முதல் தவறைச் செய்த

 கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதி இல்லை என பயணிகள் புகார்.

டெல்லியில் நாளை மறுநாள்  விவசாயிகள் மாபெரும் போராட்டம்.

ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்!

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம்.

நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.பா.ஜ.க,அரசின் கடைசி நாள்?

 "இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் பாஜக ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்"- திருச்சி சிவா,

வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் -ஏ.சி.சண்முகம் .

ஜோதிடரைபார்க்கஅடிக்கடிஹெலிகாப்டரில்  பயணம்: மறைந்த முதல்வர் தருண் கோகாய் மீது பா.ஜ குற்றச்சாட்டு.

கட்சித்தலைவர் நட்டாவை சந்திக்க கூட்டணி கட்சி தலைவர்கள் மறுப்பு: பாஜ அதிர்ச்சி .


விருதுகள் அனைத்தும்(பாரதரத்னா வரை)மலினப்பட்டுவிட்டன.விருது கொடுக்க ஆட்கள் தேடும் நிலை வந்து விடும்.
முதல் தவறைச் செய்த உத்தரகாண்ட்

பொது சிவில் சட்­டத்­தைக் கொண்­டு­வந்­த­தன் மூல­மாக இந்­தி­யா­வில் முதல் தவ­றுக்­குப் பாதை அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றது உத்­த­ர­காண்ட் மாநி­லம். இவர்­க­ளைப் பின்­பற்றி ராஜஸ்­தான் மாநி­ல­மும் பொது சிவில் சட்­டத்தை அமல்­ப­டுத்­தப் போவ­தா­கச் சொல்லி இருக்­கி­றது.

பா.ஜ.க. விதைக்க விரும்­பும் நச்சு விதையை உத்­த­ர­காண்ட் முத­லில் விதைத்து விட்­டது. இதன் விளை­வு­கள் எப்­படி இருக்­கப் போகி­றதோ?

பல்­வேறு மொழி­கள், இனங்­கள், மதங்­கள், கலாச்­சா­ரங்­கள், பண்­பா­டு­களை உள்­ள­டக்­கிய பன்­மு­கத்­தன்மை கொண்ட நாடு இந்­தியா. வேற்­று­மை­கள் எவ்­வ­ளவு இருந்­தா­லும் ஒற்­று­மை­யு­டன் அனை­வ­ரும் வாழ்ந்து வரு­கி­றார்­கள். இதில் வேற்­று­மையை விதைக்­கும் காரி­யத்தை ஆர்.எஸ்.எஸ்., ஜன­சங், பா.ஜ.க. போன்ற அமைப்­பு­கள் தொடர்ந்து செய்து வரு­கின்­றன. மதத்தை அர­சி­ய­லுக்கு இவை பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

தங்­க­ளது அர­சி­யல் லாபத்தை, மக்­க­ளது மத உணர்­வு­க­ளைத் தூண்­டு­வ­தன் மூல­மாக அடைய முடி­யுமா என்று பார்க்­கி­றது பா.ஜ.க. இவர்­க­ளது அர­சி­யல் இலக்கு, சிறு­பான்­மைச் சமூ­கத்­தி­னர். அவர்­க­ளைக் கொச்­சைப்­ப­டுத்தி அதன் மூல­மாக பெரும்­பான்­மை­யி­னரை ஏமாற்­று­வதே அவர்­க­ளது தந்­தி­ரம் ஆகும். 

பெரும்­பான்மை மக்­கள் அதற்­குப் பலி­யா­வது இல்லை. இருந்­தா­லும் பா.ஜ.க. அதனை தொடர்ச்­சி­யா­கச் செய்து வரு­கி­றது.

