ஒரு சோறு பதம்

 மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசுப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம்.

வேகமாக வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசியதாக சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது.
மோடிக்கு ஓட்டு போடாதீங்க!
ஜனநாயகத்தை படுகொலை செய்து,
இனி தேர்தலே இருக்காது!இதுவே,
மோடியை, பாஜகவை வீழ்த்த கடைசி வாய்ப்பு! என சொன்னதால்
CBIரெய்டு விட்டு மிரட்டும் மோடி!


ஒரு சோறு பதம்

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்று பாஜகவின் தேர்தல் தில்லு முல்லுக்கு சண்டிகர் மேயர் தேர்தலே சாட்சி. 


‘’ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வளவு வெளிப் படையாக ஒரு குற்றத்தைச் செய்து விட்டு; உச்ச நீதிமன்றத்தில் நேரில்  ஆஜராகி அப்பட்டமான பொய்யையும் கூறி விட்டு மிகத் தைரியமாக இருக்கிறார் என்றால், இது யார் கொடுக்கும் தைரியம் என்ற கேள்வி எழாமல் இல்லை’’ என பாஜகவின் சதியை உச்சநீதிமன்றம் சரியாகவே  அம்பலப்படுத்தியிருக்கிறது.

 உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர் களையும் குதிரை பேரத்தின் மூலம் பாஜக வாங்கி யிருக்கிறது.

 இதிலிருந்தே அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

 அதை உணர்ந்துதான் உச்சநீதிமன்றமும், முறை கேடு நடந்த மேயர் தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்தலை நடத்தச் சொல்லவில்லை. மாறாக, தேர்தல் அதிகாரியை நேரில் வரவழைத்து தலைமை நீதிபதியே குறுக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

இது இந்திய வர லாற்றில் இதுவரை இல்லாத ஒன்று.  

“தேர்தலில் ஜனநாயகம் நசுக்கப்படுவதைத் தடுக்க நாங்கள் அரசியல் சாசன விதி 142-ஐ பயன்படுத்தியிருக்கிறோம். 

தேர்தல் அதிகாரி யால் பாஜகவிற்கு ஆதரவாக சிதைக்கப்பட்ட 8 ஓட்டுக்களையும் சேர்த்து, ஆம்ஆத்மி வேட்பா ளர்  மேயராக வெற்றிபெற்றதாக அறிவிக்கி றோம்.

 ஜனநாயக செயல்முறையில்  இது போன்ற சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு, தேர்தல் அதிகாரி அனில் மாஷி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், முறைகேட்டில் ஈடுபட்டதற்காக குற்றவியல் வழக்கும் பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்ற நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர்.  

இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

ஆனாலும் பாஜக திருந்தப் போவதில்லை. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தையே பாஜகவின் தலைமை அலு வலகமாக மாற்றும் பணி பெரும்பகுதி முடிந்து விட்டது.

 அதற்கு ஓர் உதாரணம் 2019 தேர்தலில் 216 தொகுதியில் வாக்குகள் எண்ணும்போது எந்திரங்களில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டன. 

126 தொகுதிகளில், பதிவான வாக்குகளை விடக் குறைவான வாக்கு களே எண்ணப்பட்டன. 

இப்படி மோசடி செய்துதான் பாஜக 37 சத விகித வாக்குகளைப் பெற்று மோடி பிரதமரானார்.

  இந்த வாக்கு இயந்திர  தில்லுமுல்லுகளைத் தடுக்கவே இந்தியா கூட்டணி  தேர்தல் ஆணை யத்தைச் சந்திக்க நேரம் கேட்கிறது. ஆணையமோ சந்திக்க மறுக்கிறது.

 இந்த தேர்தல் ஆணையம் எப்படி நேர்மையாகத் தேர்தலை நடத்தும் என நம்ப முடியும்? 

மக்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?