வரும் ச [தி]வால்கள்.
ஆட்டோ மொபைல் தொழில் துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமாக இருந்து
வந்த மிச்சிகனின் மாகாணத்தின் டெட்ராய்ட் என்ற தொழில் நகரம் திவாலானதாக
அறிவிக்கக் கோரி மிச்சிகன் மாகாண ஆளுநர் சார்பாக நீதிமன்றத்தில்
மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா,
இந்த மனு சட்டவிரோதமானது, இது ஓய்வூதியதாரர்களை மிரட்டும் நடவடிக்கையாகும்.
எனவே திவாலனதாக அறிவிக்கக் கோரும் மனுவை மாகாண அரசு திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழில் நகரமாக மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரம் விளங்கி வந்தது.
உலக அளவில் ஆட்டோ மொபைல் தொழிலில் சிறந்து விளங்கி வந்த இந்த நகரம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வசித்த 2 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த நகரத்தை விட்டு வெளியேறி மாற்று இடங்களை தேடிச்சென்று விட்டனர். தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். அரசின் பொதுச்சேவைகள் முற்றிலும் செயலிழந்து இருக்கிறது.
நகரத்தில் இருந்து 78 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
கடந்த பத்தாண்டுகளாகவே இந்த நகரம் மிகப்பெரிய பொருளதார நெருக்கடியில் சிக்கி சரிவை சந்தித்து வந்தது. இதனை மீட்பதற்காக அமெரிக்கா அரசு பல்வேறு மீட்புத் திட்டங்களை அறிவித்து நிதி உதவி வழங்கி வந்தது. இருந்து போதிலும், அந்நகரம் முழுமையாக மீளவில்லை.
இதனால் தற்போது டெட்ராய்ட் நகரத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைக்கூட பாதுகாக்க முடியாமல் அந்நகர நிர்வாகம் திணறி வருகிறது. அந்நகரம் சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனில் மூழ்கியிருக்கிறது. இதில் ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை மட்டும் 900 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த நெருக்கடியின் காரணமாக நகர நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடியாமல் அந்நகரம் திணறி வருகிறது.இந்நிலையில் கடன்காரர்களுக்கு கடனை திருப்பித் தரும் நடவடிக்கை நகரத்தின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. பின்னர் கடன் திருப்பிச் செலுத்தவேண்டியவர்களை அழைத்து அவசாரகால மேலாளர் கெவியன் ஓர் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் ஒரு டாலருக்கு 10 சென்ட் என்ற அடிப்படையில் மட்டுமே தற்போதைய நிலவரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியும். இதனை அரசு நிர்வாகத்தில் இருந்து பணம் பெற வேண்டியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு இரண்டு ஓய்வூதிய திட்டங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், டெட்ராய்ட் நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து தக்க வைத்துக் கொள்ள, நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோருவதை தவிர வேறு வழியில்லை என கெவியன்ஓர் தெரிவித்ததோடு, பெடரல் நீதிமன்றத்தில் திவாலானதாக அறிவிக்கக் கோரி ஓர் மனுவை வெள்ளியன்று தாக்கல் செய்தார். அதில் நகரம் அதிக அளவில் கடனில் மூழ்கியிருக்கும் நகராக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் தற்போது ஓய்வூதியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை, மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை அரசின் சொத்துக்களை விற்று செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வகையில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த மெச்சிகன் பெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா இந்த மனு சட்டவிரோதமானது.
இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கையாக அமையும். எனவே தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மிச்சிகன் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மிச்சிகன் மாகாண ஆளுநர் ரிக் ஸ்டைர் தெரிவித்திருப்பதாவது: அவசர காலத்து மேலாளர் கெவியன்ஓர் திவால் அறிவிப்பை நீதிமன்றத்தில் இருந்து விரைவில் பெற்று வருவார்.
