குறுக்கு வழியில் அவசரச் சட்டம்!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளன.இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
 குடியரசுத் தலை வரும் வெள்ளியன்று (ஜூலை 5) இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.
மத்திய அரசு பின்பற்றும் நாசகர தாராளமய கொள்கைகளால் பொதுவிநியோக முறை சீர் குலைந்து கிடக்கிறது.
suran
மாநில அரசுகளின் ஒத்து ழைப்புடன் ஒருங்கிணைந்த பொதுவிநியோக முறையை வலுப்படுத்துவதன் மூலமே உண வுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற சிந்தனை மத்திய அரசிடம் இல்லை.
உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை மத் திய நிதியமைச்சர் சிதம்பரம் நியாயப்படுத்தி யுள்ளார். `உணவுப் பாதுகாப்பு மசோதா என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி யாகும்’ என்று அவர் உடுக்கு அடித்துள்ளார். ஆட்சிப் பீடம் ஏறிய நூறு நாட்களிலேயே விலைவாசியைக் குறைப்போம் என்று கூறிய காங்கிரஸ் கட்சிதான் விலைவாசி கொள்ளிக் கட்டையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியை அமைச் சர் சிதம்பரம் போன்றவர்கள் நினைவுப் படுத்துவது வெட்கக்கேடாகும்.
suran
காங்கிரஸ் கூட்டணி அரசு, ஆட்சியில் அமர்ந்து நான்கு ஆண்டு முடிந்த நிலையிலும் கூட உணவுப் பாதுகாப்பு குறித்து முறையான சட்டமுன்வடிவை முன்வைக்கத் தவறி விட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து அரசியல் கட்சிகளும், மாநில அரசு களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித் துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இதை விவாதத்திற்கு மத்திய அரசு முன்வைக்க வில்லை.
அனைத்துக் குடும்பங்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் உருப்படி யான திட்டம் மத்திய அரசிடம் இல்லை.
நகர்ப் புறங்களில் தினசரி ரூ.32ம், கிராமப்புறங்களில் ரூ.26 வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்ற கேலிக்கூத்தான மதிப்பீட்டுக்கு மத்திய திட்டக் குழு வந்துள்ளது. இத்தகைய மோசடியான வறுமைக்கோடு பட்டியலை ஆதாரமாக வைத்து உணவுப் பாதுகாப்பு மசோதாவை தயாரித்தால் அதன் கதி என்ன ஆகும்?மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து வெகுநாட் களாகிவிட்டது. கூட்டணி கட்சிகளும் கூடாரத் தைக் காலி செய்து ஓடிவிட்டன.
 அவ்வப்போது ஆட்களை விலை பேசித்தான் காலம் தள்ள வேண்டிய அவக்கேடான நிலைக்கு அரசு தாழ்ந்துவிட்டது.
இந்நிலையில் ஆட்சி அதி காரம் தனது கையில் உள்ளது என்ற மமதையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பாது காப்பு மசோதாவை குறுக்குவழியில் அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றத் துணிந்துள்ளது. அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர் தல் காங்கிரஸ் கட்சியை நடுங்க வைத்துள்ளது. ஏழைகளை ஏமாற்ற “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று வித்தை காட்டுகிறது. தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்தையும் தேர்தல் விளையாட்டுக்கு அது பயன்படுத்துகிறது.

"தமிழகத்தில் தற்போது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், எந்த பாகுபாடும் இல்லாமல், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் என, அனைவருக்கும் அரிசி வழங்கப்படுகிறது. மொத்தம், 2.25 லட்சம் குடும்ப அட்டைகள், தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 1.88 லட்சம் குடும்ப அட்டைகள் ஒவ்வொன்றுக்கும், இலவசமாக, 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இந்த அரிசியை தமிழக அரசு, 3 ரூபாய், 8 மற்றும், 20 ரூபாய் என, மூன்று விலைகள் கொடுத்து மத்திய அரசிடமிருந்து வாங்கி, மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்குகிறது. இதனால், தமிழக அரசின் மானிய சுமை, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாயாக உள்ளது.உணவு பாதுகாப்பு சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றினால், மாநில அரசுக்கு, கிலோ 3.50 ரூபாய்க்கு மட்டுமே மத்திய அரசு அரிசி வழங்கும்.

