தமி­ழர்­கள் புறக்­க­ணிக்க

அமைச்சராக இருப்பதற்கே முருகன் தகுதியற்றவர்.தமிழ்நாடுக்கு எதிராக நடந்து கொள்கிறார்" .-நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு.

"அதிகம் பொய் பேசுபவர்கள் ஆண்களா பெண்களா?" - நீயா நானா கோபிநாத் கேள்வி 

"அதிகம் பொய் பேசுபவர்கள் ஆண்களே" - பெண்கள் தரப்பு  குற்றசாட்டு  .

"பிரதமர் மோடியை மட்டும் வைத்து எல்லா ஆண்களையும் எடை போடக்  கூடாது" - ஆண்கள் தரப்பு வாதம்   .

 "நிர்மலா சீதாராமனை  மட்டும் வைத்து எல்லா பெண்களையும்  எடை போடக்கூடாது" - பெண்கள் தரப்பு பதிலடி.

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடுதல் பணி 3வது நாளாக தீவிரம்; செல்போன் கண்டெடுப்பு.

சென்னை மாநகர பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்த 24 மாணவர்கள் பலி .- சென்னை போக்குவரத்து காவல்துறை  தகவல்.

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல். மதுரை எய்ம்ஸ் வேலை நடந்து கொண்டேயிருக்கிறது மக்களவையில் ஒன்றிய அமைச்சர் விளக்கம்.

இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழ்நாடு வருகை.

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதிகள் இடையே மோதல்.

தமி­ழர்­கள் புறக்­க­ணிக்க இந்த ஒன்றே போதும்

மதவாத - இனவெறுப்புவாதச் 

சட்டம் !

பா.ஜ.க. என்ற வகுப்­பு­வா­தக் கட்­சிக்கு மூன்றே மூன்று தான் கொள்­கை­கள். ஒன்று, பாபர் மசூ­தியை இடித்­து­விட்டு ராமர் கோவி­லைக் கட்­டு­வது. கட்­டித் திறந்­து­விட்­டார்­கள். 


இரண்டு, காஷ்­மீ­ருக்­கான சிறப்­புத் தகு­தியை ரத்து செய்­வது. ரத்து செய்­து­விட்டு, ஐந்து ஆண்­டு­க­ளாக அங்கு தேர்­தலே இல்­லா­மல் பார்த்­து­விட்­டார்­கள். மூன்­றா­வது, சி.ஏ.ஏ. எனப்­ப­டும் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்­தைக் கொண்டு வரு­வது. அத­னைக் கொண்டு வரத் துடிக்­கி­றார்­கள். 

இதை­யும் செய்து விட்­டால் அவர்­க­ளது அஜெண்டா ஓவர்!

கடும் எதிர்ப்பு எழுந்த நிலை­யில் நான்கு ஆண்­டு­க­ளா­கக் கிடப்­பில் கிடக்­கி­றது குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம். 

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரப்­போ­கி­றது என்­ப­தால் இத­னைக் கையில் எடுத்­துள்­ளார்­கள்.

‘குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்தை ஒரு வாரத்­துக்­குள் அமல்­ப­டுத்­தப் போகி­றோம்’ என்று ஒன்­றிய கப்­பல் போக்­கு­வ­ரத்­துத் துறை இணை அமைச்­சர் சாந்­தனு தாக்­குர் சொல்லி இருக்­கி­றார். 

இவர் என்ன பிர­த­மரா? 

அல்­லது உள்­துறை அமைச்­சரா? 

இல்லை. குட்­டியை விட்டு ஆழம் பார்ப்­ப­தைப் போல இவரை இறக்கி விட்­டுள்­ளார்­கள்.

 சி.ஏ.ஏ. என்­பது பா.ஜ.க. விழுந்­தால் எழ முடி­யாத குழி­யா­கும். தீராப்­ப­ழி­யா­கும்.

“மேற்கு வங்க மாநி­லத்­தில் மட்­டு­மல்ல, இந்­தியா முழு­மைக்­கும் குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டம் அமல்­ப­டுத்­தப்­ப­டும்” என்று மேற்கு வங்­கத்­தில் வைத்து சொல்லி இருக்­கி­றார் ஒன்­றிய அமைச்­சர். 

