ஒரே நாடு. ?

"சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்களும் பதவி விலகி தேர்தல் நடத்துவார்களா?, இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?"-மு.க.ஸ்டாலின், (தமிழ்நாடு முதலமைச்சர்.)


சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் (முறைகேடு)மூலம் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பாஜ, அதிமுக மறைமுக கூட்டாளிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரிமைகளை மீட்கும் முழக்கம் அமையட்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் .

ஒரே நாடு, ஒரே தேர்தல்; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு.

கட்சி, சின்னம் விவகாரம் #தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் மனு. விரைவில் விசாரணை.

கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் புதிய பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்.

"உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஆர்.யன்.ரவி ஒப்புதல் கொடுத்தார்?"- ஆளுநர் உரை குறித்து முரசொலி .கேள்வி.
அதிமுகவை கை விட்ட தமாகா... பாஜக கூட்டணியில் இணைய வாசன் முடிவு.? 


தகுதி?

வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை, தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர், அந்த முதியவர் பயன்படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார்.

சிறிது கால அவகாசம் தருமாறு வேண்டுகிறார் பெரியவர்.எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார்

குல்சாரிலால்_நந்தா
வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு பெரியவருக்குச் சிறும கால அவகாசம் தரச் சொல்ல, வேண்டா வெருப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர்

இதைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர்.

அந்தக் காட்சிகளை படுமெடுத்து, தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து,"கொடூர நிலக்கிழார், பரிதாப நிலையில் முதியவர்" என்றெல்லாம் தலைப்பு ரெடி செய்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று, நடந்தது குறித்து விளக்கமளித்து, படங்களை காட்டினார்

படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார்.

இவர் யாரென்று தெரியுமா.? என செய்தியாளரை கேட்க, தனக்கு எதுவும் தெரியாது என்றார் செய்தியாளர

இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால்_நந்தா தான் அவர். நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத்தான் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள்.

பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி

HMSS தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர். 1948 ல் இவரது தலைமையில் தான் கொல்கத்தாவில் INTUC திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர்.

இந்த நிகழ்வு பத்திரிக்கையில் செய்தியாக வந்தது. பின்பு என்ன நடந்தது தெரியுமா?

அவரது வீட்டின் முன்பு அரசு அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு உரிமையாளர் மிரண்டு போனார

பிறகு தான் அவருக்கே தெரிந்தது, இரு முறை பிரதமராக இந்த நந்தா தான் இவர் என்று.

நீண்ட காலம் மத்திய மந்திரியாக இருந்த இவரது நிலையையும், இன்று பதவியிலிருப்பவர்கள் நிலையும்நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும் நம்மில் பலருக்கும்.

சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஓய்வூதியமாக முன்பு தந்த 500 ரூபாயையும் வாங்க மறுத்து விட்டார்.

சுதந்திரத்துக்காக போராடினேனே தவிர இந்த  500 ரூபாய்க்காக அல்ல என்று கூறிவிட்டார் நந்தா.

இறுதிவரை காந்தியவாதியாக, சாதாரண குடிமகனைப் போல் வாழ்ந்த இவருக்கு 1997 ல் #பாரத_ரத்னா விருது வழங்கப்பட்டது.

"மனிதர்களுக்கு" என்று கொடுக்கப்பட்ட அந்த உயரிய விருது இன்று யாருக்கெல்லாம் கொடுக்கப்படுகிறது என்று நினைக்கும்போது வரும் #வேதனை யை தவிர்க்க இயலவில்லை.! 

அமெரிக்காவில் இந்தியர் மீதான தாக்குதல்

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த சமீர் கமாத் என்ற இளைஞர் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பர்தூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு நிறைவு செய்து உள்ளார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பித்து தொடர்ந்து கல்வி பயின்று வந்து உள்ளார்.

2025ஆம் ஆண்டு வரை அவரது கலவிக் காலம் உள்ள நிலையில், பல்கலைக்கழக பகுதியில் அவர் தங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் வில்லியம்ஸ்பார்ட் பகுதியில் சமீர் கமாத்தின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

 செவ்வாய்க்கிழமை அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையின் அடிப்படையில், மாணவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பது என்பது 5வது நிகழ்வாகும். இதற்கு முன் இதே பர்தூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நீல் ஆச்சர்யா என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது மகன் மாயமானது குறித்து தாய் அளித்த புகாரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நீல் ஆச்சர்யாவை சடலமாக மீட்டனர். கடந்த வாரம் ஒகியோ மாகாணத்தில் 19 வயது ஸ்ரேயஸ் ரெட்டி என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2024ஆம் ஆண்டில் அடுத்தடுத்து 5 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீண் வெறுப்பு காரணமாக இந்தியர்கள் கொல்லப்படுகின்றனரா என்கிற சந்தேகம் நிலவும் நிலையில், அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?