மக்கள் விரோதமான

கார்பரேட் ஆதரவு ஆலோசனை.

ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை ஆபத்தானது .

மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட ஆலோ சனையை முன்வைத்திருப்பது நியாய மற்றது.


மக்கள் விரோதமான கார்பரேட் ஆதரவு ஆலோசனை.

ஸ்டெர்லைட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓராண்டு காலம் நடத்திய போராட்டத் தின் உச்சகட்டத்தில், அமைதியாக போரா டிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உச்ச நீதிமன்றத்தின் கருத்து இவ்வுயிரிழப்பு களையும், படுகாயம் அடைந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் புறந்தள்ளுவதாகும்.

மரம் நடக் கூட மறுத்த நிறுவனம்

தேசத்தின் நலன், தாமிர உற்பத்தி யின் தேவை ஆகியவை குறித்து உச்சநீதி மன்றத்தின் கவலையை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் பகிர்ந்து கொள்கிறது. 

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எவ்வித சட்டதிட்டத்தையும் மதிப்பதில்லை என்பதே வரலாறு. ஸ்டெர்லைட் ஆலை துவக்குவது சம்பந்தமான அறிவிப்பு வந்ததி லிருந்தே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், குறைந்தபட்சம் பசுமை வளையத்திற்கான மரங்களை நடுவதற்குக் கூட கால் நூற்றாண்டுகளாக மறுத்தே வந்த நிறுவனம் அது.

தொடர்ச்சியான சட்டமீறல்
15 உயிர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு அவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம், அந்த நிறுவனம் அரசு அமைப்புகளை தன்வ யப்படுத்திக் கொண்டு அதன் காரணமாக தனது சட்டமீறல்களை தொடர்ந்ததே ஆகும்.

 2010 ஆம் ஆண்டு அந்த ஆலை  மூடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், ஒருநாள் கூட  உற்பத்தியை நிறுத்தாமல் உச்சநீதி மன்றத்தை நாடி நிவாரணம் பெற்ற பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மூர்க்கத்தனம் அதிகமானது.  

அரசு  நிர்வாகத்தில்  அவர் களின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாணப் பத்திரமா; ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாணப் பத்தி ரமா என்று கேட்கும் அளவிற்கு சென்றது.

பொருளாதாரக் குற்றவாளியும் கூட!
குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விரட்டி யடிக்கப்பட்ட பிறகும், உயர்நீதிமன்றம் மூட வேண்டுமென்று ஆணையிட்ட பிறகும், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தபோதும், ‘காப்பர் ஸ்லாக்’ எனப்படும் நச்சுக் கழிவுகளை எவ்வித தடையுமின்றி நீர்நிலைகளில் கொட்டி, நிலத்தையும் நீரையும் பாழாக்கிய அள விற்கு சட்டத்தை மதிக்காதவர்கள். 

இது தவிர, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு  நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ள னர். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று  ஆகியவற்றை தொடர்ச்சியாக மாசுப்படுத்தி வந்தபோதும் அதைக் கட்டுப்படுத்துவதற் கான ஆலோசனைகள் எதையும் காது கொடுத்து கேட்காத நிறுவனம் ஸ்டெர்லைட் இந்தப் பின்னணியில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் அடாவடித்தனத்தை மீண்டும் தொடங்குவார்கள்.

எனவே, உச்சநீதிமன்றம் இந்த  ஆலோசனையை கைவிட வேண்டுமென்  றும், தமிழ்நாடு அரசு இந்த ஆலோசனை யை நிராகரிப்பதுடன் இதுவரையிலும் எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்

தமிழக வேளாண் பட்ஜெட்டில் மண்வளம், இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம்.

ஊழல் குற்றவாளி என தீர்ப்பானஅதிமுக முன்னாள்முதல்வர்ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகைகளை  தமிழ்நாடுஅரசிடம் ஒப்படைக்க வேண்டும். கர்நாடகாவுக்கு ரூ.5 கோடி செலுத்தவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 ரூ.84,000 லஞ்சம் வாங்கிய தெருங்கானா பெண் அதிகாரி ஜகஜோதி கைது: அவரிடமிருந்து ரூ.65 லட்சம் ரொக்கம் 3.64 கிலோ தங்கம் பறிமுதல்.

டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்க உள்ள நிலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் கைது.

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறை கற்கள், இறந்த மாட்டு தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.

வேளாண் பட்ஜெட் தாக்கல்: தென்னை தோப்புகளில் வாழை, ஜாதிக்காய் ஊடுபயிராகப் பயிரிட ரூ.5.70 கோடி; அத்தி, கொடுக்காப்புளி பெருநெல்லி டிராகன் பழங்களை பயிரிட மானியம்.

செல்லாததாக ஆக்கப்பட்ட வாக்குகளை எண்ணிய நீதிபதிகள் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜ வெற்றி ரத்து: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?