அப்படி வழங்கும் போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே, இலவச அரிசி வழங்க முடியும்.
வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்க முடியாது.
இப்போதைய வறுமைகோடு பட்டியல் உண்மையிலேயே ஏழைகளுக்கு இடம் இல்லாதவகையில் உருவாக்கப்பட்டுள்ளது.காரணம் தினசரி வருமானம் 23 ரூபாய் உள்ளவர்கள் மட்டுமே இதில் இடம் பெறமுடியும்.இன்றைய நிலையில் பிச்சை எடுக்கும் நிலையில் வாழ்பவர்கள் வருமானம் கூட இதை விட அதிகம்.
ஆக இந்த உணவு பாதுகாப்பு திட்டம் மிக மோசடியானது.மக்களை ஏமாற்றும் திட்டம்.
இவர்களுக்கு எல்லாம், இனி அரசி வழங்க முடியாத நிலை ஏற்படும். அதை சமாளிப்பது என்றால், தமிழக அரசு கூடுதல் விலை கொடுத்து, வெளிச்சந்தையிலோ அல்லது மத்திய அரசிடமோ அரிசி வாங்க வேண்டும்.அவ்வாறு வாங்கினால், தற்போதைய மானிய சுமை, மேலும் அதிகரித்து, 7,000 கோடி ரூபாயாக உயர்ந்து விடும்.
இதற்காவே, தமிழக அரசு இந்த சட்டத்தை எதிர்க்கிறது."மாநில அரசுகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளில், கை வைக்க மாட்டோம்' என, மத்திய அரசு சமாதானம் கூறினாலும், அவற்றுக்கு சட்டப்பூர்வமாக எந்த பாதுகாப்பும் இல்லை.
வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே இருப்பதால்இடது சாரிகள், தி.மு.க.அதிமுக,போன்ற பல்வேறு கட்சிகளும் எதிர்க்கின்றன.



---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாதுகாப்பின்றி அணைகள்

------------------------------------------


இந்தியாவில் மொத்தம் உள்ள 4,728 அணைகளில் 192 ஐத் தவிர மற்ற அனைத்தும் உரிய பாதுகாப்பின்றி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
suran
 உத்தர்கண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அணைகள் மீது கவனம் செலுத்தி நடத்தப்பட்ட சிஏஜி ஆய்வில், இந்தியாவில் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 8 மாநிலங்களில் உள்ள 192 அணைகள் மட்டுமே, அவசரகாலத் திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தியுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
இதனால், இந்தியாவில் மீதமுள்ள 4,536  அணைகள் போதிய பாதுகாப்பின்றி, அவசர கால நடவடிக்கைகள் ஏதும் இன்றி இருப்பதாக சிஏஜி அளித்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சளி, காய்ச்சல், இருமல் 
---------------------------------------

குளிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டில் உள்ள சமையலறை பொருட்கள் மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாமே.. பணமும் மிச்சம், நோயும் குணமாகிவிடும். சளி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் நீங்களே மருந்து தயாரித்து சாப்பிடலாம். வீட்டிலே என்னனென மருந்துகள் தயாரிக்கலாம் என பார்க்கலாமா.  
இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறு தொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம் நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போல தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்க விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒரு நாட்களுக்கு மூன்று வேளை இந்த நீரை பருகினால் தொண்டை வலி எளிதில் குணமாகும்.

ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கில் சளி வடிதல் பெரிய பிரச்சனையாக இருக்கும் இந்த பிரச்சனையை போக்க யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில் பயன்படுத்தலாம்.. எப்படி பயன்படுத்தலாம் யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயிலை நன்கு கொதிக்கும் சூடான நீரில் ஐந்து முதல் ஆறு சொட்டுகள் சேர்த்து போர்வையால் ஆவி வெளியே போகாதவாறு மூடிக்கொண்டுஆவி பிடிக்க வேண்டும். இதை மூன்று வேளை செய்தால் தலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் ஆவி வழியாக வெளியாகிவிடும் சளி பிரச்சனை நீங்கிவிடும்..

தேநீர் பருகியும் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம். அதாவது எல்டர்ஃப்ளவரில் தயாரிக்கப்படும் தேநீர் ஜலதோஷத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எல்டர்ஃப்ளவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது நேர்மறையான பண்புகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
suran
இதை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எல்டர்ஃப்ளவர் பூக்களை காய வைத்து சூடு நீரில் கொதிக்க வைத்து ஒரு கப் பூக்களை போட்டு தேயிலை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி பருகலாம் விருமம்பினால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்..

உடல் நலத்தை பாதுகாக்க வீட்டிலே இருக்குது பல மருந்துகள் அதனை தகுந்தவாறு பயன்படுத்தி நோய்களை போக்கலாம். பணத்தையும் சேகரிக்கலாம். இயற்கை மருத்துவத்தை விட சிறந்தது வேறெதுவும் இல்லை..

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
 ------------------------------------------------------------------------------------
பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்,[ ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903]
 தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
  • ரூபவதி
  • கலாவதி
  • மான விஜயம்
  • தனிப்பாசுரத் தொகை
  • பாவலர் விருந்து
  • மதிவாணன்
  • நாடகவியல்
  • தமிழ் விசயங்கள்
  • தமிழ் மொழியின் வரலாறு.
  • சித்திரக்கவி விளக்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------



உலகச்செய்திகள் இது.
--------------------------------------------

* இலங்கை வடக்கு மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்த அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளார்.

* பொலிவியாவில் உள்ள அமெரிக்க தூதரக்கத்தை மூட போவதாக அந்நாடு அதிபர் ஈவோ மொராலெஸ் எச்சரித்துள்ளார். அவர் பயணம் செய்த விமானம் ஆஸ்திரியாவில் கட்டாயமாக தரை இறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெனிசுவேலா மற்றும் ஈக்வடார் அதிபர்கள் இணைந்து பேரணி நடத்தினர். இதில் பேசிய ஈவோ மொராலெஸ், ஒற்றுமையாக இருந்தால் அமெரிக்க ஆதிக்கத்தை தோற்கடிக்க முடியும் என கூறினார்.

