டெல்லி சலோ'

 சாலையில் ஆணி, தடுப்புகள் - டெல்லிக்குள் நுழைய இருக்கும் விவசாயிகளை தடுக்க மோடி அரசு தீவிரம்.

ஹரியாணாவின் அம்பாலா மட்டுமின்றி, குருகிராம், உத்தர பிரதேசத்தின் நொய்டா உட்பட டெல்லி செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களுக்கும் கெடுபிடி.

.புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு.

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் சிவசங்கர் வேதனை

 ரேபரேலி தொகுதியில் களமிறங்கினார் பிரியங்கா,   மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட சோனியா  திட்டம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவசர சிகிச்சை மையம், மலிவு உணவகம் அமைக்க அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்.

டெல்லிவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.

போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே நிறுத்த அனுமதி: பணிமனைகளில் பயணிகளை ஏற்றும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை.



ஆளுநர் திருந்தவே மாட்டாரா?
தேசிய கீதம் இசைத்து மரி­யா­தை­யாக அவைக்­குள் அழைத்து வரு­கி­றார்­கள் ஆளு­நரை. ஆனால் அவர் சொல்­லிக் கொள்­ளா­மல் வெளி­யே­று­கி­றார். கடந்த முறை­யும் அதைத்­தான் செய்­தார். இந்த ஆண்­டும் அதை­யே ­தான் செய்­கி­றார். ஆளு­நர் திருந்­தவே மாட்­டார் போலும்!

ஆண்­டுக்கு ஒரு முறை எழு­திக் கொடுப்­பதை வாசிப்­ப­தும் இல்லை. சபை நிறை­வேற்றி அனுப்­பும் சட்ட முன்­வ­டி­வு­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கு­வ­தும் இல்லை. அர­சின் கோப்­பு­க­ளில் கையெ­ழுத்து போடு­வ­தும் இல்லை. ஆளு­நர்­க­ளுக்கு இருக்­கும் மொத்த வேலை­களே இந்த மூன்­று­தான்.அந்த மூன்­றை­ யும் செய்­யா­மல் சனா­தன ஆராய்ச்சி செய்­கி­றார். திருக்­கு­றள் பொழிப்­பு­ரை­களை பிரித்­தெ­டுக்­கி­றார். குற்­ற­ வ­ழக்­கில் கைதாகி சிறை­யில் இருந்து வெளியே வந்த நப­ருக்கு ஆத­ர­வாக சேலத்­துக்­குச் சென்று ஆராய்­கி­றார். பொது மேடை­க­ளில் அதற்கு தொடர்பு இல்­லாத, அரசு விவ­கா­ரங்­க­ளைப் பேசு­கி­றார். 

மாண­வர்­களை கூட்டி வைத்­துக் கொண்டு கோப்­பு­க­ளுக்கு விளக்­கம் சொல்­கி­றார். உண்­மை­யில் அவ­ரைப் புரிந்து கொள்­வது கூட சிர­ம­மா­கத்­தான் இருக்­கி­றது.

அவ­ரால் ஒப்­பு­தல் தரப்­பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்­கி­றார். இதில் உள்­ளது தனக்கு உடன்­பாடு இல்­லா­தது என்­கி­றார். உடன்­பாடு இல்­லாத உரைக்கு எதற்­காக ஒப்­பு­தல் தர வேண்­டும்?

உடன்­பாடு இல்­லாத உரையை வாசிக்க மறுக்க எதற்­காக ஆளு­நர் மாளி­கை­யில் இருந்து கிளம்ப வேண்­டும்? அதை ஆளு­நர் மாளி­கை­யில் இருந்தே சொல்லி அனுப்பி இருக்­க­லாமே? ஏன் அவர் நேரத்தை அவரே விர­யம் செய்து கொண்­டார்? அந்த ஒரு மணி நேரத்தை சனா­தன ஆராய்ச்சி செய்­வ­தில் கழித்­தி­ருக்­க­லாமே?

தான் ஒப்­பு­தல் வழங்­கிய உரை­யில், தவறு நிறைய இருக்­கி­றது என்று, அவரே சொல்­கி­றார். என்ன தவறு என்­ப­தைச் சொன்­னாரா? இல்லை. தவ­றைக் கண்­டு­பி­டித்­தி­ருந்­தால்­தானே சொல்­வார்?

