நாய் வாலை நிமிர்த்த

முடியாது,
 நரேந்திரமோடியை திருத்த முடியாது.
 "மோடியை நாம் அதிகமாக விமர்சிக்க காரணம்,அவரை இந்திய பிரதம அமைச்சராக பா.ஜ.கட்சியினர் முன் நிறுத்துவதுதான்.
சாதிய,மத வெறியை மனதில் கொண்டுள்ள அடிப்படைவாதி மோடி.அவர் இந்திய பிரதமரானால் அதன் எதிர்காலம்.எண்ணவே பயமாக உள்ளது.அவர் குஜராத்தில் அப்படி  சாதித்தார் -இப்படி சாதித்தார் என்பதெல்லாம் வெறும் விளம்பர வெற்றுக் கூச்சல்.அதை இந்திய ஊடகங்கள் முன்னின்று செய்கின்றன.இந்திய ஊடகங்கள் இன்று யார் கையில் உள்ளன என்பதை அறிந்தால் இதன் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்."
குஜராத்தை கொலைக்கலனாக்கி குருதியில் குளித்தெழுந்த நரவேட்டை நரேந்திரமோடியின் கோர முகத்திற்கு ஒப்பனை செய்து அவரை சாந்தசொரூபியாகக் காட்டுவதற்கான முயற்சிகளை ஊடகங்கள் ஒருபுறம் செய்து வருகின்றன.
ஆனால் அவரது இயல்பான குணம் அடிக்கடி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பாஜக பரிவாரத்தால் பிரதமர் வேட்பாளராக தூக்கி நிறுத்தப்படும் அவர், அவ்வப்போது தனது திருவாயைத் திறந்து முத்துக்களை உதிர்த்தபடி இருக்கிறார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரான படுகொலையின்போது தமது அரசு சரியானவற்றைச் செய்ய முழு ஆற்றலுடன் செயல்பட்டதாகவும் தவறு எதுவும் செய்துவிட்டதாக தாம் வருந்தவில்லை என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்றுகுவித்த அந்த கொடூர நிகழ்வு அவருக்கு ஒரு தவறாகவே தெரியவில்லை.
suran
 மாறாக அது சரியானதாகவே தெரிகிறது என்றால் மதவெறியில் எந்த அளவுக்கு அவர் ஊறி மொதித்துப்போயிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும். தவறை சரியென்று அவர் கருதும் அளவுக்கு தவறுகளின் தொகுப்பாக அவர் இருக்கிறார். மதரீதியான வன்செயல்களின்போது, தமது அரசு முழு ஆற்றலுடன் செயல்பட்டதாக அவர் கூறுகிறார். அது உண்மைதான்.
அரசு எந்திரமும், காவல்துறையும் கூட சிறுபான்மை முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை பல இடங்களில் கைகட்டி வேடிக்கை பார்த்தது. சில இடங்களில் அவர்களே கூட அந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்டார்கள். நேர்மையாக செயல்பட்ட ஒரு சில அதிகாரிகள் முதல்வராக இருந்த மோடியினால் உடனடியாக தூக்கியெறியப்பட்டார்கள். இதைத்தான் தமது அரசு முழு ஆற்றலுடன் செயல்பட்டதாக மோடி பெருமிதம் கொள்கிறார்.
               “ஒரு காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு சிறு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்து விட்டால் நமக்கு வருத்தமாகத்தானே இருக்கும். நான் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நானும் ஒரு மனிதப்பிறவிதானே. சோகமான ஒன்று நிகழும்போது வருத்தம் ஏற்படுவது இயல்புதானே” 
என்று கூறியிருக்கிறார் மோடி. குஜராத்தில் நடந்த வன்செயல்கள் குறித்து உங்களுக்கு வருத்தம் ஏற்பட் டதா என்று கேட்டதற்குத்தான் இத்தகைய பதிலை கொஞ்சம்கூட நா நடுங்காமல் கூறியிருக்கிறார் இவர்.குஜராத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து கொலை செய்யப்பட்டதும், ஓடும் காரில் நாய்க்குட்டி அடிபட்டுச் செத்ததும் ஒன்றுதானாம்.
