கடன் அதிகம் அவர்களுக்குத்தான்


"இந்தியாவின் மொத்த கடனில் 60% மத்திய அரசுடையது. 40% கடன் மட்டுமே அனைத்து மாநிலங்களின் மூலம் பெறப்பட்டது. 2019 -2023 கால இடைவெளியில் மாநிலங்களின் மொத்த கடனில் 1.7 - 1.75% கடன் மட்டுமே கேரளா கொண்டுள்ளது." கடன் வாங்கும் வரம்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசு விளக்கமளித்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு புயல், வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம் குறித்துவிவாதிக்கமாநிலங்களவையில், தி.மு.க . எம்.பி.திருச்சி சிிவாவழங்கியநோட்டீஸ்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் பா.ஜ.க-வுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ரூ. 237 கோடி கிடைத்துள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பா.ஜ.க ஒரே ஆண்டில் சுமார் ரூ. 432 கோடி செலவு செய்துள்ளது.பா.ஜ.க-வின் வருமானம்ரூ.2,364கோடிஎனதேர்தல்ஆணையத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.   பா.ஜ.க தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர்படுகாயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில்  பக்ருதீன் (35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 


 மோடி மற்றும் எல்.கே.அத்வானியை விமர்சித்ததாகக் கூறி புனேவில் பத்திரிகையாளர் நிகில் வாக்லேவின் கார் மீதி பா.ஜ.க-வினர்  தாக்குதல் கார்கண்ணாடி உடைந்தது.


கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நரபாரத் ரெட்டி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.


பாகிஸ்தான்நாடாளுமன்றபொதுத்தேர்தல் வெற்றி அறிவிப்பில் இழுபறி நீட்டிப்பு.யாருக்கும் பெரும்பான்மை இல்லை.இம்ரான்கானின் கட்சி முன்னிலை .

கர்நாடகா அரசு மருத்துவமனையில் மருத்துவர் அபிசேக் அறுவை சிகிச்சை அறையில் தனது மணவிழா எல்லை மீறும் திருமண ஃபோட்டோ ஷூட்,வீடியோ எடுத்ததால் நடவடிக்கை.


பாஜக  ஆதரவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம். 


மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

பணக்காரக் கட்சி.

2022 -23ம் நிதியாண்டில் தேர்தலுக்காக மட்டும் பாஜக ரூ.1092 கோடி செலவிட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது.


 அதே நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.192 கோடி மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டில் தேர்தலுக்காக ரூ.646 கோடி செலவு செய்த பாஜக, அடுத்த நிதியாண்டில் 2 மடங்கு செலவு செய்துள்ளது. 


தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன.


 அதில்,”தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் சுமார் ரூ. 432 கோடி செலவு செய்துள்ளது என்றும் தேர்தல் பயணங்களுக்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் வாடகைக்கு மட்டும் பாஜக ஒரே ஆண்டில் ரூ.78 கோடி செலவு செய்துள்ளதுஎன்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 2022-23ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ரூ.237 கோடி கிடைத்துள்ளது. 


வங்கிகளில் இருந்து வட்டி மூலம் பாஜகவுக்கு கிடைக்கும் வருவாயும் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் ஒரே ஆண்டில் ரூ.75 கோடியை பாஜக கொடுத்துள்ளது. 

பாஜக கட்சியின் வருமானம் ரூ.2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு கிடைத்த 54% வருவாய்(ரூ.1120 கோடி) தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது.


பழைய செய்தித் தாள்கள் விற்றதன் மூலம் பாஜகவுக்கு சுமார் ரூ.16 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 


பழைய செய்தித் தாள் விற்பனை மூலம் 2021-22 ல் ரூ.1.33 லட்சம் மட்டுமே பாஜகவுக்கு வருவாய் கிடைத்துள்ளது பழைய செய்தித் தாள் விற்பனை மூலம் 2021-22 ஐ விட 2022-23ல் சுமார் 10 மடங்கு அதிகமாக பாஜகவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 


பழைய செய்தித் தாள் விற்ற லாபம் 10 மடங்கு அதிகரித்த அதேநேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ரூ.6 லட்சம் குறைந்துள்ளது. 


இதனிடையே 2022 – 23 காங்கிரஸ் கட்சிக்கு ரூ.452 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?