அமெரிக்காவின் புதிய மாகாணம் இந்தியா
உளவுத்துறை தகவல்களை பரிமாறிக் கொள்வது; பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கூட்டாக இணைந்து செயல்படுவது என்ற பெயரில், அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிகிறது.
ஜூலை-11.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய உளவுத்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஜூலை 17-ஆம் தேதியன்று அமெரிக்கா செல்கிறது.
அதைத்தொடர்ந்து வாஷிங்டனில் இரு நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதில், இரு நாடுகளும் பரஸ்பரம் உளவுத்துறை தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்குமான ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கிடையில் போக்குவரத்தை எளிமை ஆக்குவதற்குமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.
சைபர் செக்யூரிட்டி, சட்டவிரோத நிதி பரிமாற்றம், உலகளவில் சரக்குகள் பரிமாற்றங்களில் பாதுகாப்பு , பெரு நகரங்களில் பாதுகாப்பு, போலீஸ் ஏற்பாடுகள் ஆகிய துறைகள் தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உத்திகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் உயர் மட்டஅதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். புலனாய்வுகளிலும், புலனாய்வு திறன்களை அதிகரிப்பதிலும், பாதுகாப்புஅச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும் இரு தரப்புகளிலும் பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் இந்த பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் இரு நாடுகளிலும் போலீஸ் பயிற்சிகளில் உள்ள சிறந்த முறைகளும் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.
அத்துடன் கீழ்க்கண்ட முக்கிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.
பெரிய அளவிலான மரணங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கும் இரு நாடுகளின் திறன்களை அதிகரிப்பது, எந்த அச்சுறுத்தலும் அளிக்காமல் சாதாரணமாக அமெரிக்காவிற்கு சென்று வருவதற்கு எளிமையான போக்குவரத்து முறைகளை உருவாக்குவது போன்றவையும் விவாதிக்கப்பட உள்ளன.
இந்தியாவிலிருந்து முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், சினிமா நடிகர்கள், உயர்மட்ட தொழிலதிபர்கள் எந்த தடையுமில்லாமல் அமெரிக்கா வந்து செல்வதற்கு குளோபல் எண்ட்ரி என்ற திட்டத்தில் இந்தியா சேர வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாகவும் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் முடிவாகும் என்று தெரிகிறது.இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஒப்பந்தங்களுக்கு, இந்திய வெளியுறவுத் துறை நிபுணர்கள் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம்,ஏற்கனவே இந்தியா அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக, அதன் சர்வதேச ராணுவச் சூழ்ச்சி வியூகத்திற்குள் சென்று விட்ட நிலையில், இந்தியாவின் சட்டங்களான சுற்றுச்சூழல் சட்டங்கள், போலீஸ் சட்டங்கள், சிறைத் துறை மாற்றங்களில், அப்படியே அமெரிக்காவை பின்பற்றி அவர்களின் சட்டங்களையும் நிர்வாக முறைகளையும் மோடி அரசு, காப்பி அடிக்க முயற்சித்து வருகிறது;
இந்நிலையில், தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கே அடிப்படையாக இருக்கும் உளவுத்துறை தகவல்களை பரிமாறிக்கொள்வது மிகவும் ஆபத்தானதாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக மாநகரங்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவிடம் ஆலோசனை பெறுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள், சைபர் செக்யூரிட்டி விஷயங்களையும் கூட பரிமாறிக் கொள்வதும் இந்தியாவை அமெரிக்காவிடம் விற்று விடும் அல்லது ஒப்படைத்து விடும் நிகழ்வுதான்.
அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றாக இந்தியா மாறிவிடும்.
இனி இந்தியா கார்கிலில் பாகிஸ்தானுடன் போர் வந்தால் கூட அமெரிக்காவின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் கார்கிலை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐரோப்பிய யூனியனில் இது போன்ற உடன்பாடுகள்,யூரோ பொதுப்பணம் வரை இருந்தன.ஆனால் அவை உள்நாட்டு பாதுகாப்புக்கும்,பொருளாதார வளர்சசிக்கும் சரிப்பட்டு வரவில்லை என்றுதான் பிரிட்டன் வெளியேறியுள்ளது.
அமெரிக்காவின் ஆண்டைத்தனத்துக்கு ஒத்து வராத கியூபாவை அமெரிக்காவால் என்ன செய்ய முடிந்தது என்று மோடி கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எல்லா வற்றையும் அமெரிக்காவாசம் ஒப்படைத்து விட்டு மோடியும் அவரது மகா அமைசச்சரவையும் இந்தியாவில் எதை புடுங்கப்போகிறார்களாம்.
தொழிற் துறை முதல் பாதுகாப்பு வரை அமெரிக்காவிடம் ஒப்படித்து விட்ட பின்னர் இனி மோடியும் அவரது கும்பலும் செய்ய என்ன இருக்கிறது.
மோடிக்காவது உலக நாடுகள் சுற்றுப்பயணமும் ,செல்பியும்,விதவிதமான ஆடைகளை அணியும் பணிஇருக்கிறது.அவர் காவி அமைசச்சரவை கும்பலுக்கு ..?
கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் காலம் முதல்வராக இருந்த காரணத்தினால் மட்டும் கலைஞரை இன்று காய்சசி எடுக்கும் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் காலத்தில் இந்தியாவையே அமெரிக்காவுக்கு தாரை வார்க்கிறார் மோடி இதை தடுக்க அவர் என்ன செய்யப் போகிறார்.
அமெரிக்காவின் புதிய மாகாணமாக இந்தியா மாறிய பின்னர் ஜெயலலிதா துணை பிரதமராகி என்ன பயன்?
====================================================================================
இன்று,ஜூலை-11.
- உலக மக்கள்தொகை தினம்
- மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)
- மங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)
- நியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)
கொலை குற்றவாளிக்கு காவல் துறை மரியாதை .அடுத்து யுவராஜாவுக்கு கொடுப்பார்களோ ?