முடிந்துபோன குரல்

 தமிழக அரசின் நிர்வாக சாதுரியத்தால் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடை மாற்றியுள்ளோம்.

7நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

நாகை அருகே பரபரப்பு; நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை: 8 பேர் கைது.

வரவுகுறையாகஇருக்கும்போதுதமிழ்நாடு அரசு இலவசம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? -சரத்குமார் .

பீகார் கைமூரில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.

ஓட்டுநர் இல்லாமல்80 கி.மீதூரம் ஓடிய சரக்கு ரயில்.பிரேக் போடாமல்ஓட்டுநர் டீ குடிக்கப் போனதால் விபரீதம்!.

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

முடிந்த அதிமுக ஆட்சியையும், தற்போதைய திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி .

முடிந்துபோன குரல்

'மனதின் குரலில்” இருந்து இந்திய மக்க ளுக்கு விடுதலை கிடைக்கிறது. மக்களவைத்தேர்தல்அறிவிக்கப்படவுள்ளதால் “மன் கி பாத்” என்ற மனதின் குரல் நிகழ்ச்சியை மூன்று மாதங்க ளுக்கு நிறுத்திக் கொள்வதாக மோடி கூறி யுள்ளார். 

தேர்தலில் வீழ்வது உறுதி என்றால், நிரந்தரமாக நின்று விடும். 

2014இல் ஆட்சிக்கு வந்தது முதல் பத்து வருடங்களாக மக்களின் மனதோடு பேசுவதாக எண்ணி, மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் மோடி.

 ஒவ்வொரு மாதமும் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதை மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை மோடியிடம் அவர்களால் ஒரு போதும் சொல்லவே முடியவில்லை.

மன் கி பாத் முற்றிலும் ஒருவழிப் பாதையா கவே இருந்தது. பத்து வருடங்களும் மோடி எதையோ பேசினார். 

தேசத்தின் அடிப்படை யான எந்தப் பிரச்சனையையும் அவர் தொட வில்லை. அரசியலற்ற முறையில் பேசுவதே ஒரு அரசியல்தான். 

தேசத்தின் நட்சத்திரங்களாக திகழ்ந்த விளையாட்டு வீராங்கனைகள், பாலி யல் வன்முறைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக மன் கி பாத்தில் மோடி கதை விட்டுக் கொண்டி ருந்தார். 

வரலாறு காணாத வன்முறையால் மணிப் பூர் மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, அதற்கு ஒரு சிறு ஆறுதல் கூட மனதின் குர லாக அவர் வெளிப்படுத்தவில்லை.

தான் நினைப்பதை மட்டுமே, தான் சொல்வ தை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என்ற பாசிச பாணி ஒற்றை ஆதிக்க பிரச்சார வடிவமே மன் கி பாத். 

அதேவேளை அது ஒரு கோழைத்தனமான வடிவமும் கூட. மூடிய அறையில் அமர்ந்து கொண்டு மக்களோடு பேசிய மோடி, ஒருபோ தும் நேருக்கு நேர் மக்களோடு பேசவில்லை. மக்க ளின் குரலை, அரசியல் விமர்சனக் குரலை எதி ரொலிக்கும் பத்திரிகையாளர்களை அவர் கடைசி வரை சந்திக்கவே இல்லை. 

பத்திரிகை யாளர் சந்திப்பே நடத்தாத ஒரு பிரதமர் என்று வரலாற்றின் நகையாடலுக்கு உள்ளான வர்தான் மோடி.

மன் கி பாத் மூலமாக கோடிக்கணக்கான மக்க ளிடம் அரசின் திட்டங்களையும், அதன் மேன் மைகளையும் மோடி கொண்டு சேர்த்து விட்ட தாக பாஜகவினர் கூறுகிறார்கள்.

 ஆனால் பல்வேறு தருணங்களில் ஒன்றிய அரசின் ஊழி யர்கள், மத்தியப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை வலுக்கட்டாய மாக அமர வைத்து இந்த நிகழ்ச்சியை கேட்க வைக்க முடிந்ததே தவிர, மோடி அரசின் கொள் கைகளால் தாக்குண்டு சிதிலமடைந்து போன வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடிக் கொண்டியிருக்கும் கோடானுகோடி மக்களை மோடியின் மனதின் குரல் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. 

-----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?