 இந்த அளவுக்கு மனச்சாட்சி இல்லாமல் அருவருப்பான முறையில் பேசுகிற ஒரு மனிதரின் இதயம் எந்த அளவுக்கு இருளடைந்து இருக்கும் என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.2002ம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலையின்போது தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகள் பத்தாயிரத்து 504, எரிக்கப்பட்ட கடைகள் பத்தாயிரத்து 429, தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி காலாஸ்கள் இரண்டாயிரத்து 623.வாழ்க்கையை இழந்து 103 நிவாரண முகாம்களுக்கு ஓடி வந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 13ஆயிரத்து 697. இந்திய வரலாற்றில் மிக மோசமான இந்த வன்முறையின்போது கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை முழுமையான தகவல் இல்லை.
எனினும் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
ஆனால் நரவேட்டை மோடியோ நாய்க்குட்டி அடிபட்டுவிட்டால் வருந்துவதைப் போல வருந்தினேன் என்று சர்வசாதாரணமாகக் கூறினார்.
suran
பாஜக செய்தித் தொடர்பாளரோ இந்த உவமை நரேந்திர மோடியின் குழந்தை உள்ளத்தைத்தான் காட்டுகிறது என்று உள்ளம் உருகுகிறது. அதாவது நாய்க்குட்டி இறந்துவிட்டால் குழந்தை எப்படி வருந்துமோ அப்படி இவரும் வருந்துவதாக, கோரப்பல் கொண்ட மோடியை இடுப்பில் வைத்துக் கொஞ்சுகிறது பாஜக. சரியானவற்றைச் செய்ததாக இப்போது இவர் கூறுகிறாரே, அப்போது அவர் கூறியது என்னதெரியுமா? முதலமைச்சர் நாற்காலியில் மட்டும் நான் இல்லாமல் இருந்திருந்தால் நானும் சில பேரைக் கொன்றிருப்பேன் என்பதுதான்.
அதுமட்டுமல்ல சிறுபான்மை முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டபோது, இவர் மூளை வளர்ந்து வெளியே தொங்குகிற விஞ்ஞானியைப் போல நியூட்டன் விதியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு இருக்கத்தானே செய்யும் என்றார். அதாவது கோத்ரா ரயில் பெட்டி எரிப்புக்கு பழிவாங்கும் படலம்தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் அவரது கணிப்பு.
கோத்ரா ரயில் எரிப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இன்றுவரை சர்ச்சை உள்ளது. ஆனால் அதற்கு பழிவாங்கும் வகையில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் பலாத்காரங்கள் அனைத்தும் “பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பன் வெளிப்பாடு” என்று கூறியவர் மோடி. அதுமட்டுமல்ல “இவையெல்லாம் மிகச்சிறிய நிகழ்ச்சிகள்” என்றும் நியாயப்படுத்தினார்.அப்போது பிரதமராக இருந்த பாஜகவைச் சேர்ந்த வாஜ்பாய், “எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி வெளிநாட்டுக்குப் போவேன்” என்று கூறினார்.
அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராய ணன் குஜராத் வன்செயல்கள் குறித்து இடித்துரைத்து பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதங்கள் எழுதினார்.இன்னமும் கூட ஆயிரமாயிரம் கண்ணீரின் வெப்பம் உலராத கதைகள் குஜராத் மண்ணில் கொப்பளித்தபடி உள்ளன. “கவுசார் பானு” என்ற கர்ப்பிணிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை நேரில் பார்த்தேன். பின்னர் அவளின் வயிற்றை வாளால் கிழித்தார்கள். 