‘தேசி­ய­கீ­தம் பாட­வில்லை’ என்று தனது பழைய தேய்ந்து போன ரெக்­கார்­டையே பாடி­னார் ஆளு­நர். தேசிய கீதம் இறு­தி­யில்­தான் பாடு­வார்­கள். தமிழ்த்­தாய் வாழ்த்­தில் தொடங்­கு­வ­தும் –- தேசிய கீதத்­தில் முடிப்­ப­தும்­தான் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் வழக்­கம். அதையே மாற்­றச் சொல்­கி­றார்.

தேசிய கீதம் பாடி­னால், ‘திரா­விட உத்­கல வங்கா’ என்று வரும் போது அவர் காதை மூடிக் கொள்­வாரா? தமிழ்த்­தாய் வாழ்த்து பாடும் போது, ‘அதில் சிறந்த திரா­விட நல் திரு­நா­டும்’ என ஒலிக்­கும் போது காதை மூடிக் கொண்­டாரா?

அவ­ரால் மன­துக்­குள் ஏதோ மன்­ன­ரைப் போல நினைத்­துக் கொண்டுநடந்து கொள்­கி­றார். அவ­ருக்கு ‘தமிழ்­நாடு’ பிடிக்­காது என்­றால், ‘தமிழ்­நாடு’என்று சொல்­லக் கூடாது. அவ­ருக்கு ஜி.யு.போப் பிடிக்­க­வில்லை. அதற்­காகபோப் சமா­தி­யைத் தோண்ட வேண்­டுமா? காந்தி பிடிக்­க­வில்லை என்­ப­தற்­காகஇன்­னொரு முறை சுடப்­பட வேண்­டுமா?

நேதா­ஜியை நேற்­று­தான் படிக்­கி­றார். அம்­பேத்­கரை அதற்கு முந்­தையநாள்­தான் படிக்­கி­றார். தமிழ்­நாட்டை இப்­போது தான் அறி­கி­றார். அவ­ருக்குஎல்­லாமே புதுசா இருக்­கி­றது. உடனே, ‘ஏன் இவர்­களை மறைத்­தீர்­கள்?’ என்­கி­றார். ‘தமிழ்­நாட்­டில் சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­களை ஜாதி பார்த்து கொண்­டா­டு­கி­றார்­க­ளாம்’ - – இவர் குற்­றம் சாட்­டி­னார். காந்தி, தில­கர், நேதாஜி போஸ், பகத்­சிங், நேரு என மாநி­லம் கடந்து பேர் வைத்­த­வர்­கள் நாம். ஜாதி­யைக் கடந்து, மாநி­லம் கடந்த தேச பக்­தர்­கள் நாம். ‘சாவர்க்­கர்’ என வைப்­பது இல்லை என்­பது உங்­க­ளது கோப­மாக இருந்­தால் அதற்கு நாம் என்ன செய்ய முடி­யும்?


இத்­தனை ஆண்டு கால வர­லாற்­றில் முதன்­மு­த­லாக ஒரு ஆளு­நர், உரை­யாற்­றா­மல் போயி­ருக்­கி­றார். இது எந்த வகை­யில் சரி­யா­னது?

அவைக்கு ஒவ்­வாத கருத்­து­க­ளைப் பேசி­னால் அவை, அவைக்­கு­றிப்­பில் இருந்து நீக்­கப்­ப­டும். முதன்­மு­த­லாக ஆளு­நர் பேசி­யது அவைக் குறிப்­பில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது. இது அவர் வகிக்­கும் பத­விக்­குப் பெரு­மை­யல்ல, இழுக்கு ஆகும்.

திரும்­பத் திரும்ப ஒரே தவறை அவர் செய்து கொண்டு இருக்­கி­றார். அவர் தனது பத­வி­யில் இருந்து விலகி - – கிண்டி ஆளு­நர் மாளி­கை­யில் இருந்து வெளி­யேறி - – சைதாப்­பேட்­டை­யில் தனி­யாக வீடு எடுத்­துத் தங்கி அர­சி­யல் செய்ய வேண்­டும். அதை விட்டு விட்டு ஆளு­நர் பத­வி­யில் இருந்து கொண்டு இத்­த­கைய அரு­வ­ருப்­பான செய்­கை­க­ளைச் செய்­யக் கூடாது.