இதற்கு கடு­மை­யான எதிர்ப்­பைப் பதிவு செய்­துள்­ளார் மேற்கு வங்க முத­ல­மைச்­சர் மம்தா. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் கடும் கண்­ட­னத்­தைப் பதிவு செய்­துள்­ளார்­கள்.

“தமிழ்­நாட்­டில் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­­ படுவ­தைத் தி.மு.க. அரசு ஒரு­போ­தும் அனு­ம­திக்­காது.

 மத நல்­லி­ணக்­கத்­துக்கு எதி­ரான பா.ஜ.க. அர­சின் நாச­கா­ரச் செயல்­க­ளை­யும், அதற்­குத்துணை­போ­கும் அ.தி.மு.க.வின் நய­வஞ்­சக நாட­கங்­க­ளை­யும் நாட்டு மக்­கள்பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். உறு­தி­யா­கச் சொல்­கிறேன். 

தமிழ்­நாட்­டி­னுள் CAA கால்­வைக்க விட­மாட்­டோம்! No CAA In TamilNadu” என்று உறுதி செய்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

குடி­யு­ரி­மைச் சட்­டம் என்­பது, ஒரு நாட்­டில் வாழ முடி­யா­மல் அக­தி­க­ளாக வரு­கின்­ற­வர்­க­ளுக்கு வாழ்வு தரக்­கூ­டி­யது ஆகும். இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் 1955 ஆம் ஆண்டு குடி­யு­ரி­மைச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

 இந்­தச் சட்­டத்­தில்­தான் இன்­றைய ஒன்­றிய அரசு ஒரு திருத்­தம் செய்­கி­றது. அனை­ வ­ருக்­கும் குடி­யு­ரிமை என்று சொல்லி இருந்­தால் அதனை நாம் எதிர்க்­கப் போவது இல்லை. 

ஆனால் பா.ஜ.க.வின் குறு­கிய எண்­ணத்­துக்கு வடி­வம் கொடுத்­துள்­ளது இந்த சட்­டத் திருத்­தம்.

*எல்லா மதத்­த­வ­ருக்­கும் குடி­யு­ரிமை உண்டு, இசு­லா­மி­ய­ரைத் தவிர!

*எல்லா நாட்­ட­வர்க்­கும் குடி­யு­ரிமை உண்டு, ஈழத்­த­மி­ழ­ரைத் தவிர!

– இது­தான் பா.ஜ.க.வின் இசு­லா­மி­யர் விரோத –- தமி­ழர் விரோத குடி ­யு­ரி­மைச் சட்­டம் ஆகும். இதனை எதிர்ப்­பது ஒவ்­வொரு தமி­ழ­ரின் கட­மை­யா­கும்.

பாகிஸ்­தான், வங்­க­தே­சம், ஆப்­கா­னிஸ்­தான் ஆகிய நாடு­க­ளில் மத ரீதி­யாக துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளா­கும் சிறு­பான்மையின­ரான இந்­துக்­கள், கிறிஸ்­த­வர்­கள், பார்­சிக்­கள், சம­ணர்­கள், பவுத்­தர்­கள் இந்­தி­யா­வுக்­குள் வர­லா­மாம். 

ஆனால் இசு­லா­மி­யர்­கள் வரக்­கூ­டா­தாம். இப்­படி மத உள்­நோக்­கம் கொண்­டது எப்­படி அனை­வர்க்­கும் பொது­வான சட்­டம் ஆகும்?

இந்­திய அரசை மதச்­சார்­பற்ற அரசு என்று இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் சொல்­கி­றது. அதன்­படி பார்க்­கும்­போது மதத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எந்­தச் சட்­டத்­தை­யும் கொண்டு வர முடி­யாது. 

ஆனால் அத­னைத் தான் இன்­றைய பா.ஜ.க. அரசு செய்­கி­றது..

