மதமாற்ற முயற்சி ?

சீதா, அக்பர் என்ற பெயர் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதமாற்ற முயற்சி ?

 எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம், அதைவிட எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம்..." .திமுக நிகழ்ச்சிகளில் இனி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் - அமைச்சர் உதயநிதி 

கிருஷ்ணகிரிமாவட்டம்தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழப்பு.

2 பசுமாடுகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளன. வனத்துறை விசாரணை.

ஆபத்தான ரசாயனம் மூலம் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை .

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஒருவர் கைது.

"இந்திய பிரதமர் ஆகும் வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது"
- முன்னாள் அமைச்சர் பொன்னையன். 

"மோடியை போன்று நாடாளுமன்றத்தை அவமதித்த பிரதமர் உலகத்திலேயே யாரும் இல்லை" - ஆ.ராசா குற்றச்சாட்டு.
 
பண்பாட்டு மொழி, பன்னாட்டு மொழி!

செயற்கை நுண்ணறிவு யுகத்தில், மொழித் தொழில் நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன் முதலாக மாநாடு நடத்திக்காட்டி இருக்கிறது தமிழ்நாடு அரசு.

கல்லில் -– - பானையில் -– காசில்- – ஓலையில் இருந்த தமிழ், அச்சில் வந்தது. கணினியில் வந்தது. இன்று செயற்கை நுண்ணறிவுத் தளத்திலும் வந்தாக வேண்டும் என்ற முனைப்பின் வெளிப்பாடே இந்த மாநாடு ஆகும். உலகின் முதல் மொழிக் குடும்பமான நாம், உலகம் முழுமைக்கும் பரவி இருக்கும் மொழிக் குடும்பமாக மாற இம்மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது.

‘தமிழ் நெட் – -99’ என்ற மாநாட்டை 1999 ஆம் ஆண்டு நடத்திக் காட்டினார், அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். ‘கணித்தமிழ் – -24’ என்ற மாநாட்டை இன்று நடத்திக்காட்டி இருக்கிறார், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“தகவல் புரட்சி காட்டுத் தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த மின்னல் வேக வளர்ச்சியில் நாம் பின்தங்கி விடக்கூடாது” என்று ‘தமிழ்நெட் – 99’ மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்று குறிப்பிட்டார்கள். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முந்தி நின்றது தகவல் தொழில் நுட்பப் புரட்சியில்.

1997–-ஆம் ஆண்டே தகவல் தொழில் நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக்கொடுத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அப்போது சிங்கப்பூரில் ஒரு மாநாடு நடந்தது. அதற்கு அன்றைய அமைச்சர் தமிழ்க்குடிமகனை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் கலைஞர். தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998-–ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார். 1997-–ல் தரமணியில் ‘டைடல் பார்க்’கை உருவாக்கிட அதற்கென புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000–-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்தார். இன்று உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐ.டி.துறையில் கோலோச்ச அடித்தளம் அமைத்தவர் முதல்வர் கலைஞர்.

‘தமிழ் நெட் – 99’ என்ற மாநாட்டின் மூலமாகத்தான் ‘தமிழ் 99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் அது அங்கீகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைக்கு அனைத்து தொழில் நுட்ப வடிவங்களிலும் தமிழைப் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கு விதை போட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக் கழகம் தோற்று விக்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலமாகத்தான் ‘கணித்தமிழ்-–-24’ மாநாடும் நடைபெற்றுள்ளது.

“ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில் நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்தும் வருகிறது. எந்த விதமான தொழில் நுட்பம் வந்தாலும் அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும், ஆள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் ஆகும்” –- என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அத்தகைய நோக்கம் கொண்டதாக இம்மாநாடு நடைபெற்றுள்ளது.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் தமிழ் மொழியின் நிலையைக் குறித்து ஆராயவும் விவாதிக்கவும் - – புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவும் - இளம் திறமையாளர்களை அடையாளம் காணவும் –- ‘பன்னாட்டு கணித்தமிழ் – - 24’ என்கிற மாநாட்டை தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் கடந்த பிப்ரவரி 8,9,10 ஆகிய நாட்களில் நடத்தி இருந்தது. மொழியை காலத்துக்கு ஏற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் அக்கறையின் வெளிப்பாடு இது.

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை அரசு முதன்மைச் செயலாளராகவும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் த.உதயச்சந்திரன் ஆகியோரின் முயற்சியால் இம்மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள்.

ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதில் மாநிலவாரியாகப் பார்த்தால் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ஐ.ஏ.எம். ஏ.ஐ. என்ற தொலைத் தொடர்பு ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது. தொழில் நுட்பத்துக்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொள்ளும் மொழியாகத் தமிழ் மொழி உள்ளது. அதனை செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் பொருத்திப் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். தகவல் தொழில் நுட்பம் எத்தகைய பாய்ச்சலைச் செய்யுமோ, அத்தோடு சேர்ந்து தமிழும் பாய்ச்சலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்த மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது.

தொழில் நுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் மொழிதான் வளரும், வாழும். அத்தகைய தகுதி தமிழுக்கு உண்டு. கணினிக்குள் புகுந்தது. இணையத்துக்குள் இணைந்தது. இன்றைய செயற்கை நுண்ணறிவுக்குள்ளும் செல்ல வேண்டும்.

அறிவியலால் தொழில்நுட்பம் வளர்கிறது. நம் அறிவாலும், ஆர்வத்தாலும் அதற்குள் தமிழும் நுழைந்தாக வேண்டும். செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ் மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ்மொழி, தகவமைக்கப்பட வேண்டும்.

ஓலைச் சுவடிக் காலம் முதல் இன்றைய AI காலம் வரையில் தமிழ், “முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்” விளங்கி வருகிறது.

பண்பாட்டு மொழியான தமிழ், பயன்பாட்டு மொழியாகவும், பன்னாட்டு மொழியாகவும் திகழ வேண்டும்.’உலகின் முதன்மையான செம்மொழி’ என்று பாவாணர் சொல்வதை நடைமுறையிலும் காட்டியாக வேண்டும். உலகத் தமிழ் நெடுஞ்சாலையில் தமிழ் பயணிக்கட்டும்.

வாழ்க தமிழ்! பரவுக தமிழ்!!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?