நிதி பகிர்­வு வேறுபாடு

கேர­ளா­வில் இருந்து மக்­கள் பணி­யாற்ற வேண்­டிய உங்­களை டெல்­லிக்கு வந்து போராட்­டம் நடத்த வைத்த மிக மோச­மான அர­சி­யல் சூழலை நினைத்து வருத்­தப்­ப­டு­கி­றேன். நேற்­றைய தினம் கர்­நா­டக மாநில முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு சித்­த­ரா­மையா அவர்­க­ளும் டெல்­லிக்கு வருகை தந்து போராட்­டம் நடத்தி இருக்­கி­றார். நிதி பகிர்­வில் தங்­கள் மாநி­லத்­துக்கு பார­பட்­சம் காட்­டப்­ப­டு­வ­தற்கு எதி­ராக அனைத்து மாநி­லங்­க­ளும் போராட்­டம் நடத்­தும் சூழ­லுக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.


இதற்­குக் கார­ண­மான ஒன்­றிய பா.ஜ.க. அரசு மக்­கள் மன்­றத்­தில் பதில் சொல்ல வேண்­டிய நாள் வெகு­தூ­ரத்­தில் இல்லை” -– என்று எச்­ச­ரிக்கை செய்­துள்­ளார் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள்.


மாநி­லங்­க­ளின் உரி­மை­யைப் பறித்து -– மாநி­லங்­க­ளின் நிதி வளத்தை ஒன்­றிய பா.ஜ.க. அரசு சுரண்டி வரு­வ­தைக் கண்­டித்து டெல்லி சென்று போராடி இருக்­கி­றார்­கள் கர்­நா­டக முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மை­யா­வும், கேரள முத­ல­மைச்­சர் பின­ராயி விஜ­யன் அவர்­க­ளும்.


ஸ்பெயின் பய­ணத்தை முடித்து விட்டு வருகை தந்­த­தால் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் நேரில் டெல்லி செல்ல முடி­யாத சூழல் இருந்­தது. ஆனா­லும் தனது வீடியோ பதிவு செய்­யப்­பட்ட உரையை அனுப்பி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்


. கேரளா அமைச்­ச­ரவை நடத்­திய போராட்­டத்­தில் கலந்து கொண்­டுள்­ளார்­கள் டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் அவர்­க­ளும் பஞ்­சாப் முத­ல­மைச்­சர் பக­வந்த் மான் அவர்­க­ளும். இப்­படி மாநி­லங்­களை ஆளும் முத­ல­மைச்­சர்­கள் ஒட்­டு­மொத்­த­மாக போராட்­டங்­கள் நடத்­தி­யது இல்லை.


உரிய நிதிப்­பங்­கீடு அளிக்­கா­மல் தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சைக் கண்­டித்து நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கருப்­புச் சட்டை அணிந்து போராட்­டம் நடத்தி இருக்­கி­றார்­கள்.


மாநி­லங்­களை ஆளும் முத­ல­மைச்­சர்­களை போராட்­டம் நடத்­தும் நிலை­மைக்­குத் தள்ளி இருக்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. ஏழை எளிய நடுத்த மக்­களை எல்லா வகை­யி­லும் வஞ்­சித்து வரும் பா.ஜ.க. அரசு, அந்த மக்­க­ளுக்கு நேரடி உத­வி­கள் செய்து வரும் மாநில அர­சு­க­ளை­யும் சுரண்டி வரு­கி­றது.


மாநி­லங்­க­ளி­டம் அதி­கப்­ப­டி­யான நிதி வளத்தை சுரண்­டிச் செல்­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, மாநி­லங்­க­ளுக்­கான நிதிப் பகிர்வை முறை­யா­கச் செய்­கி­றதா என்­றால் இல்லை.


மாநி­லங்­க­ளி­டம் அதி­கப்­ப­டி­யான நிதி வளத்தை சுரண்­டிச் செல்­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, மாநி­லங்­கள் கேட்­கும் போதா­வது நிதி தரு­கி­றதா என்­றால் இல்லை.

மாநி­லங்­க­ளி­டம் அதி­கப்­ப­டி­யான நிதி வளத்தை சுரண்­டிச் செல்­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு,மாநி­லங்­க­ளில் புதிய –- பெரிய திட்­டங்­க­ளைத் தொடங்­கு­கி­றதா என்­றால் இல்லை.


மாநி­லங்­க­ளி­டம் அதி­கப்­ப­டி­யான நிதி வளத்தை சுரண்­டிச் செல்­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, ஒன்­றி­ரண்டு தொடங்­கும் திட்­டத்­துக்கு நிதி ஒதுக்­கீட்டை தொடர்ந்து வழங்­கு­கி­றதா என்­றால் இல்லை.


