சவால் விடும் குப்பைகள்....!!!
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வணிகப் பயன்பாட்டில் மட்டுமின்றி,
வீடுகளில் இருந்தேகூட, மறுசுழற்சி செய்ய முடியாத சிக்கலான கழிவுகளை ஏராளமாக
வெளியேற்றுவதால் அவற்றைச் சுத்திகரிப்பது அத்தனைச் சுலபமானதல்ல.
குப்பைக் கழிவுகளைக் கையாளுவது அத்தனை எளிதானதும் அல்ல, அதேநேரத்தில் தீர்க்க முடியாத பிரச்னையும் அல்ல.
ஏராளமான பிளாஸ்டிக், மின்னணுப் பொருள்கள் வீடுகளில் இருந்தே லட்சக்கணக்கான டன்களாக எல்லாவற்றுடன் கலந்து குவிகின்றன.
இத்தனைக்கும் மலைபோல் குவியும் இந்தக் குப்பைகளில் இருந்து அற்புதமான இயற்கை உரம் தயாரிக்க முடியும், எரிவாயு தயாரிக்க முடியும், இன்னும் கூடுதலாக மின்சாரமும் தயாரிக்கலாம் என்கிறார்கள். இவை அத்தனையும் அண்மைக்காலங்களில் அதிகவிலை கொண்ட, அரிதான விஷயங்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ரசாயன உரங்களில் இருந்து மீள, இயற்கை உரம் அவசியம். ஆனாலும் குப்பைகள் எரிகின்றன (எரிக்கப்படுகின்றன!). மிகவிரைவில் ஒரு எரிவாயு சிலிண்டர் ரூ. 1,000 ஆகப் போகிறது (மானியம் வந்தாலும் நட்டம் நமக்குத்தான்!). ஆனாலும் குப்பைகள் எரிகின்றன. மின்சாரமும் அப்படியே!
இதில் மின்சாரம் எப்படியோ, உரமும், எரிவாயுவும் சாத்தியமுள்ள அம்சங்கள்தான். ஆனால், மனித உழைப்பும், விசாலமான இடங்களும், விரிவான திட்டமும், கூடவே மிகஅரிதான பொறுமையும்தான் அவசியமாகத் தெரிகிறது.
பிளாஸ்டிக் பொருள்கள், மின்னணுக் கழிவுகள், இரும்பு உள்ளிட்ட மக்காத பொருள்களைப் பிரித்தெடுத்தல் அவசியம். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பணியில் கடுமையான தொய்வு. தெருக்கள்தோறும் வண்ண வண்ணத் தொட்டிகள் வழங்கப்பட்டதுதான் மிச்சம்.
இதற்கு என்ன காரணம்?
எப்படிப் பிரிப்பது எளிது - சாத்தியம்? என்பதை முடிவு செய்துவிட்டால் பாதி கிணறு தாண்டியதாகப் பொருள்.
பிளாஸ்டிக் பைகள், துண்டுகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிலோ ரூ. 3-க்கு வாங்கி, சுத்தப்படுத்தி அரைத்துக் கொடுக்கிறார்கள் கிலோ ரூ. 30-க்கு. ஊரக சாலைத் திட்டத்துக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக் துகள்கள் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. தேவை அதிகம் இருக்கிறது. ஆனாலும் குப்பைக் கழிவுகளுடன் கலந்து எரிகின்றன.
காய்கறி உள்ளிட்ட உணவுக் கழிவுகளை மண்ணில் புதைக்கப்பட்ட குடுவை போன்ற
ஓர் அமைப்புக்குள் செலுத்தி, மாட்டுச் சாணம் கரைத்து இதில் கலந்தால்,
எரிவாயு தயார். பல இடங்களில் இந்த முறை சாத்தியப்பட்டிருக்கிறது.
தொண்டு நிறுவனங்களின் பயிற்சி மையங்களில் இந்த முறையில்தான் எரிவாயுவைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. கழிப்பறையில் இருந்து மனிதக் கழிவையும் சேர்த்தால், தரமான எரிவாயு கிடைக்கிறது!
அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள், ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகங்களின் "கேன்டீன்', ஏன், தற்போதைய உணவகங்களுக்காகவும் இந்த முறையைக் கூடுதல் பணியாக மேற்கொள்ளலாம்.
வாய்ப்பு இருக்குமேயானால் விற்பனையும் செய்யலாம்!
அடுத்தது இயற்கை உரம். பரந்த நிலப்பரப்பில் மக்கும் கழிவுகளை திண்டு திண்டாகப் பரப்பி மேலே மாட்டு கோமியம் உள்ளிட்டவற்றைக் கலந்து தெளித்தால் அடுத்த மூன்று நாள்களில் மண்ணோடு மண்ணாகக் கலந்து தரமான உரம் தயார்.
