விட்டால் போதும்.

 இந்து அல்லாதோர் பழனி கோயிலில் நுழைய தடை..

 அப்போ இந்துக்கலாம் கருவறைக்குள்ள நுழையலாமா..?

  அவ்ளோ தூரம் இல்லப்பா.. உண்டியல் வரைக்கும் வரலாம் .

ஸ்பெயின் பயணம்வெற்றி . பல ஆயிரம் கோடி முதலீடுகளுடன்    நாளை சென்னை    வரும் ஸ்டாலின்!  

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு ஜெயில், ரூ1 கோடி அபராதம்- புதிய மசோதா தாக்கல்!

அமலாக்கத்துறைக்கு காபி கொடுத்து வரவேற்க தயாராக உள்ளோம்: அமைச்சர் ரகுபதி..

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை .

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை.நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை.

அமைச்சர்கள் மீதான வழக்குகளை  விசாரிப்பது உயர்நீதி மன்றத்தலைமை நீதிபதி தீரமானிப்பார்.உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரம் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் .

வரி பகிர்வில் அநீதி இழைத்த ஒன்றிய அரசு 4 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி இழப்பு: முதல்வர் சித்தராமையா.

அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் ஆபாச வீடியோ அனுப்பி பாஜவினர் தொல்லை: சென்னை கமிஷனர் ஆபீசில் வீரலட்சுமி புகார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி.


விட்டால் போதும்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப் பட்டுள்ள செங்கோல் ஜனநாயகத்தை வலுப் படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார். 


இதன்மூலம் ஜனநாயகப் பண்புகள் இல்லாத மன்னராட்சிக் காலத்தை  நோக்கி நாட்டை நடத்திச் செல்லவே அவரது ஆட்சி முயல்கிறது என்பதை அவர் ஒப்புக் கொண்டி ருக்கிறார்.


 இப்போதைய இந்தியாவின் தேவை செங்கோல் அல்ல, மாறாக மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, மனித உரிமைகள் போன்ற விழுமியங்களே ஆகும் என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய நேரமிது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத் திற்கு பதிலளித்துப் பேசிய அவர், தம்முடைய பத்தாண்டு கால ஆட்சியில் நாடு பெற்ற நற்பலன் களை பட்டியலிடவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை என்பதால் வழக்கம்போல சவால், சவடால் பாணியிலேயே அவரது உரை அமைந்துள்ளது. 

வந்தே பாரத், மேக்இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டடம் ஆகியவை நாட்டின் சாதனை என்கிறார் பிரதமர். வந்தே பாரத் என்ற பெயரில் இயக்கப்படும் ரயில்கள் ஏழைகள் ஏற முடியாததாக, வேடிக்கை மட்டுமே பார்க்கக் கூடியதாக அமைந்துள்ளது.

 இவரது ‘பாரத்’ திட்டங்கள் அனைத்தும் இத்தகைய தன்மை கொண்டதேயாகும்.

மேக் இன் இந்தியா என்ற பெயரும் அப்படித் தான். உள்நாட்டு உற்பத்தியை புறக்கணித்து நாட்டின் அனைத்து செல்வ வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அந்நிய மூலதனத்திற்கும் திறந்து விடுவதுதான் இவரது மேக் இன் இந்தியா வின் லட்சணம். புதிய நாடாளுமன்றக் கட்டடம் என்பது ஆடம்பரத்தின் அடையாளமாக இருக்கிறதே அன்றி 

ஜனநாயகத்தின் தலைவாசலாக இல்லை. குடியரசுத் தலைவரைக் கூட திறப்பு விழாவிற்கு அழைக்காமல் அந்த கட்டடம் திறக்கப்பட்டது என்பது எப்போதும் கசப்பான ஒரு வரலாறாகவே பதிவு செய்யப்படும்.

 மதத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் சமுதாயத்தை பிளவுபடுத்துகின்றன என்று தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப் பிட்டிருப்பது கொடூரமான நகைச்சுவையாகும். நாடும், நாட்டு மக்களும் சந்திக்கும் பிரச்சனை களை திசை திருப்புவதற்காக மதப் பிரிவினையை தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரம்தான்.  

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோவில் கட்டியதை தங்களது ஆகப்பெரிய சாத னையாக கூறிக்கொள்பவர்கள் இவர்கள். நாடு முழுவதும் உடை மற்றும் உணவின் பெயராலும் மக்களை பிளவுபடுத்துவதும் இவர்கள்தான். 

இந்த ஆட்சிக்கு நன்றி கூறாமல் விடை கொடுப் பதே மக்கள் செய்ய வேண்டிய கடமையாகும்.  


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?