‘மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்­குத்­தான் அனைத்து அதி­கா­ர­மும் உள்­ளது. மாநில ஆளு­நர்­கள் என்­ப­வர்­கள் நிய­ம­னங்­களே, மாநில அர­சு­க­ளின் சிந்­த­னையை வெளிப்­ப­டுத்­தும் ஸ்டெனோ­கி­ரா­பர்­களே ஆளு­நர்­கள்’ என்று எத்­த­னையோ முறை உச்­ச­நீ­தி­மன்­றம் உச்­சந்­த­லை­யில் கொட்டி இருக்­கி­றது. அதன்­பி­ற­கும் திருந்­தா­மல் இருந்­தால் என்ன செய்­வது? யாரை நொந்து கொள்­வது?

தேசிய கீதம் முத­லில் பாட­வில்லை என்று சொல்லி விட்டு, தேசிய கீதம் முடி­வில் பாடும் போது எழுந்து சென்­றதை விட தேசிய கீதத்தை அவ­மா­னப்­ப­டுத்­தும் செயல் இருக்க முடி­யுமா? இந்­தக் குற்­றத்­துக்கு என்ன தண்­டனை? தேச­பக்­தத் தில­கங்­கள் தான் சொல்ல வேண்­டும். இப்­படி தேசிய கீதம் பாடப்­ப­டும் போது தி.மு.க. அமைச்­சர் ஒரு­வர் எழுந்து போயி­ருந்­தால் தேசி­யப் பத்­தி­ரிக்­கை­கள் என்ன குதி, குதிக்­கும்?

ஆளு­ந­ராக இருப்­ப­வர் எதை­யும் பேச­லாம், எப்­ப­டி­யும் நடந்து கொள்­ள­லாம் என்று விட்டு விடு­கி­றார்­களா? அப்­படி விட முடி­யுமா?

ஆளு­ந­ரின் செயல் என்­பது தமிழ்­நாட்டை அவ­மா­னப்­ப­டுத்­தும் செய­லா­கும். தமிழ்நாட்டு மக்­களை அவ­மா­னப்­ப­டுத்­தும் செய­லா­கும். தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தை­யும், சபை மாண்­பு­க­ளை­யும் மதிக்­காத தன்மை ஆகும். மக்­க­ளாட்­சி­யைப் பற்றி துளி­யும் கவ­லைப்­ப­டாத செய்கை ஆகும். தான் வகிக்­கும் பதவி இன்­னது என்று உண­ரா­மல், தன்­னிஷ்­டத்­துக்கு சட்­ட­மன்­றத்தை கேலிக்­கூத்­தாக்­கும் காரி­யம் ஆகும்.

இதற்கு ஆளு­நர் பதில் சொல்­லி­யாக வேண்­டும். அவரை ஏவி­வி­டும், ஒன்­றிய பா.ஜ.க. தலைமை நிச்­ச­யம் பதில் சொல்­லி­யாக வேண்­டும்.

விவசாயிகளின்

'டெல்லி சலோ'

விவசாயிகள் தலைநகரை முற்றுகையிடுவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர்.


 போராட்டம் நடத்தும் விவசாயிகளை தடுக்க டெல்லியில் 5 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


 சாலைகளில் ஆணிகளை பதித்தும், கம்பி வேலிகளை அமைத்தும் விவசாயிகளை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆணி, கம்பி வேலிகளை தாண்டி வரும் விவசாயிகளை தடுக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்கபப்ட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.


 டெல்லி திக்ரி எல்லையில் இரவு, பகலாக கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சாலையில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை விவசாயிகள் இழுத்துச் சென்றதால் சிமெண்ட் மூலம் தடுப்புச் சுவர் அமைக்கபப்ட்டுள்ளது. 


சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளை சிமெண்ட் மூலம் இணைத்து தடுப்புச் சுவரை போலீசார் எழுப்பி வருகின்றனர்.

நேற்று அரியானா எல்லையில் தடுக்கப்பட்ட விவசாயிகள், இன்று தலைநகர் நோக்கி டிராக்டர் ஊர்வலத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். 


2020-ல் நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


 2 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை தலைநகர் டெல்லி குலுங்கியது: 

டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 

144 தடை; துணை ராணுவம் குவிப்பு;

 தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் வலுப்பதால் ஒன்றிய மோடி அரசு கலக்கம் - 





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?