இதைத் தயாரிக்கும் இடத்தில் எந்த துர்நாற்றமும் இல்லை.
இதையும் பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் செய்தும் வருகிறார்கள்.
இந்த முறைகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து செய்ய தனியாக ஒரு துறை அல்லது வாரியம் அவசியம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதைச் செயல்படுத்த கணிசமான பணியாளர்கள் தேவை. ஆய்வு செய்ய, கண்காணிக்க அதிகாரிகள், அதற்கான ஏற்பாடுகள் தேவை.
அரசு நிர்வாகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்தான். தொடக்க நிலையில்
கணிசமான கூடுதல் செலவும் அரசுக்கு வரலாம்.
ஆனால், இதைவிட்டால் வேறு கதி இல்லவே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். "டைஜெஸ்டர்' என்ற பெயரில் வரும் நவீன இயந்திரங்கள் இதைவிடவும் பெரும்பொருட்செலவைத் தருகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணுக்குள் புதைய விடுவதால் ஏற்படும் கேடுகளைவிட, இந்தப் பணி- செலவு பெரிதல்ல.
விவசாய உற்பத்திக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் தலைமுறை தலைமுறையாக மனித குலத்துக்கு ஏற்படும் கேடு.
ஜோசப் ஹெல்லெர் எழுதிய ‘கேச் 22’ என்ற ஆங்கில நாவலில் வரும் பாதிரியார் ஒருவர் ஒரு தந் திரத்தைக் கண்டு பிடிக்கிறார்.
துர்க் குணங்களை நற்குணங்களாக, திருட் டை கௌரவமாக, மிருகக் குணத்தை தேசபக்தியாக, அதே போன்று பிற ரைத் துன்புறுத்தி இன்பம் காண் பதை நீதியாக மாற்றுவது குறித்ததே அந்தத் தந்திரம்.
இதைச் செயல் படுத்துவதற்கு ஒருவருக்கு மூளை தேவையில்லை,
மனச்சாட்சியும், நேர்மையும் இல்லாமல் இருந்தாலே போதும் என்றும் அவர்
கூறினார்.
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு!அண்மையில், உத்தரகாண்டில் வெள்ளமும் மலைச்சரிவும் ஏற்பட்ட போது, இப்படி பி.ஜே.பி.கட்சிச் செயலாளர் ஒருவர் மிகப் பெரிய பொய்யை ஒரு ஆங்கில நாளேட்டு நிருபரிடம் அவிழ்த்து விட் டார்.
குஜராத் முதல்வர் மோடி தனது தனி விமானத்தையும், ஸ்போர்ட்ஸ் வாகனங்களையும் அனுப்பி, வெள்ளத் தில் சிக்கிய 15,000 குஜராத்தி பக்தர் களை இரண்டே நாட்களில் மீட்டு விட்டார் என்பதே அவர் கூறிய செய்தி.
இந்தப் பரபரப்பான செய்தி காட்டுத் தீயாக பரவிய போது, சங்கடமான கேள்விகள் பல எழுந்தன. 8000 ராணுவ வீரர்கள் மலைச் சரிவில் மீட்புப் பணியில் போராடிக் கொண் டிருக்கும் நிலையில், மோடியின் ஆட்களால் மட்டும் அவ்வளவு எளிதில் அந்த இடத்தினை எப்படி அடைய முடிந்தது?
விமானம் மூலம் எப்படி அவர்களை மீட்க முடிந்தது?
அதுவும் குஜராத்திகளை மட்டும் அடையாளம் கண்டு, 48 மணி நேரத் தில் அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தப் பொய்யை பி.ஜே.பியின் கூட் டாளியான சிவசேனா கூட ரசிக்க வில்லை. காப்பாற்றுவது என்று வரும் போது, எல்லாப் பக்தர்களையும் தானே காப்பாற்றியிருக்க வேண்டும், அது என்ன குஜராத்தி பக்தர்கள் மட்டும் என்பது போன்ற தார்மீகக் கேள்விகளும் கூடவே எழுந்தன.
பின்னர் போகிற போக்கில் இந்தச் செய்தியினை மோடி, அத்வானி போன்றவர்கள் மறுத்து விட்டார்கள்.
பொய்ச் செய்திகளைப் பரப்புவதும், கேள்வி எழுந்தால் சமாளிப்பதும் இந்தத் தந்திரத்தில் ஒரு பகுதியே.
