தொகுதி வரையறை

 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடாவிட்டால் சிறை: காஷ்மீர் காவல் துறை எச்சரிக்கை.

வேலையாட்களை தக்க வைக்க 300% சம்பள உயர்வை வழங்கிய கூகுள்.

நீதிமன்ற உத்திரவு.6 பெட்டிகள்.. வைரம் முதல் தங்கம் வரை .. தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் நகைகள்.

உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு மோடி அடிக்கல்

திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி நடைபெறும்: விவசாயிகள் அறிவிப்பு.

"பணவீக்கம் தேசிய சராசரியை விட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. ஒன்றிய அரசின் நிதி பகிர்வு மிகக் குறைந்துள்ளது" நிதித்துறை செயலாளர் உதயசந்திரன்.

சண்டிகர் மேயர் தேர்தல் மோசடி விவகாரம் .முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.

அரசுபள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.தமிழ்நாடு பட்ஜெட்டில் #அதிரடி அறிவிப்புகள்.

தொகுதி 

மறு சீரமைப்பு

ஒரே நாடு –- ஒரே தேர்­தல்’ என்ற எதேச்­ச­தி­கார நட­வ­டிக்­கையை எதிர்க்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம்.

தொகுதி மறு சீர­மைப்பை, மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில் மாற்­று­வ­தன் மூல­மாக -– குடும்­பக் கட்­டுப்­பாட்­டுத் திட்­டத்தை ஒழுங்­காக கடைப்­பி­டிக்­கும் தமிழ்­நாடு போன்ற மாநி­லங்­கள் பின்­ன­டை­வைச் சந்­தித்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின்எண்­ணிக்­கை­யில் சரி­வைச் சந்­திக்க வேண்டி வரும். இதன் மூல­மாகதமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வோர் எண்­ணிக்கை குறை­யும். எனவே தான் இத­னை­யும் நாம் எதிர்க்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம்.

இவை இரண்­டை­யும் அர­சி­யல் எதிர்ப்­பாக, அர­சி­யல் கட்­சி­க­ளின்எதிர்ப்­பாக மட்­டும் இல்­லா­மல் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் ஒட்­டு­மொத்­த­மாக ஆக்­கிக் காட்­டி­விட்­டார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் என்­ப­தற்கு எதி­ரா­க­வும், ஒரே நாடு – ஒரே தேர்­தல் என்­ப­தற்கு எதி­ரா­க­வும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கடு­மை­யான எதிர்ப்பை ஏற்­க­னவே பதிவு செய்­துள்­ளது.

‘ஒரே நாடு –- ஒரே தேர்­தல்’ முறை குறித்து ஆய்வு செய்ய அமைக்­கப்­பட்ட குழு­வுக்கு தி.மு.க. சார்­பி­லான கருத்தை கழ­கப் பொதுச்­­ செய­லா­ளர் –- மாண்­பு­மிகு துரை­மு­ரு­கன் அவர்­கள் ஏற்­க­னவே அனுப்பி விட்­டார்.

“அர­சி­யல் சட்­டத்­திற்­கும் –- அச்­சட்­டம் தந்த கூட்­டாட்சி தத்­து­வத்­திற்­கும் எதி­ராக -– மத்­திய மாநில உறவை மட்­டு­மின்றி, ஒன்­றி­யத்­திற்கே பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் “ஒரே நாடு – ஒரே தேர்­தல்” திட்­டத்தை கைவிடு! அதி­கா­ர­வ­ரம்­பற்ற விசா­ரணை நடத்­தும் உயர்­­நிலைக்­குழு – அதி­கா­ரப் பசி கொண்ட ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு துணை போகா­மல் -– தனது விசா­ர­ணையை நிறுத்­திக் கொள்ள வேண்­டும்!”– - என்று அந்­தக் கடி­தத்­தில் மாண்­பு­மிகு துரை­மு­ரு­கன் குறிப்­பிட்டு இருந்­தார்.