கருவை எடுத்து தீயில் வீசியெறிந்தார்கள். பின்னர் வாளால் மாறி மாறி வெட்டினார்கள். பின்னர் அந்தப் பெண்ணையும் தீயில் வீசிவிட்டார்கள்” என்று ரேஷ்மா பென் என்ற பத்திரிகையாளர்கள்  எழுதினார்.
 கலவரத்தின்போது அசன்பாய் என்பவர் தன்னுடைய பிள்ளைகளைக் காப்பாற்றுமாறு போலீசாரிடம் சென்று கெஞ்சினார்.
ஆனால் அவர்களோ அவரை அடித்து உதைத்து ஓடுகிறாயா உன்னையும் எரிக்கவா? என்று மிரட்டினார்கள் என்று கூறிய நிகழ்வுகள் உள்ளன.
இதைத்தான் முழு ஆற்றலுடன் செயல்பட்டதாகவும், சரியானதைச் செய்ததாகவும் கூறுகிறார். கோத்ரா ரயில் எரிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2லட்சமும், அதன்பின் நடந்த வன்செயலில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.1லட்சமும் என நிவாரணத்தில்கூட பாரபட்சம் காட்டிய அரசுதான் மோடி அரசு. இன்னமும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றுதான் உண்மை.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படைச் சித்தாந்தமே பொய்யும் புனைசுருட்டும்தான். அந்தப் பள்ளியில் அட்சரம் படித்தவர் அல்லவா மோடி. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழு தமக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டதாகவும் பொய்யுரைக்கிறார் இந்த மனிதர்.
உண்மை என்ன?
மக்களிடையே பகைமையைத் தூண்டியதற்காக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தண்டிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவின் நிபுணர்களில் ஒருவரான ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார். போலி என்கவுண்டரில் முஸ்லிம் இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதற்காக பலமுறை நரேந்திர மோடிக்கு குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் இன்னமும் கூட வழக்குகள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதற்குள் உச்சநீதிமன்றம் நற்சான்றிதழ் வழங்கிவிட்டதாக தன்னைத் தானே புகழ்கிறார் இவர்.தம்மை ஒரு இந்து தேசியவாதி என்று கூறியுள்ளார் நரேந்திர மோடி.
 தாம் ஒரு இந்துவாக பிறந்ததால் இந்து தேசியவாதி என்றும் கூறுகிறார். இந்து தேசியம் என்பது ஒரு ஆபத்தான வார்த்தை. இவர் கூறும் இந்து தேசியம் என்பது இவரது கண்டுபிடிப்பல்ல. சாவர்க்கர், கோல்வால்க்கர் போன்ற ஆர்எஸ்எஸ்சின் ஆரம்பகால சித்தாந்தவாதிகள் உருவாக்கிய வார்த்தை அது. முற்றிலும் மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானது அந்த வார்த்தை.
 இந்து தேசியத்தில் சிறுபான்மை மக்களுக்கு இடமில்லை. ஒன்று அவர்கள் இந்துவாக மாறவேண்டும். அல்லது இந்தியாவை விட்டுவெளியேறவேண்டும் என்பதுதான் இந்து தேசியத்தின் அடிப்படை. இதை அவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.

suran
 மேலும் இந்து தேசியம் என்பது மனுவின் வர்ணாசிரம அநீதியை அடிப்படையாகக் கொண்டது.

 இந்து தேசிய வாதி என்று தன்னை அழைத்துக் கொள்வதன்மூலம் மோடி சில ஊடகங்கள் முன்னிறுத்துவது கூட தொழிற்வளர்ச்சியின் சிற்பி அல்ல, மாறாக ஊறி நாறிப்போன பழங்கால சமூகத்தை புனரமைக்க விரும்புகிற பத்தாம்பசலிதான் என்பது தெளிவு.

மோடி மனம் வருந்தவில்லை, திருந்தவுமில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபணமாகிறது. நாய் வாலை நிமிர்த்தினாலும் நரேந்திரமோடி திருந்த மாட்டார்.
                                                                                                                                                                                                    -தீக்கதிர் -------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?