிறது. ஆங்கிலோ அமெரிக்க நிறுவனங்க ளின் கூட்டு முதலீடு இல்லாமல் எரிவாயு உற்பத்தியை பெருக்க முடியாது என்று சொல் கிறது.
அரசும் இதை ஏற்கிறது. இதைவிட இமா லயப் புளுகு வேறு எதுவுமில்லை. 1969ல் நிறு வப்பட்ட திப்ருகர் பல்கலைக்கழகம், முழுக்க முழுக்க பெற்றோலிய தொழில்நுட்பங்களை போதிக்கும் பல்கலை கழகமாகும். அது போ தாது என்று ரேபரேலியில் ராஜிவ் காந்தி பெய ரில் 2007ல் பெட்ரோலிய உயர் கல்வி ஆய்வுக் கழகம் உருவாகி ஞானத்தை போதிக்கிறது. இது தவிர , ஐ.ஐ.டி யிலும் பெட்ரோலிய தொழில் நுட்பங்கள் பாடங்களாக உள்ளன. உண்மை என்னவெனில் இங்கே பயின்றவர்களுக்கு இங்கே வேலை இல்லாததால் வெளி நாடுக ளிலே வேலை செய்வதை நாம் அறிவோம்.
இன்று அந்நிய செலாவணி சம்பாத்தியத்தில் அவர்களது பங்கும் உண்டு.அது போல் கருவி கள் கிடைக்காது, நம்மால் செய்யவும் முடியாது என்பதும் பொய்யே. சந்திரனுக்கு ராக்கெட் விடத் தெரிந்த இந்திய விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் வல்லுநர்களுக்கும் இந்த கருவி களை செய்யத் தெறியாது என்பது நம்ப முடி யாத பொய்.உண்மையில் பெட்ரோலியபொருள் தேடி எடுக்கிற தொழிலுக்கு அந்நிய முதலீடு அவ சியமில்லை.
 சில தொழில்களுக்கு அந்நிய முதலீடு தேவைப்படலாம். அது எதற்கு? அந்நிய சந்தைக்கென தயாரிக்கப்படும் சரக்கு களுக்கு அது தேவைப்படலாம்.உள் நாட்டு தேவைகளுக்கான சரக்குகளை உற்பத்தி செய்ய இந்தியாவிற்கு அந்நிய முதலீடு தே வையில்லை. உணவுப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட எரிசக்தி பாதுகாப்பு முக்கியம். நாட்டு சுதந்திரமே அதை நம்பி உள்ளது.ஒரு நாடு சுதந்திரமாக இருக்க விரும்பினால் எரிசக்தி அதன் கையில் இருக்க வேண்டும்.
வரலாறு போதிக்கிறது : இரண்டாம் உலகப்போரில் தோற்றுப் போன ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத்திவாதிகள் இன்று ஆராய்ந்து கூறுவதென்ன? எங்கள் கையில் சோவியத் எரிபொருள் சிக்கியிருந் தால் ஆங்கிலோ-அமெரிக்க படைகளை துவம்சம் செய்திருப்போம். நாங்கள் தோற்க நேர்ந்ததற்கு காரணம் எரிபொருள் தட்டுப் பாடே.
சோவியத் படைகள் எரிபொருளை தொடவிடாமல் தடுத்ததால் தோற்றோம் என்று தங்களது தோல்விக்கு எரி பொருளை உயிரினும் மேலாக நேசித்த சோவியத் ராணு வமே காரணம் என்கின்றனர்.
 இன்று உலக நடப்பை கவனி யுங்கள்.
 வெனிசுலா எண்ணை நிறுவனங் களை தேச உடமையாக்கி அதன் வருவாயில் 70 சதவீதத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் ஒதுக்கியள்ளது. இன்று பல மத்திய ஆசிய நாடுகளில் எண்ணெய் எரிவாயு வயல்கள் தேச உடமையாக உள்ளன.

அங்கும் மக்கள் மேலை நாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளையை எதிர்த்துப் போராடிவருவதை அறிவோம்.
இந்தியா எண்ணெய் வள நாடல்ல, இருக் கிற கொஞ்ச எண்ணெய் வளத்தையும் டால ருக்கு ஆசைப்பட்டு விவேகமற்ற முறையில் அந்நிய முதலீட்டிற்கு பலியிடுவது ஆபத்து.
suran

நன்றி:தீக்கதிர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மசோதா தோல்வி

அமெரிக்க குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தோல்வி அடைந்து விட்டது.
இதனால், இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
 இந்நிறுவனங்கள், அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்புவதில் சிக்கல் இருக்காது. 
suran
 அமெரிக்காவில் முறையாக விசா பெற்று, நீண்ட காலமாக வேலை பார்க்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர்.
அவர்கள் நிரந்தர வேலை உரிமைக்கான கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்து ஐந்து ஆண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.