அதன் பின்னர் அரசின் சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் பணம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படும். நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து வேறுபட்ட நிலையில், அடிப்படையில் இருந்து மறு கட்டுமானத்தை நிறுவ வேண்டும். அதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
தற்போதைய அவசர நிதிதேவையை பூர்த்தி செய்ய திவாலானதை அங்கீகரித்து எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் அமிப்ருன்டேஜ் தெரிவித்திருப்பதாவது, டெட்ராய்ட் நகர நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். டெட்ராய்ட் நகர நிர்வாகத்தில் இருந்து பணம் பெறவேண்டியவர்கள் நகரத்தின் மிகத்தீவிரமான நிதிபற்றாக்குறை பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். நகரத்தின் மீட்புக்கு வெள்ளை மாளிகை முடிந்த அளவு உதவி செய்யும், டெட்ராய்ட் நிர்வாகத்திற்கு முழுமையாக துணை நிற்கும்.
அதன் மூலம்
டெட்ராய்ட் நகரை அமெரிக்காவின் மிக முக்கிய நகரமாக மீண்டும் நிலை
நிறுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் வெள்ளை மாளிகை எடுக்கும் என்று
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி இந்தியாவை இழுத்துச்செல்லும் மன்மோகன்-ப.சி,கூட்டம் இதை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லையா?கண்க்கில் எடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் பணியே அமேரிக்கா சொல்வதை அப்படியே எற்றுக்கொள்வதுதான்.இறங்கிய டாலரின் மதிப்பை எற்றத்தானெ இந்தியாவில் பெட்ரோலிய விலையை 10நாட்களுக்கு ஒருமுறை எற்றி விலைவாசிகளை பார்க்க வைத்து ரூபாயின் மதிப்பை இறங்க வைத்தது அமரிக்கா.
11ஆண்டுகள் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரபுலிகள் ஆட்சியில் இருந்தும் பணத்தின் மதிப்பு சரிந்து -பண வீக்கம்தான் அதிகரித்துள்ளது.அதை மன்மோகன் சிங்கே திறவா தன் வாயை திறந்து ஒப்புக்கொண்டு பயமில்லை என்று கூடவே அருள்வாக்கும் தந்துள்ளார்.
இதற்கு காரணம் என்.எல்.சி .பங்குகளை விற்காததுதான் .அதனால்தான் பணத்தின் மதிப்பு இறங்கி விட்டது என்றும் கூட சொல்வார்.ப.சி.க்கும்சொனியா,மன்மோகனுக்கும் பொருளாதர சீர்திருத்தம் என்றாலே லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் ,அந்நிய ர்களுக்கும் விற்று தீர்ப்பதுதான் .
இப்போது என்.எல்.சி.பங்குகளை தனியார்க்கு விற்பதை துத்திய பெருமை தனக்கும்,தனது தலைமையிலான ஆட்சிக்கும்தான் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லிவருகிறார்.அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் வருகிறார்கள்.இடதுகளும் குறிப்பாக தாபா.பரணி பாடி வருகிறார்.
ஆனால் வெற்றி பெற்றது என்.எல்.சி. தொழிலாளர்களோ,ஜெயலலிதாவோ அல்ல.
மன்மோகன் சிங் காங்கிரசு அரசுதான்.
அவர்கள் திட்டமீட்டது போல் 5%பங்குகளை வெளியெ விற்று விட்டார்கள்.இது அவர்களின் சாதனைதான்.பின்னர் இது போன்று தனியார்களுக்கு விற்பதூ எளிது .
ஜெயாவை நம்ப முடியுமா?
முன்பு ஸ்பிக் பங்குகளை முத்தையா செட்டியாருக்கு தாரை வார்த்தவ்ர்தான் இவர்.அதற்கு கையெழுத்திட மறுத்த சந்திரலேகா [இ.ஆ.ப.]மீது எழும்பூரில் வைத்து திராவகம் வீசப்பட்டதே.அதை மறக்க முடியுமா?
தமிழக அரசின் பல நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்ட பங்குகள் சத்தமின்றி,போராட வழியின்றி புழக்கடை வழியாக விற்கப்படும் நாளும் தூரத்தில் இல்லை.
