இதுவும் கவுரவ கொலைதான்.




இரு வரின் காதலை வைத்து அரசியல் செய்யும் ராமதாசும்,திருமாவும் இக்காதலை சாதிய பிரச்னையாக்கி பொது மக்கள் சுமுகத்தை கெடுப்பதை நிறுத்த வேண்டும் .இழவு வீட்டில் இக்காதலை கலவரத்திற்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் .
suran
இது போன்ற சாதி மாறிய,மதம் மாறிய காதல்கள் மதுரை வீரன் காலத்தில் இருந்தே நடக்கிறது.
தண் டிக்கவும் படுகிறது.
ராமதாஸ்-திருமா போன்றவர்கள் இது போன்ற காதலுக்கு சட்ட, ச மு க   பா துகாப்பை தர போராடட்டும்.
சாதாரண காதலை அரசியலாக்கி-அதை கலவரமாக்கி படுகொலைகள் செய்தது மிகக்கொடுமை.
இன்னமும் அதை சாதீய -அரசியல் பிரச்னையாக்குவது தமிழக மக்கள் சுமுக வாழ்வினை  திசை மாற்றி விடும்.
இவர்களால் வாழ்வையும்,உயிரையும் இழந்த திவ்யா-இளவரசனை மனதில் கொள்ள வேண்டும் .
இளவரசன் உயிர் இழக்க காரணமே இரு சாதி பெருசுகள் தான்.
இதுவும் கவுரவ கொலைதான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாம்சங் முதலிடம்,
-------------------------------

கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற பல இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து தங்களின் பல வகையான மாடல் போன்கள் மூலம் போட்டியிட்டாலும், முதல் இரு இடங்களை, நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களே கொண்டிருந்தன. 
தற்போது இந்த பலத்த போட்டிக்கு இடையே, மொத்த மொபைல் விற்பனையில், சாம்சங் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
 நோக்கியாவிடமிருந்து இந்த இடத்தை, சாம்சங் கைப்பற்றியுள்ளது. 
பல ஆண்டுகளாக,மொத்த மொபைல் விற்பனையில், தன்னுடைய அடிப்படை மற்றும் கூடுதல் வசதிகள் கொண்ட போன் மாடல்கள் மூலம், முதல் இடத்தைத் தக்க வைத்திருந்த நோக்கியா, அண்மையில் இரண்டாம் இடத்திற்குச் சென்று விட்டது. நோக்கியாவின் முதல் இடத்தைப் பெறுவதைத் தன் ரகசிய இலக்காகக் கொண்டிருந்த சாம்சங், இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும் ஐ.டி.சி. ஆய்வு அமைப்பு, அண்மையில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் படி 2013 ஆம் ஆண்டின், முதல் காலாண்டில், சாம்சங் 16 சதவீதப் பங்கினையும், நோக்கியா 15 சதவீதப் பங்கினையும் பெற்றுள்ளன. 
சாம்சங் வெற்றிக்கு அடிப்படை காரணம், இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை வேகமாக உயர்ந்து வருவதுதான். கடந்த ஓராண்டில் மட்டும், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 74 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவில் மட்டும் 33 சதவீதப் பங்கினை சாம்சங் கொண்டு, மொத்த மொபைல் போன் விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதனை உணர்ந்த நோக்கியா, ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் தன் லூமியா மாடல் மொபைல் போன்கள் மூலம் விற்பனையை உயர்த்தப் பாடுபட்டு வருகிறது. 
ஸ்மார்ட் போன் விற்பனையில், தன் பங்கினை நோக்கியா 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தப் பிரிவில், எச்.டி.சி. நிறுவனமும், தன் பங்கினை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த முயற்சித்து வருகிறது.
மொத்த மொபைல் போன் விற்பனை வருமானத்தில், ஸ்மார்ட் போன்களின் பங்கு 46 சதவீதமாக இருப்பதாக, ஐ.டி.சி. அறிவித்துள்ளது. 
அதே போல, மொபைல் போன்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 90 சதவீதம் பயன்படுத்தப் படுகிறது. மற்றவை வெறும் 10 சதவீத இடத்தைப் பிடிக்கவே போட்டியிட்டு வருகின்றன. 
சந்தைக்கு வந்த 6 கோடியே 10 லட்சம் மொபைல் போன்களில் 5 கோடியே 46 லட்சம் மொபைல் போன்கள் அடிப்படை மற்றும் கூடுதல் வசதிகள் கொண்டவையாகவும், 61 லட்சம் போன்கள் ஸ்மார்ட் போன்களாகவும் இருந்தன.

ஜிவி 2010 
---------------
 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
இது ஒரு கூடுதல் வசதி உள்ள மொபைல் போன். இதில் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதனை இலக்காகக் கொண்டு இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தினை எதிர்நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும்.
 ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும். ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர், அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ, அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர், அடுத்த எண்களை இதே போல அழைக்கும்.
இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய பார்மட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. 
சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லாக், ஆட்டோ கால் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டைலாக மெட்டலிக் மற்றும் குரோம் பூச்சு இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
 அதிக பட்ச விலை ரூ.1,699 .
இணைய தளங்கள் வழியாக.ரூ.1,350க்குக் கிடைக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Click Here

suran

Click Here





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?