கூட்டணி தர்மம்.

 சென்னையில்விளையாட்டுஉள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்திட வேண்டும் என ரூ.25 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

பாஜக தமிழ்நாட்டில் 1 சீட் ஜெயிச்சாலே அதிசயம்.. எல்லாம் அண்ணாமலை பவர்.. -எஸ்வி சேகர்.

சிபிஎஸ்இ 9 ம் வகுப்பு பாடத்தில் டேட்டிங் குறித்த பாடம்.. கிளம்பிய எதிர்ப்பு.. 

பா.ஜ., கட்சியினரை விமர்சிக்காமல் விடாதீங்க; அதிமுக கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவு

வரும் 9-ம் தேதி முதல் ‘பாரத் அரிசி’ விற்பனை; 1 கிலோ ரூ.29 என விலை நிர்ணயம்:-ஒன்றிய அரசு

நாட்டுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது நாம் தமிழர் கட்சி"- NIA சோதனை குறித்து ஒன்றிய அமைச்சர் L.முருகன் விளக்கம்

கூட்டணி தர்மம்.

மக்களவை கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய நேரடி மற்றும் மறைமுக கூட்டங்களில் இதுவரை யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசியலில் இதுவரை அதிமுக தனித்து விடப்படுள்ளது.

மக்களவை.  தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. 

அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். 

அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

 ஆனால் மக்களவை கூட்டணி


பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. 

அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

 அதன்பின் அதிமுகவின் முக்கிய தலைகளால் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. 

முக்கியமாக விஐபி மாஜி ஒருவர் சார்பாக பல்வேறு கட்சிகளிடம் ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் பாமக, தேமுதிக என்று எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. 

இதனால் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை, திட்டங்களை அதிமுக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 முக்கியமாக விஐபி மாஜி நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக மட்டும் முதலில் கொஞ்சம் நேர்மறையாகப் பேசி உள்ளது.

ஆனால் பாமக அதிக இடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதிகமாக தேர்தல் செலவும கேட்டுள்ளது.


இதனால் பாமக - அதிமுக கூட்டணி படியவில்லை என்று கூறப்படுகிறது. 

இதுவரை  புரட்சி பாரதம் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு எடுத்த கட்சி.


மற்றபடி தேமுதிக உட்பட வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

 ஏற்கனவே பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எடப்பாடி சார்பாக உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான சில வார்த்தைகளை கட்சியின் டாப் தலைவர்களிடம் கூறியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாக.. பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவை தவிர்த்து மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். 

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

30 தொகுதிகளில் நாம் போட்டியிடுவோம்.. மீதம் உள்ள 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்போம். 

பாஜக இல்லாமல் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை நிரூபிப்போம்.. 

இஸ்லாமிய கட்சிகள், கொங்கு அமைப்புகள், நாடார் அமைப்புகளுடன் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக டாப் தலைகளிடம் பேசி இருக்கிறாராம். ஆனால் எந்த கட்சியும் இப்போதைக்கு எடப்பாடி உடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை என்று கூறப்படுகிறது.

லெட்டர் பேடு கட்சிகள் கூட  பணத்தைக் கறப்பதிலே மட்டும் குறியாக உள்ளனர்.

தேமுதிக,பாமக,தமாக,புதிய தமிழகம்,புதிய நீதிகட்சி,பச்சமுத்து கட்சிகள் பாஜக இல்லாம அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.

பிதமர் என வலிமையான ஒருவரைமுன்னிறுத்தினால்தான வாக்குகளைப் பெற முடியும் என்கிறார்கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?