சனி, 16 ஜூலை, 2016

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதா?

சமீபத்தில் ஒரு தமிழக மின்வாரியம் சம்பந்தமாக ஒரு செய்தி வெளி யானது. 
இந்தியாவில் உள்ள மாநில மின்வாரியங்களின் செயல்பாடுகள் குறித்துஅறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட் டுள்ளது. 

அதில் தமிழக மின்வாரியத்திற்கு அளித்துள்ளது 34வது இடமாகும். 

அதாவது ‘ஏ’ பிளஸ் மதிப்பெண் அளித்துள்ளது. 
இப்படிமதிப்பெண் அளிப்பதற்கு மின்வாரிய நிதி ஏற்பாடுகள், மின்வினியோக ஏற்பாடுகள் பரா மரிப்புகள் மற்றும் மின்சாரம் விற்ற வகையில் வசூல் மற்றும் பல அளவுகோல்களை மத்திய அரசு வைத்துள்ளது.
நிதிப்பிரச்சனைகளில் தமிழக மின்வாரியம் சற்று கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். 

ஆனால் தமிழகம் மிகை மின்மாநிலம் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. 
காற்று மூலம் வரும்மின்சாரம் அதிகமாகவே உள்ளதாக கூறி மின்வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி விலை ரூ.2.30 என்றால் கூட உற்பத்தியை நிறுத்தி வையுங்கள் என்று மின்வாரியம், அனல் மின்நிலையங்களுக்கு உத் தரவு போடுகிறது. 

ஒரு பக்கம் காற்றாலை மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பதற்கு தனிப்பாதை தேவை என்று காற்றாலை உற்பத்தி யாளர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழகம் வெளியிலிருந்து 3200 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 8கொடுத்து வாங்குவதைப்பற்றி மௌன மாகவே இருந்து விடுகின்றார்.

தமிழக மின்வாரிய நிதிநிலைமைகள் இப்படி மோசமானதற்கான காரணம் என்ன?

அதைப்பற்றி மத்திய மின்துறை அமைச் சர் ப்யூஸ்கோயல் எதுவும் சொல்லாமல், தமிழகமின்வாரியத்தைபற்றி குறைகூறி இருப்பதை தமிழக முதல்வர் கண்டு கொள் ளவே இல்லை. கண்டு கொண்டால் உண்மை யைச்சொல்லவேண்டுமல்லவா?

1990 ஆம் ஆண்டில் தேசிய மின்கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து தனியாரும் மின்உற்பத்தி வினியோகத்தில் ஈடுபட லாம் என்று முடிவெடுத்து அமல்படுத்தியது புதிய பொருளாதாரக்கொள்கையை அமல்படுத்திய காங்கிரஸ் அரசு. 

அப்படிவந்ததுதான் என்ரான் பகாசூரக் கம்பெனி. 

அந்த அமெரிக்ககம்பெனியால் மகாராஷ்டிரா மாநில மின் வாரியத்தையே கபளீகரம் செய்யத் தீட்டப் பட்ட சதித்திட்டத்தை எதிர்த்து வலுவான போராட்டங்கள் எழுந்தன. 
திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

பாஜக ஆட்சியில் இல்லாத பொழுது எதிர்த்தது. 1
996 இல் 13 நாட்களே மத்தியில் ஆட்சியிலிருந்த நேரத்தில் பாஜக தலைவர் பிரதமர் வாஜ்பாய், அதற்கான அனுமதியை அளித்தார்.

அதே என்ரான் அடிப்படையில் தமிழகத்தி லும் ஏழு தனியார் மின்நிலையங்கள் அமைந்தன.
இந்த ஏழு தனியார் மின்நிலையங்கள் மூலம் மின்கொள்முதல் செய்திட 15 ஆண்டு களுக்கு தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் போட் டது. 
அந்த மின்நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழக மின்வாரியத்திற்கே அளித்திடவேண்டும் என்ற ஒப்பந்தம் நடை முறைக்கு வந்தது.அந்த மின் உற்பத்தி நிலையங்களில், ட சென்னை பேசின்பாலம் அருகில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான 29.05 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜிஎம் ஆர் மின்நிலையம். 4 ஒ 50 மெகாவாட் திறன்கொண்டதாக அமைக்கப்பட்டது. 

