தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் மழை ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு. மையம் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மழை பெய்யும் - வானிலை மையம்.
சமையல்சிலிண்டர் முதல் பாஸ்டாக் பாட்டில்வரை இன்று முதல் எல்லாமே விலை ஏறுது.
சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன்.. அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு இன்று காலை விசாரணை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறை தான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது - முதல் 3 இடத்துக்குள் தமிழ்நாடு வர திராவிட மாடல் அரசின் மேம்பாட்டு நடவடிக்கை தான் காரணம் - அமைச்சர்உதயநிதி .
CAA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது- எடப்பாடி.பழனிசாமி.
அ.மலைபாதயாத்திரையின்போது பாஜக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்..
தமிழ்நாடு அரசின் திட்டங்களை QR Code-ஐ ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட் உத்திரவு.
மும்பை பெருநகர மாநகராட்சி தொகுதி நிதி ஒதுக்கீடு.2003-ல் பாஜக, ஷிண்டே அணி எம்எல்ஏக்களுக்கு ரூ.500 கோடி. எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு ரூ.1 கூட வழங்கப்படாதது அம்பலம்.
IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகர்கோயில் செல்லவிருந்த பயணத்தை IRCTC இணையதளத்தில் ஸ்ரீதரன் ரத்து செய்துள்ளார். இணையதளத்தில் For Help-ல் இருந்த 9832603458 என்ற எண்ணில் தனது பணத்தை மீண்டும் அனுப்ப ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
எதிர்முனையில் பேசியவரிடம் ஏடிஎம் கார்டு விவரங்களை ஸ்ரீதரன் கூறிய நிலையில் வங்கி கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணையில் IRCTC இணையதளத்தில் இருந்த மொபைல் எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை என தெரியவந்தது. இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிகளின் வளர்ச்சி
உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை 2024 இல், பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் அதிகமான போலிச் செய்திகள் பரவும் என்றும், அதன் எதிரொலியாகத் தேர்தல் செயல்முறைகளே சீர்குலையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ போலிச் செய்திகளும், வதந்திகளும் வளர்ந்திருக்கின்றன.
2023 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் 15 ஆவது இடத்திலிருந்த இந்தியா, தேர்தல் நடைபெறவுள்ள இந்தாண்டு முதலிடத்திற்கு வந்திருக்கிறது.
இதன் பெருமை பாஜகவின் டிஜிட்டல் கூலிப்படைகளைத் தான் சாரும். அதில் ஒன்றிய அமைச்சர்கள் துவங்கி அடிமட்ட சங்பரிவார் உறுப்பினர் வரை யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாட்ஸ்ஆப், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம், யுடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுவது தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக வார்த்தைகளை விட பார்வையாளர்களை, படங்கள் மற்றும் வீடியோக்கள் 60 ஆயிரம் மடங்கு அதிக வேகத்தில் ஈர்க்கின்றன.
செயல்படவும் வைக்கின்றன என்கின்றன ஆய்வுகள். சுருக்கமாகக் கூறுவதென்றால், சமூக வலைத்தளங்கள் சிந்தனையை விட உணர்வுகளின் அடிப்படையில்தான் அதிகமாகச் செயல்படுகின்றன. இதைப் பயன்படுத்தியே இந்தியாவில் வலதுசாரிகள் சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டிவிட்டும், அதன் அடிப்படையில் போலியான செய்திகளைப் பரப்பியும் ஆதாயம் அடைகின்றனர். பொய்களைப் பரப்புவதில் மட்டுமல்ல, போலிகளிலும் எப்போதும் பாஜகதான் முதலிடம். அதிலும் பிரதமர் மோடி முதல்வராக இருந்த குஜராத்திற்குத் தனி இடம்.
போலி சுங்கச்சாவடி, போலி அரசு அலுவலகங்கள் எனத் துவங்கி போலி பிரதமர் அலுவலக அதிகாரி வரை போலிகளில் முத்திரை பாதித்த மாநிலம் குஜராத்தான். அங்குள்ள மோர்பியிலிருந்து கட்ச் வரையிலான நெடுஞ்சாலையில் வகாசியா சுங்கச்சாவடி போலியான ஒன்று என்று ஓராண்டிற்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் தினந்தோறும் 2 ஆயிரம் வாகனங்கள். ரூ.20 முதல் ரூ.200 வரை வசூல். இதைச் செய்தது வேறு யாருமல்ல, பாஜக மாவட்டத் தலைவர் தர்மேந்திரசிங்.
குஜராத்தின் தாஹோட் மற்றும் தபோ மாவட்டத்தில் மட்டும் 6 போலி அரசு அலுவலகங்களை 7 ஆண்டுகளாக நடத்தி வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சந்தி சிரித்தது.
இதில் இந்த போலி அலுவலகங்களுக்கு அம்மாநில அரசு ரூ.21 கோடியும் வழங்கியிருக்கிறது. இதுதான் மோடி முன்வைக்கும் டிஜிட்டல் இந்தியாவின் அதிநவீன வளர்ச்சி.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...