கூட்டாட்சிதான் இந்தியா
வி.வி.பாட் முறையில் தேர்தல் ஆணையம் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது:- ஆர்.எஸ்.பாரதி .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
தெலங்கானா.கார் விபத்து - பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ மரணம்.
போதிய மழை பெய்ததால் தூத்துக்குடியில் முன்கூட்டிேய பதநீர் கிடைக்கிறது.
வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
கூட்டாட்சிதான் இந்தியா
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஓரவஞ்சனையுடன் பழிவாங்கி வருகிறது.
இந்த அநியாய அணுகுமுறையை எதிர்த்து கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநி லங்கள் போர்க்குரல் எழுப்பி வருகின்றன.
அண் மையில் தலைநகர் புதுதில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி வரி பங்கீட்டில் அநீதி இழைப்பது மட்டுமின்றி மாநிலங்கள் தங்கள் நெருக்கடியை சமாளிக்க கடன் பெறுவதற்கு கூட ஒன்றிய அரசு மூர்க்கத்தனமாக முட்டுக்கட்டை போடு கிறது.
இதை எதிர்த்து கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெற்றால் தான் கடன் பெறுவதற்கான உச்சவரம்பை உயர்த்த முடியும் என்று ஒன்றிய அரசு மிரட்டியி ருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்திற்கு அஞ்ச மாட்டோம் என்றும், கடன் தொகையை பெறும் வரை வழக்கை திரும்பப் பெற முடியாது என்றும் கேரள நிதித்துறை அமைச்சர் கே.என்.பாலகோபால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பொதுக் கடன் வாங்கும் கேரள மாநிலத்தின் வரம்பை 3.5 சதவீதத்திலிருந்து இரண்டு சதவீத மாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. கேரள மாநிலம் ரூ.32,442 கோடி வரை கடன் பெறுவதற்கு அனுமதி அளித்திருந்த ஒன்றிய அரசு அதை ரூ.15,390 கோடியாக குறைத்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசும் கேரள அரசும் பேசித் தீர்க்கு மாறு கூறியிருந்த நிலையில், வழக்கை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசு மிரட்டியுள்ளது.
இது அரசியல் சாசன உரிமையை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் ஒருசேர அவமதிக்கும் ஆணவப் போக்காகும். இது கேரளத்தின் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய ஒரு பிரச்சனையாகும்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இயற்கைப் பேரி டருக்கான நிதியை ஒதுக்குவதிலும், வரிப் பங்கீட்டை முறையாகச் செய்வதிலும் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.
கடன் பெறுவதற்கான வரம்பை உயர்த்து வதற்கு மின்வாரியத்தை பிரிக்க வேண்டும், உதய் மின்திட்டத்தை ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பொதுத்துறை களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஒன்றிய அரசு திணிக்கிறது.
ஒன்றிய அரசின் எதேச்ச திகாரப் போக்கை எதிர்த்து மாநிலங்கள் அனைத் தும் இணைந்துதான் போராடி வென்றாக வேண்டும்.