* ஜிம்பாப்வேயில் அறிவித்தபடி வரும் 31-ம் தேதி பொதுத் தேர்தலை நடத்த அந்நாட்டு நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து முர்சி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் சகோதரத்துவ கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

* எகிப்தில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என பிரான்ஸ் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

* இலங்கையில், 2006-ம் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய 12 கமாண்டோ வீரர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது.

* மெக்சிகோவில் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

* அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் 10 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து மாஸ்கோ விமான நிலையத்திலேயே தங்கியுள்ளார்.

* பெருவில் அரசின் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவர்கள் அந் நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தப்பட்டதற்கு பதிலடியாக மாணவர்களும் கற்களை வீசியதால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

* போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட கூட்டு தொழில்மண்டலத்தை திறப்பது குறித்து வட மற்றும் தென் கொரிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அணுஉலை:மின்சக்திக்கு 

        யுரேனியம் ஏன் ?

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, அணுசக்திக்கு எதிராக உலகெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘அணு’வை நினைத்து பயப்பட த்தேவையில்லை என்று விஞ்ஞானிகள் ஊக்கம் தந்தாலும், பாமர மக்களுக்கு இன்னும்  ‘கிலி’ குறைந்தபாடில்லை. இப்படி பாடாய்படுத்தும் அணுசக்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமமான யுரேனியம் பற்றி .

"யுரேனியம்" ஒரு வித்தியாசமான தனிமம்.
இதில் இருந்து வெளி யேறும் ஒளிக்கதிர்கள் மனித குலத்துக்குப் பயனளிக்கின்றன; அச்சுறுத்தவும் செய்கின்றன. யுரேனியத்தை 1789ல் மார்ட்டின் ஹெய்ன்ரிச் க்ளாப்ரோத் என்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார். தின்ம நிலையில்தான் இதைக் கண்டுபிடித்தார் அவர். அதற்கு அவர் முதலில் சூட்டிய பெயர் ‘யுரேனிட்’.
ஓராண்டுக்குப் பிறகு ‘யுரேனஸ்’ கோளின் நினைவாக ‘யுரேனியம்’ என்று பெயர் சூட்டினார். முதல் இதில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை இவர் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நூறாண்டு கழித்து பிரான்ஸைச் சேர்ந்த ஹென்றி பெக்யூரல் என்பவர் யுரேனியத்தில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
யுரேனியம் ஒளிவீசும் வெண்மை நிறம் கொண்ட தனிமம். காற்று மண்டலத்தின் தன்மையால் கருநீலமாக மாறும் தன்மை கொண்டது. தனிமங்களிலேயே இது அதிகக் கனமானது. ஒரு கன அடி யுரேனியம் 500 கிலோ எடை இருக்கும்.
ஆரம்ப காலத்தில் பட்டுத் துணிகளுக்குச் சாயம் ஏற்றவும், பீங்கான் பாத்திரங்களுக்கு வண்ணம் தீட்டவுமே இது பயன்படுத்தப்பட்டது. இன்று இதன் பயனும் பயமும் அளவிட முடியாதது!

யுரேனிய அணுக் கருவிலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஒளிக்கதிர்கள் மனிதகுலத்திற்கு மிகவும் பயன் அளிக்கின்றன. விவசாயம், தொழில், உயிரியல், மருத் துவம் போன்ற துறைகளில் அதிகளவில் இக்கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுரேனி யத்தை அழிவுக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபணமானது 1938ல்தான். அப்போது யுரேனியத்தை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்த இத்தாலியின் என்ரிக்கோ ஃபர்மி தலைமையிலான குழு, அணுக்கருவை நியூட்ரானுடன் சேர்த்து வெடிக்கச் செய்தபோது அணுக்கரு பிளவைக் கண்டுபிடித் தனர்.

இப்படி நியூட்ரான் வெடிப் பதால் யுரேனியம் அணுக்கரு இரு பகுதிகளாகப் பிளந்து விடுகிறது. இந்த அணுப்பிளவு பிரமாண்டமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அணுப் பிளவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அணுகுண்டு தான் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் வீசப்பட்டது.
 ஒரு நொடிப்பொழுதில் அந்நகரமே மண்ணோடு மண்ணானது.
 இதன் பின்புதான் யுரேனியத்தின் மதிப்பு உலக நாடுகளிடையே அதிகமாக உற்றுநோக்கப்பட்டது.

இப்போது அணுவை ஆக்கத் திற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளும் அணு மின்சார உற்பத்திக்காக அணுக்கருப் பிளவை பயன்படுத்துகின்றன.
30 லட்சம் பவுண்டு நிலக்கரியை எரிப்பதால் எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அது ஒரே ஒரு பவுண்ட் யுரேனியத்தில் இருந்து கிடைத்துவிடுகிறது.
அதனால்தான் அணுஉலைகளில் மின் உற்பத்திக்காக யுரேனியம் பயன்படுத்தப்படுகின்றது!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?