பாகிஸ்­தான், வங்­க­தே­சம், ஆப்­கா­னிஸ்­தான் ஆகிய நாடு­க­ளில் இருந்து பாதிக்­கப்­ப­டும் மக்­கள் இந்­தி­யா­வுக்­குள் வர­லாம் என்­றால் இலங்­கை­யில் இருந்து மக்­கள் வர என்ன தடை? 

மத ரீதி­யா­க­வும், இன ரீதி­யா­க­வும் அதி­க­மான துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்ட மக்­கள் அதி­க­மாக வாழும் நாடு இலங்கை. 

தமி­ழர்­கள் பச்­சைப் படு­கொ­லை­கள் செய்­யப்­பட்­டார்­களே இலங்­கை­யில். தமி­ழர்­கள் கட்­டிய கோவில்­கள் இடிக்­கப் பட்­டதே?

 அவை ‘இந்­துக் கோவில்­கள்’­தானே? 

மற்ற அண்டை நாட்­டைச் சேர்ந்த ‘இந்­துக்­கள்’ வர­லாம் என்­றால் ஈழத்­தில் இருக்­கும் தமி­ழர்­களை ‘இந்­துக்­க­ளாக’ இந்த பா.ஜ.க. அரசு நினைக்­க­வில்­லையா? 

ஈழத்­தில் இருப்­ப­வர்­கள் இனத்­தால் தமி­ழர்­க­ளாக இருந்­தா­லும் அவர்­க­ளது சமய நம்­பிக்கை இந்து சைவம் சார்ந்­த­து­தானே!

தமி­ழ­கத்­தில் சுமார் 70 ஆயி­ரம் ஈழத்­த­மி­ழர்­கள் அவர்­க­ளுக்­கான அரசு வாழ்­வி­டங்­க­ளில் தங்க வைக்­கப்பட்­டுள்­ள­னர். இதில் 1983ம் ஆண்டு வந்­த­வர்­கள் முதல் 2002ம் ஆண்டு வந்­த­வர்­கள் வரை இருக்­கி­றார்­கள்.

 இவர்­க­ளால் மீண்­டும் இலங்­கைக்­குச் செல்ல முடி­யாது. அவர்­க­ளுக்கு தாய்த்­த­மி­ழ­கம்­தானே அடைக்­க­லம் தர முடி­யும்?

 அவர்­க­ளைப் புறக்­க­ணிக்­கும் சட்­டத்தை தமிழ்­நாடு எப்­படி ஏற்­றுக் கொள்ள முடி­யும்?

ஒன்­றிய அரசு இப்­படி ஒரு சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வந்­த­தும், பி.பி.சி. செய்தி நிறு­வ­னத்­துக்­குப் பேட்டி அளித்த ஈழ அக­தி­கள், “எங்­க­ளுக்கு இந்­தி­யக் குடி­யு­ரிமை தரா­விட்­டால் கட­லில் கொண்டு போய் தள்­ளி­வி­டுங்­கள்” என்று பேட்டி அளித்­தார்­கள்.

திருச்சி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­துக்கு வந்த ஈழ அகதி மாண­வர் ஒரு­வர், “எனக்கு இந்­தி­யக் குடி­யு­ரி­மை­த­ரா­விட்­டால், கரு­ணைக்­கொலை செய்­து­வி­டுங்­கள்” என்று சொன்­னார். 

இதை­யெல்­லாம் மீறித்­தான் குடி­யு­ரி­மைச் சட்­டம் வரப் போகி­றது.

‘இந்­து’க்­க­ளா­கவே இருந்­தா­லும் ‘தமி­ழர்­க­ளாக’ இருந்­தால் வேண்­டாம் என்­ப­து­தான் பா.ஜ.க.வின் வகுப்­பு­வாத, இன­வெ­றுப்பு வாதக் கொள்கை ஆகும்.

பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளிக்­கா­மல் இருப்­ப­தற்கு ஆயி­ரம் கார­ணம் இருக்­கி­றது.

பா.ஜ.க.வை தமி­ழர்­கள் புறக்­க­ணிக்க இந்த ஒன்றே போதும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?