மொத்தத்தில் என்.எல்.சி.பங்குகள் விற்கப்பட்டு விட்டன.தொழிலாளர்களை ஏமாற்றி விட்டனர்.
அதேபோல் இன்று ஓய்வூ திய பணம் கொடுக்க வலித்துப்போ ய் அமேரிக்கா ஒரு நகரையே திவால் என்கிறது.
அமேரிக்கா சொல்லியபடி இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்த மன்மோகன் சிங்கும் அந்த பணத்தை தனியார் குறிப்பாக அம்பானியின் ரிலயன்ஸ் கேப்பிடலில் கையடிக்கப்போகிறது .பின் தங்கள் பங்காக செலுத்திய பணத்தை கூட பெற முடியாமல் இங்குள்ள தொழிலார்களும்,அரசு ஊழியர்களும் தினறப்பொகிறார்கள்.அப்படி வரும் காலத்தில் நிச்சயமாக மன்மோகன் சிங் ஆட்சியில் இருப்பதும் சந்தேகம்.ஆனால் மக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும் ,அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமமும்,கையில் திவால் அறிக்கையும் மட்டும் நிச்சயம்.அதற்குத்தான் இந்த டெட்ராய்ட் வழி காட்டியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடனில் மூழ்குதா ?
-ஜி.சுரேஷ்
வெளிநாட்டு
கடன்களுக்கு வட்டிவிகிதம் குறைவு என்பதால் சாலை, சாக்கடையென அனைத்து
திட்டங்களுக்கும் வெளிநாட்டு கடனை மத்திய அரசு வாங்கிக் குவிக்கிறது.
புதியப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது
என்றும் 10சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது லட்சியம் என்றும் கூறி வந்த
மத்திய அரசு அதற்காக நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட் பகாசுர கம்பெனிகள்
வெளிநாட்டிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி டாலர் வரை குறுகிய கால கடன்
வாங்கி கொள்வதற்கு அனுமதியளித்தது. நமது நாட்டின் வட்டிவிகிதத்தோடு
ஒப்பிடும்போது வெளிநாட்டு கடனுக்கான வட்டி குறைவு என்பதால் கார்ப்பரேட்
கம்பெனிகள் பெரும் தொகை கடன் பெற்றன.
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் ஏற்றுமதியை அதிகரித்து கடன்களை அடைக்கலாம் என்று நிதியமைச்சகம் கருதியது. ஆனால் நேர்மாறாக நடந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் கண்ட பொருளாதார வளர்ச்சியின் மிக குறைந்த அளவு வளர்ச்சியால் கனவு பொய்த்து போனது. ஏறத்தாழ 32 ஆயிரம் கோடி டாலர் வெளிநாட்டிலிருந்து கடன்பட்டுள்ளோம். 2014 மார்ச் 31க்குள் 17,200 கோடி டாலா வெளிநாட்டுக் கடனை அடைத்தே தீரவேண்டும். நமது கையிருப்பின் 60 சதவீதம் எடுத்தால் மட்டுமே இக்கடனை அடைக்க இயலும். இப்படி செய்ய நேரிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துவிடும்.
2002 - 03 நிதியாண்டில் இந்திய நாட்டின் வெளிநாட்டு குறுகிய கால கடன் அந்நிய செலாவணி இருப்பின் 5.1 சதவீதமாக இருந்தது.
2008 -09 இது 14.8 சதவீதமாக வளர்ந்து தற்போது 60.1 சதவீதத்தில் எட்டி நிற்கிறது.கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு கடைப்பிடித்து வந்த பொருளாதார கொள்கையால் 1990-91 ம் ஆண்டில் மெக்சிகோ, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் சந்தித்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒப்பான ஆபத்தான நிலையில் நமது பொருளாதாரம் எட்டியுள்ளது.
1990 ல் நமது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அன்றைய பிரதமர் ரிசர்வ் வங்கியிலிருந்து 47டன் தங்கத்தை யூனியன் பாங் ஆப் இங்கிலாந்திலும் 20 டன் தங்கத்தை யூனியன் பாங் ஆப் சுவிட்சர்லாந்திலும் அடகு வைத்தனர்.