பொது சிவில் சட்­டத்­தைக் கொண்டு வரு­வது -–

குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­தைக் கொண்டு வரு­வது–

பாபர் மசூ­தியை இடித்து ராமர் கோவில் கட்­டு­வது -–

காஷ்­மீ­ருக்­கான சிறப்­புத் தகு­தியை ரத்து செய்­வது- –

போன்­றவை பா.ஜ.க.வின­ரின் வேலைத் திட்­டங்­கள் ஆகும். இவை­கு­றித்த எந்த விமர்­ச­னத்­தை­யும் பா.ஜ.க. ஏற்­றுக் கொள்­வது இல்லை. 

காஷ்­மீர் தலை­வர்­களை வீட்­டுச் சிறை­யில் வைத்து 370 சிறப்­புத் தகு­தியை ரத்து செய்து விட்­டார்­கள். பாபர் மசூதி இடிக்­கப்­பட்­டது. அதே இடத்­தில் ராமர் கோவில் எழுந்து விட்­டது.

 ‘எப்­போது வேண்­டு­மா­னா­லும் குடி­யு­ரி­மைச் சட்­டம் வர­லாம்’ என்று சொல்லி வரு­கி­றார்­கள். பொது சிவில் சட்­டத்தை உத்­த­ர­காண்ட் நிறை­வேற்­றிக் காட்டி விட்­டது.

இந்­தி­யா­வில் கிரி­மி­னல் சட்­டங்­கள் ஒரே மாதி­ரி­யாக உள்­ளன. பண்­பாடு, பழக்க வழக்­கங்­கள் என்­பவை மாநி­லத்­துக்கு மாநி­லம் மாறு­ப­டு­கி­றது. 

எனவே, திரு­ம­ணம், வாரி­சு­ரோமா உள்­ளிட்ட வழக்­கங்­கள் தங்­க­ளின் மத­நம்­பிக்­கை­யின்­படி பின்­பற்­றும் உரி­மையை நமது அர­சி­யல் சட்­டம் அளித்­துள்­ளது. இத­னால், சிவில் சட்­டங்­கள் மதங்­க­ளைப் பொறுத்து மாறு­கி­றது. 

இந்த நிலையை மாற்­று­வது பா.ஜ.க.வின் திட்­டங்­க­ளில் ஒன்­றாக உள்­ளது. எனவே தான் பொது சிவில் சட்­ட­மா­னது ஜன­நா­யக சக்­தி­க­ளால் எதிர்க்­கப்­ப­டு­கி­றது.

21வது சட்ட ஆணை­யம், பொது சிவில் சட்­டம் தொடர்­பாக பொது­மக்­க­ளி­டம் விரி­வான கேள்­வி­களை முன்­வைத்­தும், அனைத்­துத் தரப்­பி­ன­ரின் கருத்­துக்­க­ளை­யும் கேட்­டும், அத­ன­டிப்­ப­டை­யில் பொது சிவில் சட்­டம் அவ­சி­ய­மா­ன­து­மல்ல; விரும்­பத்­தக்­க­தும் அல்ல என்று முடி­வெ­டுத்து அறி­வித்­தது. 

அதனை மீறித்­தான் பொது சிவில் சட்­டத்தை உத்­த­ர­காண்ட் அரசு அமல்­ப­டுத்தி இருக்­கி­றது.

பொது சிவில் சட்­டத்­துக்கு அனு­மதி வழங்­கக் கூடாது என வலி­யு­றுத்தி 22வது சட்ட ஆணை­யத்­திற்கு தி.மு.க. சார்­பில் ஏற்­க­னவே கடி­தம் எழு­தப்­பட்­டுள்­ளது.

தி.மு.க. பொதுச் செய­லா­ளர் துரை­மு­ரு­கன் அனுப்­பிய கடி­தத்­தில்,

“இந்­திய மக்­கள் பல்­வேறு மத, மொழி, இனக் குடும்­ப­மாக, ‘வேற்­று­மை­யில் ஒற்­றுமை’ என்ற அடிப்­ப­டை­யில் வாழ்ந்து வரு­கி­றார்­கள். அவ­ர­வர் பழக்­க­வ­ழக்­கங்­களை அவ­ர­வர் பின்­பற்றி வரு­கி­றார்­கள். 

இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள அடிப்­படை உரிமை பிரிவு 25-–ன்படி குடி­மக்­கள் அனை­வ­ரும் தாங்­கள் சார்ந்­துள்ள மத வழக்­கங்­க­ளைப் பின்­பற்­ற­வும், பரப்­ப­வும் உரிமை பெற்­ற­வர்­க­ளா­வர். 

இத்­த­கைய வேறு­பா­டு­கள் நம்­மு­டைய அர­ச­மைப்­புச் சட்­டத்தை வலி­மை­யாக்கி உள்­ளது.

பா.ஜ.க.வின் ‘ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்­பாடு’ என்ற கொள்கை சட்ட விரோ­தம் ஆகும்.

 இந்த நோக்­கத்­து­டன்­தான் பொது சிவில் சட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றார்­கள். இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால், மதச் சார்­பின்­மைக்கு குந்­த­கம் ஏற்­ப­டுத்­து­வ­து­டன், சட்­டம்- – ஒழுங்கு பாதிப்பு, அமை­தி­யின்மை போன்ற பல கேடு­களை இந்­திய சமு­தா­யத்­தில் உரு­வாக்­கும் நிலை ஏற்­ப­டும்”

– என்று குறிப்­பிட்டு இருந்­தார்.

இந்­தச் சட்­டம் தனி­ந­பர் உரி­மை­யான; எந்த மதத்­தை­யும் பின்­பற்­று­தல், வாரி­சு­ரிமை, தத்­தெ­டுத்­தல் போன்­ற­வற்­றில் அர­ச­மைப்­புச் சட்­டப் பிரிவு 25 வழங்­கி­யள்ள உரி­மை­க­ளைப் பறிப்­ப­தற்­கும், பிரிவு-–29 வழங்­கி­யுள்ள சிறு­பான்மை யின­ருக்­கான உரி­மை­க­ளைப் பறிப்­ப­தற்­கு­மான முயற்­சி­யா­கும்.

அர­ச­மைப்­புச் சட்­டப் பிரிவு–-29, இந்­திய நிலப் பரப்­பில் வாழும் ஒவ்­வொரு குழு­வி­ன­ருக்­கும், அவர்­க­ளு­டைய மொழி, எழுத்து, பண்­பாடு ஆகி­ய­வற்­றைப் பாது­காக்­கும் உரி­மையை அளித்­துள்­ளது.

அதற்கு இது விரோ­த­மா­னது.

பொது சிவில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தன் மூலம் தனி­ம­னித உரி­மை­க­ளைப் பறிப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. சிறு­பான்மை மக்­களை மட்­டு­மல்ல; 

இது பட்­டி­ய­லின மக்­க­ளை­யும் பாதிக்­கும். பெரும்­பான்மை இந்து மதத்­தைச் சார்ந்த பட்­டி­ய­லின மலை­வாழ் மக்­க­ளின் பழக்க வழக்­கங்­கள், திரு­ம­ணம் தொடர்­பான சடங்கு சம்­பி­ர­தா­யங்­க­ளை­யும் இந்­தச் சட்­டம் அழித்­து­வி­டும்.

பொது­சி­வில் சட்­டத்­தின் தொடர்ச்சி என்­பது; சிறு­பான்­மை­யி­ன­ரின் உரி­மை­யைப் பறிப்­ப­தா­க­வும் -– பட்­டி­யல் இன, பழங்­குடி மக்­க­ளது தனிச்­சட்­டங்­கள் -– உரி­மை­க­ளைப் பறிப்­ப­தா­க­வும் படிப்­ப­டி­யா­கச் செல்­லும். ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தனி உரி­மைச் சட்­டங்­களை ஒரே நாளில் தூக்கி எறி­ய­வும் இது அடிப்­படை அமைத்­துத் தரும்.

இட­ஒ­துக்­கீடு எனப்­ப­டும் சமூ­க­நீ­திக்கே ஒரு காலத்­தில் இதை வைத்து வேட்டு வைப்­பார்­கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?