மாநி­லங்­க­ளி­டம் அதி­கப்­ப­டி­யான நிதி வளத்தை சுரண்­டிச் செல்­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, இயற்கை பேரி­டர் நேரங்­க­ளி­லா­வது உதவி செய்­கி­றதா என்­றால் இல்லை.


அப்­ப­டி­யா­னால் என்ன செய்­கி­றார்­கள், மாநி­லங்­க­ளி­டம் அதி­கப்­ப­டி­யான நிதி வளத்தை சுரண்­டிச் செல்­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, அதை வைத்­துத்­தான் தனது அரசை நடத்­து­கி­றது. பா.ஜ.க.வுக்கு செல்­வாக்கு இருக்­கும் மாநி­லங்­க­ளுக்கு அந்த நிதியை மடை­மாற்­றம் செய்­கி­றது. தனது சொந்த நிதி­யைப் போல பயன்­ப­டுத்­திக் கொள்­கி­றது. மாநி­லங்­கள் பசி­யால் துடிப்­ப­தைப் பார்த்து சிரித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.


‘வலி­மை­யான இந்­தி­யா­வுக்கு அடித்­த­ளம் இட்­டுள்­ளேன்’ என்று பிர­த­மர் அவர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். இந்­தியா என்ற உடல் வலி­மை­யாக இருக்க வேண்­டு­மா­னால் அதன் உடல் உறுப்­பு­க­ளான மாநி­லங்­கள் வலி­மை­யாக இருக்க வேண்­டாமா?


காலும் கையும் பல­வீ­னம் அடைய, இத­யம் அடைக்க, தலை­யில் பெரும் காயங்­கள் ஏற்­பட –- முழு உடல் சுக­மாக இருப்­ப­தாக எப்­ப­டிச் சொல்ல முடி­யும்? அனைத்து உறுப்­பு­க­ளை­யும் சிதைத்து விட்டு, முகத்­துக்கு பவு­டர் பூசிக் கொண்­டால் போதும் என்று நினைக்­கி­றார் பிர­த­மர்.


இத்­த­னைக்­கும் அவர் குஜ­ராத் மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர். 12 ஆண்டு காலம் இருந்­த­வர். முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, மாநில உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்­த­வர். கர்­ஜித்­த­வர். பிர­த­மர் ஆன­தும், மாநி­லங்­க­ளின் நன்­மையை வலி­மைப்­ப­டுத்­தும் அர­சாக தனது அரசு செயல்­ப­டும் என்று சொன்­ன­வர் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி.

ஆனால் வந்­த­தும் மாநி­லங்­க­ளைத் தான் சிதைத்­தார். அழிக்­கப் பார்க்­கி­றார்.


‘எங்­க­ளி­டம் இருந்து அதி­க­மாக நிதி வசூல் செய்­கி­றீர்­களே?

எங்­க­ளுக்கு திருப்­பித் தர மறுக்­கி­றீர்­களே? குறை­வாக நிதி தரும் மாநி­லங்­க­ளுக்கு அதி­க­மாக பகிர்ந்­த­ளிக்­கி­றீர்­களே?’

என்று மாநி­லங்­கள் கேட்­ப­தில் என்ன தவறு இருக்­கி­றது. இதைச் சொன்­னால் நாட்டை பிள­வு­ப­டுத்­தும் பேச்சு என்­கி­றார் பிர­த­மர்


மாநி­லங்­கள் அவை­யில் பேசிய பிர­த­மர் மோடி அவர்­கள், மாநி­லங்­கள் பேசும் உரி­மையை பிள­வு­ப­டுத்­தும் பேச்சு என்­கி­றார். ‘நாட்டை ஒன்­றா­கப் பார்க்க வேண்­டு­மாம்’. தனித்­த­னி­யா­கப் பார்க்­கக் கூடா­தாம். இதற்கு அவர் ஒரு உதா­ர­ணம் சொல்லி இருக்­கி­றார்.


“எங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் நாடு என்­பது வெறும் நில­மல்ல. அது மனித உட­லைப் போன்­றது. காலில் முள் குத்தி வலி ஏற்­பட்­டால் அந்த முள்ளை கை உடனே எடுக்­கும். ‘காலில் தானே முள் இரு­கி­றது. எனக்கு கவ­லை­யில்லை’ என கை நினைக்­காது. அது போலவே நமது தேச­மும்” என்று சொல்லி இருக்­கி­றார் பிர­த­மர்.

காலில் முள் குத்­தி­னால் கை உடனே போய் எடுக்­கும் என்­பது மனித இயல்பு. இது பிர­த­மர் சொல்­லித் தெரி­ய­வேண்­டி­யது இல்லை.