2022 இல் சட்ட ஆணை­யம் ஒரே நேரத்­தில் பாரா­ளு­மன்­றம், மற்­றும் மாநில சட்­ட­ச­பை­க­ளுக்கு தேர்­தல் நடத்­து­வது சம்­பந்­த­மா­கத்­தான் ஆலோ­ச­னை­க­ளைக் கோரி­யது. ஆனால், தற்­பொ­ழுது ஒன்­றிய அரசு இதை விரி­வு­ப­டுத்தி பாரா­ளு­மன்ற மற்­றும் மாநில சட்ட சபை­­களோடு, நக­ராட்­சி­கள் மற்­றும் ஊராட்­சி­க­ளை­யும் இணைத்து ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்­தும் வித­மாக ஆய்வு வரம்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது. இந்­தச் செயல் கூட்­டாட்சி தத்­து­வத்­திற்கு எதி­ரா­க­வும், குடி­ய­ர­சுத் தலை­வர் முறை­யி­லான ஆட்­சியை நோக்­கி­யும் செல்­வ­தா­கும். மாநில அர­சின் உரி­மை­க­ளில் தலை­யி­டு­வ­தும் ஆகும். எனவே அனைத்து மாநில அர­சு­க­ளும் ‘ஒரே நாடு –- ஒரே தேர்­தல்’ என்­பதை எதிர்க்க வேண்­டும்.

‘தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை குறை­யக் கூடாது’ என்­பது குறித்து முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஏற்­க­னவே அறிக்கை விடுத்து இருந்­தார்.

 மக­ளி­ருக்கு 33 விழுக்­காடு என்ற நாட­கத்தை பா.ஜ.க. ஆட்சி செய்­தது. சட்­டத்தை நிறை­வேற்­று­வது போல நிறை­வேற்றி, அது நடை­மு­றை­யில் நிறை­வே­றி­வி­டாத அள­வுக்கு தடை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யது பா.ஜ.க. அரசு. 

தொகுதி வரை­யறை முடிந்த பிறகு தான் மக­ளி­ருக்கு 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு என்று ‘கட்­டை’­யைப் போட்­டு­விட்­டது பா.ஜ.க. அரசு. 

தொகுதி மறு­வ­ரை­யறை என்­பதுஇப்­போ­தைக்கு நடக்­கும் விஷ­யம் அல்ல என்­பதை முத­ல­மைச்­சர் அவர்­கள் சுட்­டிக் காட்டி இருந்­தார். அது தொடர்­பான அறிக்­கை­யில், தொகுதி மறு­வ­ரை­யின் மற்­றொரு பக்­கத்தை சுட்­டிக் காட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“தமிழ்­நாட்­டின் மீது –- தென்­னிந்­தி­யா­வின் மீது தலைக்கு மேல் தொங்­கும் கத்­தி­யாக தொகுதி மறு­வ­ரை­யறை (delimitation) உள்­ளது. மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்து, தென்­னிந்­தி­யா­வின் அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வத்தைகுறைக்­கிற அர­சி­யல் சூழ்ச்சி முறி­ய­டிக்­கப்­பட வேண்­டும். அர­சி­யல் விழிப்­பு­ மிக்க தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கிற அநீ­தி­யான முயற்சி முளை­யி­லேயே கிள்ளி எறி­யப்­பட வேண்­டும். மறு­வ­ரை­யறை என்ற பெய­ரில் தென்­னிந்­திய மக்­க­ளுக்கு எந்­தத் தீங்­கை­யும் செய்­து­விட மாட்­டோம் என்ற உத்­த­ர­வா­தத்தை வழங்கி, தென்­னிந்­திய மக்­களை ஆட்­கொண்­டுள்ள அச்­சத்­தைப் போக்­கிட வேண்­டும் எனப் பிர­த­மர் திரு. நரேந்­திர மோடி அவர்­களை வலி­யு­றுத்தி கேட்­டுக் கொள்­கி­றேன்”என்று கேட்­டுக் கொண்­டி­ருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஆனால் பா.ஜ.க. தலை­மையோ, பா.ஜ.க. அரசோ இதற்கு அதி­கா­ரப்­பூர்­வ­மான பதிலை இது வரை தர­வில்லை.

தமிழ்­நாட்­டுக்கு, தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை குறை­யாது என்ற உத்­த­ர­வா­தம் இது­வரை கிடைக்­க­வில்லை. என­வே­தான் தமிழ்­நாடு அதி­க­மான கவலை கொள்ள வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டு­கி­றது.

மாநி­லங்­களை ஒழிப்­ப­து­தான் ஜன­சங்­கத்­தின் வேலைத் திட்­ட­மாக 1952 ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது. அத­னைச் செய்­வது தான் பா.ஜ.க.ஆட்­சி­யின் வேலை­கள் ஆகும். இதனை இறு­தி­வரை எதிர்த்­தாக வேண்­டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?