நிதி பற்றாக்குறை...?

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 6.44 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.84,247 கோடியிலிருந்து ரூ.89,705 கோடியாக உயர்ந்துள்ளது.
 சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிகர நேரடி வரி வசூல் 47 சதவீதம் உயர்ந்து இருந்தது. ஆக, தற்போது வரி வசூல் வளர்ச்சி குறைந்துள்ளது.
அதேசமயம், மொத்த நேரடி வரி வசூல் 11.52 சதவீதம் உயர்ந்து ரூ.1,11,183 கோடியிலிருந்து ரூ.1,23,993 கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சியைக் காட்டிலும் இது 4.75 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் வாயிலாக ரூ.6.68 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் வரி வசூலை (ரூ.5.65 லட்சம் கோடி) காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வசூலான நேரடி வரிகள் நிதி ஆண்டிற்கான இலக்கில் 18 சதவீதம் ஆகும்.
எனவே, இந்த நிதி ஆண்டிற்கான இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரடி வரி வசூலில் நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, பங்கு பரிவர்த்தனை வரி, சொத்து வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும். மறைமுக வரி போன்று மற்றவர்கள் மீது திணிக்க முடியாது.
முதல் காலாண்டில் மொத்த நிறுவன வரி வசூல் 7.82 சதவீதம் மட்டுமே அதிகரித்து ரூ.70,594 கோடியிலிருந்து ரூ.76,115 கோடியாக உயர்ந்துள்ளது. இது, மொத்த நேரடி வரி வசூலில் 61 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக சரிவடைந்தது.
 கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால் தொடர்ந்து எட்டு மாதங்களாக கார் விற்பனை சரிவடைந்துள்ளது.
தனிநபர் செலவிடும் வருவாய் குறைந்துள்ளதால் நிறுவனங்களுக்கு வருவாய் வளர்ச்சியை நிலை நிறுத்துவது ஒரு சவாலாக உள்ளது. வட்டிச் செலவு அதிகரிப்பு, மூலப் பொருள் செலவு உயர்வு போன்ற காரணங்களால் நிறுவனங்கள் ஈட்டும் லாபம் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நிறுவன வரி வசூலில் ஒற்றை இலக்க வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தனிநபர் வருமான வரி வசூல் 18.53 சதவீதம் அதிகரித்து ரூ.39,569 கோடியிலிருந்து ரூ.46,903 கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த அளவுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் எண்ணிக்கை 42,800–ஆக உள்ளது. இதனையடுத்து, முதல் காலாண்டில் தனிநபர் வருமான வரி வசூல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

பங்கு பரிவர்த்தனை வரி நேரடி வரிகளின் கீழ் வருகிறது. பங்குகளை வாங்கும்போதும், விற்கும் போதும் இந்த வரியை செலுத்த வேண்டும். கடந்த 2004–05–ஆம் நிதி ஆண்டில் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் – ஜூன் மாத காலத்தில் இந்த வரி வசூல் ரூ.952 கோடியிலிருந்து ரூ.926 கோடியாக குறைந்துள்ளது.
 பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள அதிக ஏற்ற, இறக்கங்களே இதற்கு முக்கிய காரணமாகும். சொத்து வரி வசூல் 50 சதவீதம் உயர்ந்து ரூ.32 கோடியிலிருந்து ரூ.48 கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசும், வருமான வரித் துறையும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இந்த நிதி ஆண்டில் வரி வசூல் அதிகரித்து நிதி பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற நிதி ஆண்டில் வரி வசூல் குறைந்த நிலையில், செலவினமும் அதிகரித்ததால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.9 சதவீதமாக உயர்ந்து இருந்தது.
 இது இந்த நிதி ஆண்டில் 4.8 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.
இதனால், மத்திய அரசின் மானியச் சுமை உயர்ந்து நிதி பற்றாக்குறை  உயரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

கூடங்குளம் அணுமின்நிலையத்தில்,

 மின்உற்பத்திக்கான பணிகள் நள்ளிரவில் துவங்கின. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
suran
 முதலாவது உலையில், உற்பத்தியை துவக்கிய போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 2012 செப்டம்பரில், முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, உற்பத்தி தள்ளி வைக்கப்பட்டது.
 இந்நிலையில், முதலாவது உலையில் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு, உற்பத்தி துவங்கியது. அணுபிளவின் வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம், "டர்பன்' களை சுழலச்செய்து, மின்உற்பத்தி செய்யப்படும். பணிகள் துவங்கினாலும், முழு உற்பத்தி கிடைக்க, சில நாட்கள் ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

மைக்ரோமேக்ஸ் ஏ 111 கேன்வாஸ் டூடில்




மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மொபைல் போன், மைக்ரோமேக்ஸ் ஏ 111. இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. 
இதன் பரிமாணம் 147 x76.5 x 9.7 மிமீ. எடை 168 கிராம். 
இதில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டதாக இது இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. 
இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் 4 ஜிபி. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் உள்ளது. எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் இயங்குகிறது. வை-பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்குக் கிடைக்கின்றன. 8 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமராவும். 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இயங்குகின்றன. 
வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுத்தல் ஆகிய வசதிகள் கொண்டதாக கேமரா அமைக்கப்பட்டுள்ளது. எப்.எம்.ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன.
இதன் சி.பி.யு.வில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கின்றன. எம்பி3,எம்பி 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர் இயங்குகின்றன.
 இதன் பேட்டரி 2,100 mAh திறன் கொண்டதாக உள்ளது.
 ஒரு முறை சார்ஜ் செய்தால், 220 மணி நேரம் மின் சக்தி தக்க வைக்கப்படுகிறது. தொடர்ந்து 6.5 மணி நேரம் இதன் மூலம் பேசலாம். 
 போனின் விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?