முள் குத்­திய காலுக்கு அறு­வைச் சிகிச்சை செய்ய வேண்­டு­மா­னால் காலில் தானே செய்ய வேண்­டும்? முழு உடம்­பையே அறு­வைச் சிகிச்சை செய்­வார்­களா? யார் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­களோ அவர்­களை கவ­னிக்க வேண்­டாமா?

ஏன் வேட்டி கட்­ட­வில்லை என்று கேட்­டால், தலைக்கு தொப்பி வைத்­துள்­ளேனே என்று சொல்­வ­தைப் போல இருக்­கி­றது பிர­த­மர் மோடி­யின் பதில்.

போராட்டம் நடத்தும் முதலமைச்சர்கள் - 2

முத­ல­மைச்­ச­ராக இருந்த போது மாண்­பு­மிகு மோடி அவர்­கள் என்ன சொன்­னார்­கள்?


“குஜ­ராத் மக்­கள் ரூ.60 ஆயி­ரம் கோடியை டெல்­லிக்கு அனுப்­பு­கிறார்­கள்.


ஆனால் திரும்ப வரு­வது மிகக் குறைவு. குஜ­ராத் என்ன பிச்­சைக்­கா­ரர்­கள் மாநி­லமா?” என்று 6.12.2012 அன்று குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது கேட்­ட­வர்­தான் மாண்­பு­மிகு நரேந்­திர­மோடி அவர்­கள். அதைத்­தான் இன்று தமிழ்­நாடு – - கேரள –- கர்­நா­டக – -மேற்கு வங்க –- பஞ்­சாப் – -டெல்லி முத­ல­மைச்­சர்­கள் சொல்­கிறார்­கள்.


மாண்­பு­மிகு மோடி அவர்­கள் அப்­போது குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்.“உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பெண்­க­ளுக்கு 50 சத­வி­கித இட ஒதுக்­கீடு வழங்­கும் மசோ­தா­வைக் குஜ­ராத் மாநில பெண் ஆளு­நர் கமலா பெனி­வால் ஒப்­பு­தல் அளிக்­கா­மல் வைத்­தி­ருக்­கி­றார். பெண்­க­ளுக்கு எதி­ரி­யா­கப் பெண் ஆளு­நரே இருக்­கி­றார்.


ஒரு பெண்­மணி குஜ­ராத்­தின் ஆளு­ந­ராக இருந்­தும், பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்டு மசோ­தாவை நிறை­வேற்ற முடி­யா­மல் போனது நமது துர­தி­ருஷ்­டமே’’ –- என்று 2013 ஏப்­ரல் 8-ம் தேதி. டெல்­லி­யில் நடந்த இந்­தி­யத் தொழி­லக சம்­மே­ள­னத்­தின் (FICCI) கூட்­டத்­தில் பேசி­னார் அப்­போ­தைய குஜ­ராத் முதல்­வர் மோடி. அதைத்­தான் இன்று தமிழ்­நாடு –- கேரள – கர்­நா­டக– -மேற்கு வங்க –- பஞ்­சாப் – -டெல்லி முத­ல­மைச்­சர்­கள் சொல்­கி­றார்­கள்.


மாநி­லங்­க­ளி­டம் இருக்­கும் நிதி வளத்தை பறித்­துச் சென்று விட்டு நிதி­யும் தரு­வது இல்லை. கடன் வாங்­க­வும் விடு­வது இல்லை. இவ்­வ­ள­வு­தான் வாங்க வேண்­டும் என்று தடை போட்டு பட்­டினி போட்­டுக் கொல்­லப் பார்க்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. தானும் தர மாட்­டேன், அடுத்­த­வ­ரை­யும் தர விட மாட்­டேன் என்­ப­து­தான் இந்த வஞ்­சக எண்­ணம் ஆகும்.


“மாநி­லங்­க­ளின் கொள்கை முன்­னு­ரி­மை­க­ளின்­படி வளங்­க­ளைத் திரட்­டு­வ­தற்­கும், முக்­கி­ய­மான வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்கு நிதி­ய­ளிப்­ப­தற்­கும் உள்ள திறனை முடக்­கு­வ­தையே ஒன்­றிய அரசு நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது” என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் குற்­றம் சாட்­டு­வது இத­னால்­தான்.


“கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் தமிழ்­நாடு தொடர்ந்து 15 விழுக்­காடு வளர்ச்­சியை அடைந்த போதி­லும், 2023-–2024 ஆம் ஆண்­டில் நிக­ரக் கடன் உச்­ச­வ­ரம்­பைக் கணக்­கி­டு­ வ­தற்­கான மாநில மொத்த உற்­பத்தி வளர்ச்­சியை வெறும் 8 விழுக்­கா­டாக ஒன்­றிய அரசு நிர்­ண­யித்­துள்­ளது. இத­னால், நடப்­பாண்­டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது” என்­றும் சுட்­டிக்­காட்டி இருக்­கி­றார்.


