செவ்வாய், 5 ஜூலை, 2016

பல கேள்விகள் விடை காணாமல்

சட்டப்பேரவைத்தேர்தலின் போது கடந்த மே மாதம் திருப்பூரில்மூன்று கன்டெய்னர்களில்  பிடிபட்ட ரூ.570 கோடிதொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் கடந்த மே 13-ம் தேதிதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் உள்ள பெருமாநல்லூரில் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் ஆந்திராவுக்கு 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறக்கும்படையினர் மடக்கிப் பிடித்தனர்.

இந்த கன்டெய்னர்களை சோதனை நடத்த பறக்கும் படையினர் நிறுத்த கூறிய போது நிறுத்தாமல் சென்றன.

அதை 6 கிலோ மீட்டர்கள் துரத்தி சென்று நிறுத்திதான் சோதனை செய்தனர்.
 அதனுடன் வந்த காரில் வந்தவர்கள் வெறும் கைலி கட்டியிருந்தனர்.வங்கிப் பணத்தை கொண்டு செல்வதாகவும் தங்கள் பாதுகாப்புக்காக வந்த காவலர்கள் என்றும் கூறினார்.
ஆனால் அவர்கள் காட்டிய ஆவணங்கள் நகல்களாகவே இருந்தான்.அதிலும் வண்டி எண்கள் வேறாக குறிப்பிடப்பட்டிருந்த.
ஆவணங்களில் பல சம்பந்தமில்லாததாக இருந்தன.
முதலில் வங்கிகள் எதுவும் உரிமை கோர வில்லை.
அப்போதுதான் சம்பந்தமே இல்லாமல் மத்திய அமைசர் அருண் ஜெட்லீ காலத்துக்கு வந்தார்.
அவை வங்கிப்பணம்தான். 
ஸ்டேட் வாங்கி கோவை கிளையில் இருந்து ஆந்திர மாநிலம் வங்கிக்கு பணம் இல்லாததால் கொண்டு செல்லப்படுகிறது என்று கடத்தல்காரர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். 

அதன் பின்னரே அடுத்த நாள் அது தங்கள் பணம்தான் என்று ஒரு வாங்கி ஊழியர் கூறி விட்டு விருப்பில் சென்று விட்டார்.

பல்வேறு குழப்பங்களுக்கு காரணமான இந்தப் பணத்துக்கு ஸ்டேட் வங்கி சொந்தம் கொண்டாடிய நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு முகாந்திரம் இல்லை என சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பூரில் 3 கண்டெய்னர்களில் ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது வாதத்தில், “திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடியும் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும், அதை மறைப்பதற்காக ஸ்டேட் வங்கி நிர்வாகம் அந்தப் பணம் தன்னுடையது தான் என சொந்தம் கொண்டாடுவதற்காக பல ஆவணங்களை தயாரித்து உள்ளது.
இதில் ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கிஅதிகாரிகளின் கூட்டுச் சதி உள்ளது. 
இந்தப் பணம் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.ஒரு புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்கு முன்பாக அந்தபுகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என ஒரு வழக்கில் ஏற்கெனவேஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் வங்கி மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காகவே சிபிஐ தனியாக ஒரு பிரிவை வைத்துள்ளது. கோவையில் இருந்து இந்தப் பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக ஸ்டேட் வங்கி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால், அப்படி ஒரு அனுமதியை நாங்கள் தரவில்லை என முரண்பாடான தகவலை ரிசர்வ் வங்கி தந்துள்ளது. 

எனவே இதில் வங்கி அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரிக்க உரியமுகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது அவசியமானது’ என்று வாதிட்டார்.

சி.பி.ஐ.யில் நிறைய வழக்குகள் இருப்பதாகவும் அதனால் இவ்வழக்கை எடுக்க இயலாது என்றும் சி.பி.ஐ.வழக்குரைஞர் தெரிவித்தார்.

நிறைய வழக்கு இருப்பதால் இது போன்ற தேச பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வழக்குகளை விசாரிக்காமல் குற்றவாளிகளை தப்ப விடலாமா?

இப்பணம் ஹவாலா பணம் என்ற சந்தேகம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பைத்தொடர்ந்து பணம்கொண்டு செல்ல தகுந்த ஆவணங்கள் தேவை என்று தெரிந்தும் அவசரமாக கடத்த வேண்டிய அவசியம் என்ன?


அசல் ஆவணங்கள் கொண்டு செல்லாதது ஏன் ?
வங்கிப்பணம் என்றால் தேர்தல் ஆணையத்திடம் முதலில் தகுந்த முன் அனுமதிவாங்காதது ஏன் ?சோதனைக்காக நிறுத்திய போது நிறுத்தாமல் சென்றது ஏன்?

570 கோடிகளை கொண்டு செல்ல கவச வாகனம் போதும் என்ற நிலையில் மூன்று கன்டெய்னர்கள் ஏன் ?
இதனால் கொண்டு செல்லப்பட்ட பணம் இன்னும் அதிகமாக இருக்கலாம்?

ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப லட்சக்கணக்கில் கொண்டு செல்லும் பணத்துக்கே கவச வாகனம்,ஆயுத காவலர்கள் என்று இருக்கையில் இவ்வளவு கோடிகளில் கொண்டு செல்லும் போது கைலி கட்டிய மூன்று பாதுகாவலர்கள் எப்படி அனுமதித்தார்கள்.
இப்படி பல கேள்விகள் விடை காணாமல் உள்ளன.( <--குழப்பங்களைக்கான இதை சொடுக்கவும்.)
என்று திமுக தரப்பில் எழுப்பப்பட்டது. .

அதைத்தொடர்ந்து நீதிபதி சி.பி.ஐ .ஆரம்பக் கட்ட விசாரணையை துவக்காதது ஏன்?அப்படி விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.

போலீஸ் அதிகாரி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம், திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரிகளில், 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, தி.மு.க., சார்பில் 
போடப்பட்ட இரு வழக்குகளிலும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது, தி.மு.க.,வுக்கு கிடைத்த முதல் வெற்றி.- ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

======================================================================================
இன்று,
ஜூலை-05.


  • சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)

  • சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)

  • பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954
  • அல்ஜீரியா விடுதலை தினம்(1962)
  • ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)
  • குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட  டோலி என்ற செம்மறி ஆடு(1996)
  • =======================================================================