ஊடகங்கள் இப்படித்தான் தன்னைப் பற்றி தவறாகப் பேசுகின்றன என்று சமாளிப்பதற்குக் கூட அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண் டார்கள். கேள்விகளே எழாவிட்டால், பொய்கள் செய்தியாக மாறி விடுகின்ற லாபம் இருக்கிறதல்லவா? எனவே தான் அதைத் தொடர்கிறார்கள்.
ராஜ மரியாதை!மற்ற அரசியல் தலைவர்களைப் போல மோடி சாதாரணமாக தோற்ற மளிக்க மாட்டார். எப்போதுமே, காரில் ஏறுவதற்கு முன்பு ஏதாவது ஒரு வரிச் செய்தியினை மைக்கில் சொல்லி விட்டுத்தான் காரில் ஏறுவார்.
ராஜா வரும் போது கொம்பு தாரை, தப்பட்டை என்று இருக்குமே அது போன்றதொரு ராஜ வரவேற்பு ஏற்பாடுகளை மோடி யின் ஆதரவாளர்கள் எப்போதும் செய்து வைத்திருப்பார்கள். அவர் மேடைக்கு வந்தவுடன் புன்னகை யின்றி, லேசாகத் தலையை அசைப் பார். அவரைப் பேச அழைக்கும் முன் பாக ஒருவர் அவரை வெகுவாகப் புகழ்ந்து பேசுவதற்கான ஏற்பாடு எப்போதும் இருக்கும். அதைக் கேட் டுக் கொண்டே, மோடி தனது தாடியை மெதுவாகக் கோதி விட்டுக் கொண்டே, எதிரில் தனது ஆதரவாளர்கள், எதிரி கள் என யார் யாரெல்லாம் இருக் கிறார்கள் என்று நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்.
பெரிய பாடகர்கள் மனதிற்குள் ராகங்களைப் பாடிக்கொண்டே பாடு வதற்கு வருவார்களே அது போன்று, அவர் பேசுவதற்கு முன்பாக, விஷயங் களை மென்று கொண்டே வருவார். பேசத் தொடங்கியவுடன் தான், அவ ரது சரடு திரிக்கும் திறமை உங் களுக்குப் புரியும்.
இவரைப் பொறுத்த மட்டில், முடிந்த வரை பத்திரிகை யாளர்களின் கேள்விகளைத் தவிர்த்து விடுவார்.
குஜராத்தின் பெருமை, குஜ ராத்திற்கு வரும் அந்நிய முதலீடுகள், மதக் கலவரத்தைத் தூண்டும் எதிர்க் கட்சிகள், பயங்கரவாதம், அதனை வேரறுக்க வேண்டிய தேவை, சிறு பான்மையினரைத் திருப்திப் படுத்தும் போக்குகள், சி.பி.ஐ அதிகாரத் துஷ் பிரயோகம் என பல விஷயங்கள் குறித்து அவர் பேசுவார். அவர் பேசு கின்ற அனைத்தும் 24 மணி நேரமும் உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு விடுகின்றன. இந்தப் பேச்சுக்களை முதலில் கேட்கும் போது அதை ஏற்க முடியாது. ஆனால், அதை மீண்டும் கேட்கக் கேட்க, ஒரு வேளை அது உண்மை யாக இருக்குமோ எனத் தோன்றும்.
கடைசியில் நமது நிர்ணயிப்புக்கள் குறித்து நமக்கே சந்தேகம் வரும் அளவிற்கு செய்திகளின் தாக்கம் அமைந்து விடும். எதிர்க்கேள்வியே பதிலாக…பத்திரிகையாளர்களின் கேள் விக்கு மோடி பதிலளிக்கும் பாணியும் வித்தியாசமானது.
“முஸ்லிம்கள் உங் களை ஏன் வெறுக்கிறார்கள்?” எனக் கேட்டால், தான் இமாம்களுடன் கை குலுக்கும் புகைப்படங்களைத் தூக் கிக் காண்பிப்பார்.
“அமெரிக்கா உங் களுக்கு ஏன் விசா மறுக்கிறது?” எனக் கேட்டால், “அமெரிக்க செனட் டர்கள் பலர் குஜராத் மாநிலம் குறித்து எவ்வளவு மதிப்பு வைத்திருக் கிறார்கள் தெரியுமா” எனப் பத்திரி கையாளர்களைத் திருப்பிக் கேட்பார்.
அதன் பின்னர், உலக வங்கி, சில பொருளாதார அறிஞர்கள் குஜராத் தைப் பற்றிப் பாராட்டிக் கூறியிருப் பதைப் பற்றிப் பேசுவார்.