ஒன்­றிய அர­சின் திட்­ட­மான, சென்னை மெட்ரோ இர­யில் 2 ஆம் கட்ட திட்­டப் பணி­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிப்­ப­தில் வேண்­டு­மென்றே கால­தா­ம­தம் செய்­த­தால், இத்­திட்­டத்­திற்­கான மொத்த கட­னான 33,594 கோடி ரூபாய் முழு­வ­தும், மாநி­லத்­தின் நிக­ரக் கடன் உச்­ச­வ­ரம்­பிற்­குள் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.


•சரக்­கு­கள் மற்­றும் சேவை­கள் வரி அம­லுக்கு முந்­தைய கால­கட்­டத்தை ஒப்­பி­டு­கை­யில், ஆண்­டொன்­றுக்கு 20,000 கோடி ரூபாய் வரு­வாய்ப் பற்­றாக்­கு­றையை தமிழ்­நாடு அரசு எதிர்­கொண்டு வரு­கி­றது. இழப்­பீட்­டுத் திட்­டத்தை நீட்­டிக்க ஒன்­றிய அரசு மறுத்து வரு­கி­றது.


கடந்த ஐந்து நிதி ஆண்­டு­க­ளில் (2018--–23) வரை எத்­த­கைய மோச­டியை பா.ஜ.க. அரசு செய்து வரு­கி­றது என்­பதை இந்த புள்­ளி­வி­ப­ரம் காட்­டும்.


ஒரு ரூபாயை தமிழ்­நாட்­டில் இருந்து பெற்­றால் அதில் இருந்து 29 பைசா­வைத் தான் திரும்­பத் தரு­கி­றது பா.ஜ.க. ஆனால் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் இருந்து ஒரு ரூபாய் பெற்­றால் 2 ரூபாய் 73 பைசா தரு­கி­றது பா.ஜ.க. அரசு. உத்­த­ரப்­பி­ர­தே­சத்­துக்கு ஏன் தரு­கி­றீர்­கள் என்று நாம் கேட்­க­வில்லை. தமிழ்­நாட்­டுக்­கும் ஏன் அதைப் போல தர மறுக்­கி­றீர்­கள் என்­று­தான் கேட்­கி­றோம்.


பா.ஜ.க. தமிழ்­நாட்­டில் 26 பைசா அள­வுக்­குத் தான் வளர்ந்­தி­ருக்­கிறது என்­றால் அதற்கு நாம் என்ன செய்ய முடி­யும்?


கர்­நா­ட­கா­வுக்கு 16 பைசா­வும், தெலங்­கா­னா­வுக்கு 40 பைசா­வும், கேர­ளா­வுக்கு 62 பைசா­வும், ஆந்­தி­ரா­வுக்கு 50 பைசா­வும்­தான் தரப்­படு­கி­றது என்­றால் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் வஞ்­சனை அல்­லவா இது? பண­மாக வாங்கி பைசா­வாக தரு­வது ஏன் என்று கேட்­கக் கூடாதா?


பிர­த­ம­ரின் வீடு கட்­டும் திட்­டம் என்று அதற்­குப் பெயர். அந்­தத் திட்­டத்­தில் கட்­டப்­ப­டும் வீட்­டுக்கு ஒன்­றிய அரசு தரு­வது 1.50 லட்­சம் ரூபாய் மட்­டும்­தான். இதில் மாநில அரசு தரு­வது 7.50 லட்­சம் ரூபாய். ஆனால் இதற்­குப் பெயர் மட்­டும் பிர­த­ம­ரின் வீடு கட்­டும் திட்­டம் ஆகும்.


இரண்டு மாபெ­ரும் பேரி­டர்­களை சந்­தித்­தது தமிழ்­நாடு.


ரூ.37 ஆயி­ரம் கோடி நிதி கேட்­டோம். இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. ‘காலில் முள் குத்­தி­னால் கை உடனே எடுக்­கும்’ என்று சொன்ன பிர­த­மர், ஏன் எடுக்க வர­வில்லை?


காலே உடைந்து கிடக்­கி­றதே தமிழ்­நாட்­டில். ‘நாடு என்­பது மனித உடல்­தான்’ என்­றால் பிர­த­ம­ருக்கு தமிழ்­நாட்டு மக்­கள் வெள்­ளத்­தில் மிதந்­த­போது ஏன் துடிக்­க­வில்லை? உடனே ஏன் வர­வில்லை?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?