உண்மை இல்லாத

சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்  புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடத்தை  திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

போதைப்பொருள் கடத்தல் - டெல்லியில் 3 தமிழர்கள் கைது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்ரயில் சேவை கிளம்பாக்கம் செல்வோர் வசதிக்காக கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வோம்" -  தேனிபொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் .

உண்மை இல்லாத தினமலரின் விமர்சனம்

தினமலர் நாளிதழில் “மதுரை இரயில்வே கோட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப சென்னை தேர்வு வாரியத்தின் மூலம் ஆட்களை தேர்வு செய்யாமல் முதன் முறையாக திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் மூலம் ஆட்க ளை தேர்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உரிமை பாதிக் கப்படும் இந்த செயல் குறித்து மதுரை  எம்.பி. இதுவரை எந்த எதிர்ப்பும் தெரி விக்கவில்லை” என்று எழுதியுள்ளனர்.  

“சென்னையில் பாண்டியன் எக்ஸ் பிரஸ் இரயில் ஒரு மணி நேரம் பிளாட்பா ரம் மாற்றப்பட்டதற்கு பொங்கி எழுந்த சு. வெங்கடேசன் மதுரைக் கோட்ட உரிமை பாதிக்கப்பட்டதற்கு எதிராக எதுவும் செய்யாமல் இருக்கிறார்” என்று விரிவாக எழுதியுள்ளனர். 



மதுரைக் கோட்டம் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்திற்கு முதன் முறையாக மாற்றப்பட்டுள்ளது என்று தினமலர் எழுதியுள்ளது. இது தவறு. மாற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டன.

 இந்த 18 ஆண்டுகளும் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் மூலம் தான் மதுரைக் கோட்டப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.  

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து இதற்கு எதிராக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். இரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளேன். 

இரயில்வே அமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென் றுள்ளேன். தென்னக இரயில்வே பொதுமேலாளர் நடத்தும் ஆலோச னைக் கூட்டத்திலும் தொடர்ந்து இந்த பிரச்சனையை எழுப்பி உள்ளோம். 

இவைகள் குறித்து தொடர்ந்து ஊடக செய்திக் குறிப்பும் வெளியிட்டுள்ளோம். 

5 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்

மொழிவழி மாநிலங்களின் அடிப்ப டையிலேயே வேலைவாய்ப்புக்கான வாரிய எல்லைகள் அமைக்கப்பட வேண் டும். அந்த அடிப்படையிலேயே தேர்வு கள் நடத்தப்பட வேண்டும். 

மதுரைக் கோட்டம் சென்னை தேர்வு வாரியத்தோடு தான் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  கடந்த வாரம் (14-2-24) எமது அலுவல கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்தப் பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும், மதுரைக் கோட்டம் சென்னைத் தேர்வு வாரியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தினேன். அதன் காணொலியும்வெளியாகியிருக்கிறது.தினமலருக்கு அது தெரியாதது வியப்பல்ல.அதை வேண்டுமென்றே மறைத்திருக்கிறா்கள்.மறந்திருக்பிறார்கள்.

தினமல ன் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது

2006 ஆம் ஆண்டு முதல் கடந்த பதி னெட்டு ஆண்டுகளாக இருக்கும் பிரச்ச னையை இன்று வந்துள்ள புதிய பிரச்ச னையைப் போல எழுதுவதும், அதற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதும் உள்நோக்கம் கொண்டதாகும்.

 அதுமட்டுமல்ல, “சென்னை ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் பிளாட்பாரம் மாற்றி போட்டதற்காக பொங்கி எழுந்தவர்” என்று இகழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளது தினமலர். 

அதிகார வர்க்கத்தின் ஆடம்பரத்திற்கு எதிரானது

அது பாண்டியன் விரைவு ரயிலை நடைமேடை மாற்றிப்போட்ட பிரச்சனை மட்டுமல்ல, ஒரு தனி நபருக்காக தனி ரயிலை இயக்கும் காலனி ஆட்சிகால நடைமுறை இன்னும் தொடர்வதற்கு எதி ரான நடவடிக்கையாகும். 

அந்த தனி நபரின் வசதிக்காக சுமார் 1000 பேர் பய ணிக்கும் பாண்டியன் ரயிலை வேறு நடை மேடைக்கு மாற்றியதற்கு எதிரான போ ராட்டமாகும்.

 இப்பிரச்சனைக் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இரயில்வே துறை. அதிகாரவர்க்கத்தின் ஆடம்பரத்திற்கு மக்களின் நலனை இரையாக்க முடியாது. 

மதுரை பெற்ற 150 வெற்றிகளில் 23 ரயில்வே துறை சார்ந்தது

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த வாரம் 5 ஆண்டு களில் நாங்கள் பெற்ற 150 வெற்றிகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். தினமலர் அந்த நூலை படித்துப் பார்க்க வேண்டுகிறேன். அதில் ரயில்வே துறை சார்ந்து 23 வெற்றிகள் உள்ளன. 

அதில் மிக முக்கிய வெற்றிகளில் ஒன்று கோரக்பூர் ரயில்வே காத்திருப்புப் பட்டிய லில் இருந்தவர்களை சென்னை RRB-யில் பணியமர்த்திய நடவடிக்கையை முறி யடித்து தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை உரிமையைப் பாதுகாத்ததாகும். 

பணியிட உத்தரவு வழங்கப்பட்ட பின் அதனை திரும்பப் பெற வைத்தது இரயில்வே வரலாற்றில் பெரும் சாதனை யாகும். 

151-ஆவது வெற்றியும்  ரயில்வே பாதுகாப்பிற்கானதே!

இந்த நூல் தொகுக்கப்பட்ட பின் பெற்ற முத்தாய்ப்பான வெற்றியை இங்கே பதிவிடுகிறேன்: ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான ரயில் பெட்டி தயார் செய்யும் ஒப்பந்தத்தை தனியாருக்கு விடு வதை கைவிட வலியுறுத்தி பொதுத்துறை யான ஐசிஎப்-க்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். 

அந்த கோ ரிக்கை இப்பொழுது வெற்றி பெற்றுள் ளது. ‘இரயில்வே துறையை பாது காப்போம். இரயில்வே பணியிடங்களில் மாநில உரிமைகளைப் பாதுகாப்போம்’ என்கிற கொள்கை வழியில் நின்று செயல் படுகிறவர்கள் நாங்கள். 

மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியை எதிர்த்தும், மதுரை கோட்டத்தை சென்னை தேர்வா ணையத்தோடு இணைக்கவும் தொ டர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?