சிலதவறான செய்திகளால் தவறான முடிவுகளுக்கு வந்து விடக் கூடாது என, பத்திரி கையாளர்களுக்கு சில சமயம் அவர் அறிவுரை கூறுவதும் உண்டு.
370 வது அரசியல் சாசனப் பிரிவு, ராமர் கோவில் என்று பல பிரச்சனை களில் அவரது வகுப்புவாதக் கருத்துக் கள் அனைவரும் அறிந்ததே. இருந் தாலும், தன்னை ஒரு தேசபக்தர் போல காட்டிக்கொள்ளும் பகீரத முயற்சிகளில் இறங்கி வருகிறார்.
அவரது அத்தகைய முயற்சியில் சிலர் பலியாவதும் உண்டு.
ஆனால், கூர் மையாக விஷயங்களைக் கவனிப் பவர்களை அவரால் ஏமாற்ற முடியாது.
மிரிணாள் பாண்டே
- தி ‘ஹிந்து’ - 11.07.13
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிநவீன திறன் கொண்ட கேமரா
- வை சீனா படைத்துள்ளது.
சீனாவின் அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கி வரும் ஆப்டிக்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட கேமராவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் தற்போது அவர்கள் 100 மெகாபிக்சல் ( ஒரு மெகா பிக்சல் என்பது 10 லட்சம் பிக்சல்களுடையது) திறன் கொண்ட கேமராவை உருவாக்கி சோதனை முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளனர்.
இந்த கேமராவில் 10,240ஓ10240 என்ற துல்லியத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த சிப் மிகவும் சிறியதாகவும், எடை குறைவானதாகவும் உள்ளது.
இதன் அதிகபட்ச பரப்பளவு 19.3 செ.மீ. ஆகும். மேலும், இந்தக் கேமராவை 20 முதல் 55 டிகிரி கீழ் உள்ள வெப்ப நிலையிலும் பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த கேமரா, வானியல் வரைபடம், நகரத் திட்டமைப்பு, பேரிடர் கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் உருவாக்கம் போன்ற பணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இக்கல்லூரியின் 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது 81 மெகாபிக்சல் கொண்ட கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்
செலவில், புதிய கட்டிடம் கட்டத் திட்டமிட்டுள்ளது.
மிகவும் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் நிறுவனமான Foster மற்றும் Partner நிறுவனம் இக்கட்டிடத்தை வடிவமைத்து வருகிறது. இக்கட்டிடத்தின் சிகரத்தில் வைக்கப்பட்ட சூரிய ஆற்றல் பலகை, இயக்கு ஆற்றலை வழங்கும்.
இக்கட்டிடம் UFO போன்றது [ விண் வெளி கலம்] என்று கூறப்படுகிறது.
இக்கட்டிடம் அமைந்துள்ள இடம், அமெரிக்காவின் Silicon Valley மையத்திலுள்ள பெரிய பூங்காவாகும். ஆப்பில் நிறுவனம் 30 கோடி அமெரிக்க டாலர் செலவழித்து, இவ்விடத்தை வாங்கியது.
13 ஆயிரத்துக்கு மேலான பணியாளர்கள் இக்கட்டிடத்தில் வேலை செய்ய முடியும்.
இக்கட்டிடத்தில், ஆயிரம் இருக்கைகள் கொண்ட மண்டபம், உள் அரங்கம், சுமார் 28 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஆய்வுப் பகுதி, தரைக்கடி வாகன நிறுத்த நிலையம் முதலியவை இருக்கின்றன.
இயற்கை எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட தூய்மையான எரியாற்றல் பயன்படுத்தப்படும்.
ஜெர்மனி நாட்டிலுள்ள சீலி நிறுவனம் இக்கட்டிடத்திற்குத் தேவையான கண்ணாடிகளைத் தயாரிக்கும். 6 சதுர கிலோமீட்டர் கொண்டகண்ணாடியைத் தயாரிக்க வேண்டும்.
இந்தக் கட்டிடம், 390 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நியூயார்கிலுள்ள புதிய உலக வர்த்தக கட்டிடத்தின் விலை மதிப்பைத் தாண்டியுள்ளது.
இது 2016ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிய வருகிறது.
===========================================================================
குப்பைக் கழிவுகளைக் கையாளுவது அத்தனை எளிதானதும் அல்ல, அதேநேரத்தில் தீர்க்க முடியாத பிரச்னையும் அல்ல.
ஏராளமான பிளாஸ்டிக், மின்னணுப் பொருள்கள் வீடுகளில் இருந்தே லட்சக்கணக்கான டன்களாக எல்லாவற்றுடன் கலந்து குவிகின்றன.
