உயரம் குறைவா....?


suran

 உங்களுக்கு உங்கள் உயரம் குறைவாக இருக்கிறது என்ற எண்ணமா?
உயர்வதற்கு சில உணவு வகைகளை இங்கு குறிப்பிடுகிறோம்.வளர்ந்தால் அதை மற்றவர்களுக்கு பரப்புங்கள்.அவர்களை உயர்த்திய பெருமை கிடைக்கும்.
உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர்.
 அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர். இத்தகைய உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும்.
மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது தான்.
 ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான்.
ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம்.
 இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
   விட்டமின் ஏ சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் விட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது.
இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.
புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

  உயரமாவதற்கு விட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது.
 வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும்.
எனவே விட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும்.
 மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
இவைகளை சாப்பிட்டும் வளரவில்லை என்றால் கோபம் கொள்ள வேண்டாம் .உங்கள் ஜீனில்[தலை எழுத்து ?] எழுதியது படிதானே நடக்கும்.
கவலையை விடுங்கள் வளர்ந்ததால் என்ன சாதிக்கப் போகிறோம்.?லால் பகதூர் சாஸ்திரி,அண்ணா எல்லாம் என்ன  உயரமானவர்களா.உயர்நிலையில் இருக்கவில்லையா?
-----------------------------------------------------------------------------------------------
முருங்கையின்  பயன்கள்
-----------------------------------------

சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே கூற வேண்டும். எண்ணற்ற வியாதிகளுக்கு ஏன்?அநேகமாக எந்த வியாதிக்குமே, பலவகைகளில் மருந்தாகிறது.

முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம்.

இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். அந்த ஒட்டு வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடியதாகவும் வளரும்.
murungai

முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடுவது வழக்கம்.

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். வட நாட்டில் இதை அதிகமாகச் சமைத்து உண்பதைக் காண்போம்.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!

முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?