ஆனால் 50 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டவில்லை என்பதால் மின்வாரியம் 4 ஒ 49 என்று மதிப்பீடு செய்து குறைத் தது. 196 மெகாவாட் மின்திறன் உள்ள இந்தமின்நிலையம் 09.10.1999 இல் மின்உற் பத்தியை துவக்கியது. மெகாவாட் ஒப்பந்தக்காலம் 15 ஆண்டுகள்.

தற்போது மின்உற் பத்தி செய்யாமல் மூடிக் கிடக்கின்றது.
ட தருமபுரி மாவட்டத்தில் உள்ள சாமல்பட்டி பகுதியில் அமைந்த மின்நிலையம். 106 மெகாவாட் திறன்கொண்டது.
11.01.2001 இல் அமைக்கப்பட்டு மின் உற்பத்தியை துவக்கியது. ஒப்பந்தக்காலம் 15 ஆண்டுகள்.இதிலும் உற்பத்தி இல்லை.

ட திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களப்பாலில் அப்போல்லோ மருத் துவமனைக்கு சொந்தமான பிள்ளை பெருமாநல்லூர் மின்நிலையம் 330.5 மெகாவாட் மின்திறன்கொண்டது.26.04.2001இல் மின்உற்பத்தியை துவக்கியது.துவக்கத்தில் நாப்தா எரிபொருள்.பின்னர் 2006 ஆம்ஆண்டில் எரிவாயு பயன்படுத்தப்பட்டது. இதன் ஒப்பந்தக்காலம் 25 ஆண்டுக்காலம்.
ட மதுரை சமயநல்லூரில் மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட மதுரை பவர் கார்ப்பரேஷன் 106 மெகாவாட்திறன்கொண்டது. 

22.09.2001ல் மின் உற்பத்தியை துவக்கியது.

 நெய்வேலியில் துவக்கத்தில் ‘0’ யூனிட்;பின்னர் SACMS இப்பொழுது AAPN என்றுபெயர் மாறிக்கொண்டே இருக்கிற, நிலக்கரி யை எரிபொருளாக கொண்ட 250 மெகாவாட் மின்நிலையம் 16.12.2002ல் உற்பத்தியைத் துவக்கியது. 

(இ ந்த மின்நிலையம் நிலக்கரிகிடைக்கும் இடத்திலேயே அமைக்கப்பட் டது. 
சமப்படுத்தப்பட்ட இடம், நிலக்கரி கொண்டு வந்து சேர்க்கும் ஏற்பாடு எல்லாம்இருந்தால் 2001 ஆம் ஆண்டில் ஒரு மெகாவாட்டுக்கு 2 முதல் 2.5 கோடி ரூபாய் தான்செலவாகும்.
ஆனால் மத்திய அரசு ஒருமெகாவாட்டுக்கு 5.8 கோடி ரூபாய் நிர்ணயித்தது. 
பின்னால் அந்நிறுவனத்திற்கும் மின்வாரியத்திற்கும் தாவா ஏற்பட்டது.  
அந்நிய கம்பெனி இந்தியாவிற்கு வெளியே தான் வழக்கை நடத்த வேண்டும்என்று நிர்ப்பந்தம் செய்ததால் லண்டனில் வழக்கு நடந்தது. 
கம்பெனி சார்பாக ஆஜரானவழக்குரைஞர் இன்றைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி. தமிழக மின்வாரியத்திற்கு இதனால் மூலதனச்செலவிலேயே ரூபாய் 700 கோடி இழப்பு ஏற்பட்டது.)

மதுரை பவர் கார்ப்பரேஷன் மின்நிலைய ஒப்பந்தமும் வருகின்ற செப்டம்பர் மாதத் தில் முடிவடைந்து விடும். அதுவும் மின்உற் பத்தியை நிறுத்திவிடும்.