இத்தனைக்கும் மலைபோல் குவியும் இந்தக் குப்பைகளில் இருந்து அற்புதமான இயற்கை உரம் தயாரிக்க முடியும், எரிவாயு தயாரிக்க முடியும், இன்னும் கூடுதலாக மின்சாரமும் தயாரிக்கலாம் என்கிறார்கள். இவை அத்தனையும் அண்மைக்காலங்களில் அதிகவிலை கொண்ட, அரிதான விஷயங்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ரசாயன உரங்களில் இருந்து மீள, இயற்கை உரம் அவசியம். ஆனாலும் குப்பைகள் எரிகின்றன (எரிக்கப்படுகின்றன!). மிகவிரைவில் ஒரு எரிவாயு சிலிண்டர் ரூ. 1,000 ஆகப் போகிறது (மானியம் வந்தாலும் நட்டம் நமக்குத்தான்!). ஆனாலும் குப்பைகள் எரிகின்றன. மின்சாரமும் அப்படியே!
இதில் மின்சாரம் எப்படியோ, உரமும், எரிவாயுவும் சாத்தியமுள்ள அம்சங்கள்தான். ஆனால், மனித உழைப்பும், விசாலமான இடங்களும், விரிவான திட்டமும், கூடவே மிகஅரிதான பொறுமையும்தான் அவசியமாகத் தெரிகிறது.
பிளாஸ்டிக் பொருள்கள், மின்னணுக் கழிவுகள், இரும்பு உள்ளிட்ட மக்காத பொருள்களைப் பிரித்தெடுத்தல் அவசியம். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பணியில் கடுமையான தொய்வு. தெருக்கள்தோறும் வண்ண வண்ணத் தொட்டிகள் வழங்கப்பட்டதுதான் மிச்சம்.
இதற்கு என்ன காரணம்?
எப்படிப் பிரிப்பது எளிது - சாத்தியம்? என்பதை முடிவு செய்துவிட்டால் பாதி கிணறு தாண்டியதாகப் பொருள்.
பிளாஸ்டிக் பைகள், துண்டுகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிலோ ரூ. 3-க்கு வாங்கி, சுத்தப்படுத்தி அரைத்துக் கொடுக்கிறார்கள் கிலோ ரூ. 30-க்கு. ஊரக சாலைத் திட்டத்துக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக் துகள்கள் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. தேவை அதிகம் இருக்கிறது. ஆனாலும் குப்பைக் கழிவுகளுடன் கலந்து எரிகின்றன.
தொண்டு நிறுவனங்களின் பயிற்சி மையங்களில் இந்த முறையில்தான் எரிவாயுவைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. கழிப்பறையில் இருந்து மனிதக் கழிவையும் சேர்த்தால், தரமான எரிவாயு கிடைக்கிறது!
அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள், ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகங்களின் "கேன்டீன்', ஏன், தற்போதைய உணவகங்களுக்காகவும் இந்த முறையைக் கூடுதல் பணியாக மேற்கொள்ளலாம்.
வாய்ப்பு இருக்குமேயானால் விற்பனையும் செய்யலாம்!
அடுத்தது இயற்கை உரம். பரந்த நிலப்பரப்பில் மக்கும் கழிவுகளை திண்டு திண்டாகப் பரப்பி மேலே மாட்டு கோமியம் உள்ளிட்டவற்றைக் கலந்து தெளித்தால் அடுத்த மூன்று நாள்களில் மண்ணோடு மண்ணாகக் கலந்து தரமான உரம் தயார்.
இதைத் தயாரிக்கும் இடத்தில் எந்த துர்நாற்றமும் இல்லை.
இதையும் பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் செய்தும் வருகிறார்கள்.
இந்த முறைகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து செய்ய தனியாக ஒரு துறை அல்லது வாரியம் அவசியம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதைச் செயல்படுத்த கணிசமான பணியாளர்கள் தேவை. ஆய்வு செய்ய, கண்காணிக்க அதிகாரிகள், அதற்கான ஏற்பாடுகள் தேவை.
ஆனால், இதைவிட்டால் வேறு கதி இல்லவே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். "டைஜெஸ்டர்' என்ற பெயரில் வரும் நவீன இயந்திரங்கள் இதைவிடவும் பெரும்பொருட்செலவைத் தருகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணுக்குள் புதைய விடுவதால் ஏற்படும் கேடுகளைவிட, இந்தப் பணி- செலவு பெரிதல்ல.
விவசாய உற்பத்திக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் தலைமுறை தலைமுறையாக மனித குலத்துக்கு ஏற்படும் கேடு.
நன்றி:தினமணி.
மோடியின் பொய்களும்-
பத்திரிகையாள ஊது குழல்களும்!