  இந்நிலையில், சமீபத்தில் செனட் சபை, குடியேற்ற திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இது இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு பெரும் இடியாக இருந்தது. இந்த மசோதா சட்டமாக அமலானால், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் முன்பு போல ஆயிரக்கணக்கான ஊழியர்களை அங்கு அனுப்ப முடியாது. விசா கெடுபிடி இருக்கும். மேலும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் கிரீன் கார்டு மறுக்கப்பட்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும்.

  செனட்டில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா நேற்றுமுன்தினம் பிரதிநிதிகள் சபையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் பல திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்று பல எம்பிக்கள் கேட்டதை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேறவில்லை. அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை தருவது தொடர்பாக சாதகமான அம்சங்களை கொண்டதாக இந்த மசோதா உள்ளது.

ஹிஸ்பானிய இனத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்த மசோதா உள்ளது என்று லத்தீன் அமெரிக்க அமைப்புகள் தரப்பில் இருந்து எதிர்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்களுக்கு நெருக்கடி வந்துள்ளதால் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறவில்லை.

அமெரிக்காவில் உள்ள பல ஆயிரக்கணக்கானோரின் கிரீன் கார்டு பிரச்னையை தீர்ப்பது உள்பட பல  திருத்தங்களை மசோதாவில் சேர்க்க குடியரசு கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். அதனால் இப்போதைக்கு இந்த மசோதா ‘செத்து’ விட்டதாக கருதப்படுகிறது.
 இது இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் பயத்தை அறவே நீக்கியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்புவதில் சிக்கல் இருக்காது.
suran


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மின் கட்டண சுமை
----------------------------------------
இந்தோனேஷிய அரசு, குறைந்த கலோரி கொண்ட நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.
இது அமலுக்கு வந்தால், அதிக கலோரி கொண்ட நிலக்கரியை கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம், இந்திய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படும்.
இதனால்  இந்நிறுவனங்கள் விற்கும் மின்சாரத்தின் விலை உயர்ந்து, மின் கட்டண சுமையை,  அதிகரிக்க செய்யும்.
இந்தியாவில், அணு, அனல், புனல், காற்றாலை மற்றும் மரபு சாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. எனினும், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், பெரும் பகுதி, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.நாட்டின் மின்சார பயன்பாடு பெருகி வருவதற்கேற்ப, அதன் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்.
இதற்காக, பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் தீட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.அனல் மின் உற்பத்தியை பொறுத்தமட்டில், அதன் வளர்ச்சி, நிலக்கரியை சார்ந்துள்ளது. ஆனால், தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்காததால், அனல் மின் உற்பத்தியின் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.
இந்தியாவில், பொதுத் துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.

கடந்த 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி, 7.30 கோடி டன்னாக இருந்தது. இது சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 13.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நிலக்கரி இறக்குமதி, 33 சதவீதம் உயர்ந்து, 18 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்தியா, கிட்டத்தட்ட, 11 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.

 இதில், 70 சதவீதம் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதியாகிறது.
 2017ம் ஆண்டு, நிலக்கரிக்கான தேவை, 98 கோடி டன்னாகவும், உள்நாட்டு வினியோகம், 79.50 கோடி டன்னாகவும் இருக்கும் என, திட்டக் குழு மதிப்பிட்டு உள்ளது.ஆக, பற்றாக்குறையான, 18.50 கோடி டன் நிலக்கரி இறக்குமதிக்கு, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையே இந்தியா சார்ந்துஇருக்க வேண்டும்.
இந்திய அனல் மின் நிறுவனங்கள், இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதியாகும், குறைந்த எரிதிறன் (5,100 கிலோ கலோரி) கொண்ட நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தோனேஷியா, அதன் நீண்ட கால தேவையை கருத்தில் கொண்டு, குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியின் ஏற்றுமதிக்கு, வரும் 2014ம் ஆண்டு முதல் தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.
இந்த தடையால்  இந்தியா, ஆஸ்திரேலியாவில் இருந்து கூடுதல் செலவினத்தில்   நிலக்கரியைஇறக்குமதி செய்ய நேரிடும்.
இந்தோனேஷியாவை விட, ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்கான சரக்கு கப்பல் போக்குவரத்து செலவினம் அதிகரிக்கும்.

இதனால், டாட்டா பவர், அதானி பவர், லான்கோ இன்பிராடெக், ஜி.எம்.ஆர், எஸ்ஸார் பவர், என்.டி.பி.சி., போன்ற மின் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

இந்நிறுவனங்கள்  மின்சாரத்தின் விலையை உயர்த்தும். இந்த மின்சாரத்தை வாங்கும் மாநில அரசுகளின் மின் வினியோக வாரியம், அந்த சுமையை, மின் நுகர்வோரின் தலையில் சுமத்தும்.
இதன் மூலம் மக்களின் மின் கட்டண சுமை, கிட்டத்தட்ட, 5-20 சதவீதம் அதிகரிக்கும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------


suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?