அதுவரை இருந்த பொருளதாரக் கொள்கைதான் அத்தகைய நிலை ஏற்பட காரணம் என்றும் இந்தியாவை வளர்க்க புத்தம் புதிய கொள்கை கொண்டுவருவதாகவும் அதன்பிறகு நிதியமைச்சரான இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்ந்து வந்தஅரசுகள் காங்கிரஸ் பாரதிய ஜனதா என்ற பேதமில்லாமல் அதே கொள்கையை கடைபிடித்தனர். இதுதான் இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணம்.இறக்குமதியோடு ஒப்பிடும்போது ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.இதனால் பற்றாக்குறையும் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. 2014 மார்ச் இறுதிக்குள் 17,200 கோடி டாலர் வெளிநாட்டு கடன் அடைக்க என்ன செய்யபோகிறது மத்திய அரசு.
இறக்குமதியை கட்டுப்படுத்தியும் ஏற்றுமதியை ஊக்குவித்தும், இப்பிரச்சனையை சமாளிக்க இன்றைய நிலையில் இயலாது. அடுத்த ஒரு வழி மேலும் கடன் பெறுவதுதான். கடந்தாண்டு 8500 கோடி டாலருக்கான கடன் பத்திரங்களை யுஎஸ் மத்திய வங்கி வழங்கியது. ஆனால் கடன் பத்திரங்களை பெற்று கூடுதல் தொகை வழங்கி வந்த அமெரிக்கன் மத்திய வங்கி கடன் வழங்குவதை சுருக்கியுள்ளது. மற்ற நாடுகளும் பெரும் தொகை கடன் வழங்கும் நிலையில் இல்லை. ஒரு வேளை கடன் கிடைத்தாலும் வேறு பிரச்சனைகள் உள்ளது.
யு.எஸ். மத்திய வங்கியின் வட்டிவிகிதம் உயரும் நிலையில் உள்ளது.
தற்போதுள்ள ரூபாயின் மதிப்பு சரிவும் இத்துடன் வட்டியும் உயர்ந்தால் ஏற்கனவே கடன் வாங்கிய கம்பெனிகள் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்புள்ளது. இது தொழில் துறை வளர்ச்சியை தடுக்கும். அதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் ஆபத்து ஏற்படலாம். இதே நிலை தொடர்ந்தால் பொருளாதார பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதும் இந்திய நாட்டு பொருளாதார அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நேரிடும். இது நமது பொருளாதாரத்தை 1990 விட மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லலாம்.
1990 களில் துவங்கி அமலாக்கிவரும் கொள்கையால் இந்தியாவில் பல கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் உலகிலேயே ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளில் 40 சதவீதம் இந்தியாவில் உள்ளனர். பிறக்கும் போதே 32 சதவீதம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பிறந்து 47 சதவீதம் இறந்துவிடுகின்றது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் 4 வயதிற்குட்பட்ட 2 லட்சம் குழந்தைகள் மரணமடைகின்றனர் என்பதும் சாதாரண ஏழை, எளிய மக்களின் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது என்பதும் பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளது.
மன்மோகன் சிதம்பர பொருளாதார கொள்கை நாட்டு மக்களுக்கு உதவவில்லை. இன்று நாட்டை கடனில் மூழ்கடித்துள்ளது. ஆனாலும் இதே நாசகர கொள்கைதான் தொடருவோம் என்கிறார்கள்.
மாற்றத்துக்கான தேடல் உடனடி தேவை.

கட்டுரையாளர் :
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்சன் ரோபிசலா மண்டேலா. ============================
மண்டேலாவின்
முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா.
நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக
அழைப்பார்கள்.
1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில்
உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா
பழங்குடி மக்கள் தலைவர்.
அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது.
மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள். தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார். மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. “மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:- “இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
நன்றி :abulbazar.blogspot.com
|