இந்த மின்நிலையங்கள் 15 ஆண்டு காலத்தில், தாங்கள் முதலீடு செய்த 30 சதவீததொகையை எடுத்துவிட்டன. அதற்கும்மேலான தொகையை மின்வாரியம் அளித்து விட்டது. இம்மின்நிலையங்களுக்கான முதலீடு 70 சதவீதம் கடன் மூலதனமும், 30 சதவீதம் பங்கு மூலதனமும் ஆகும். இந்த 30 சதவீத பங்கைக்கூட வருடத்திற்கு 7.5 சதவீதம் என்ற அடிப்படையில் அளித்தால் போதும். 30 சதவீத முதலீட்டிற்கான 16 சதவீத லாபம் உத்தரவாதப்படுத்தப்படும்.
வேறு வகையில் சொன்னால் ஜிஎம்ஆர் கம்பெனி 196 மெகாவாட். 
இதற்கு ஆன மூலதனச் செலவாக ஆண்டுக்கு 90 கோடி ரூபாய்அளவில் மின்வாரியத்தால் அளிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு 1350 கோடி ரூபாய் அளிக் கப்பட்டுவிட்டது. 

இதன் 30 சதவீத மூலதனம் ரூ.180 கோடி ஆகும்.சாமல்பட்டி மின்நிலையம் 105 மெகாவாட் என்றால் மூலதனம் ரூ.350 கோடி ஆகும். 15 ஆண்டுகளில் மின்வாரியம் அளித்திருக்கும் மூலதனத் தொகை ரூ.1600 கோடி ஆகும்.மதுரை பவர் கார்ப்பரேஷன் 105 மெகாவாட்; இதன் மூலதனத்தொகை ரூ.350 கோடி என்றால் நாம் செலுத்தி இருக்கும் தொகை ரூ.1600 கோடி ஆகும்.

நெய்வேலியில் அமைக்கப்பட்ட `ஜீரோ யூனிட்’ என்று சொன்ன எஸ்டிசிஎம்எஸ் என்றஅமெரிக்க கம்பெனிக்கு 250 மெகாவாட் மின்நிலையம் அமைக்க அனுமதி கொடுக்கப் பட்டது. நிலக்கரி கொண்டு வரும் ஏற்பாடு, தண்ணீர் இப்படி அனைத்துமே நெய்வேலி யில் தயாராக இருந்தது இப்படிப்பட்ட நிலையில் 1 மெகாவாட் அமைத்திட 2 கோடி தான் செலவாகும்; அப்படியானால் மொத்தச் செலவுரூ.500 கோடி ஆகும். ஆனால், இதற்கு ஆன முதலீடு ரூ.850 கோடியாக ஏற்றுக்கொள் ளப்பட்டது. 

இதற்கு ஆண்டுக்கு ரூ.360 கோடி நிலைக் கட்டணமாக அதாவது மூலதனச் செலவாக அளிக்கப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்நிலையத்திற்கான முதலீட்டை அளித்துவருகின்றோம். 

தமிழக முதல்வர் பல திட்டங்களை தனது 110 விதிகளின் கீழ் அறிவித்து வருகின்றார். அவ்வாறு இருக்கும்போது முதலீடு செய்த அளவிற்கு மேல் மின்வாரியத்தின் நிதி அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒப்பந்தக்காலம் முடிந்துவிட்ட நிலையில், நமது மின்வாரியத்தின் இடத்திலேயே உள்ளமின்நிலையத்தை தமிழக அரசு ஏன் கையகப்படுத்தக்கூடாது? 
இப்படி ஆண்டு தோறும் மின்துறையில் முதலாளிகள் போட்ட மூலதனத்திற்கு லாபமாக, மின்வாரியத்தின் பணத்தை அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால் ஆண்டு தோறும் 250 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை நிறுவி இருக்கமுடியும்.

இந்த 15 ஆண்டுகளில் 3,750 மெகாவாட்மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி யிருக்கமுடியும்.வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதை தவிர்த்து இருக்க முடியும்.தமிழக மின்வாரியம் வெளியிருந்து மின்சாரம் வாங்கிய காரணத்தினால் நிதி நிலைமை மோசமானது என்பது நடந் திருக்காது. இந்தியாவிலேயே தமிழக மின்வாரியம் முதலிடத்தில் இருந்திருக்கும்.

அவ்வாறு இல்லாமல் போனதற்கு மத்தியில் ஆண்ட பாஜக அரசு கொண்டுவந்த மின்சாரச் சட்டம் என்பதை மறந்துவிட்டு தற்போதைய மத்திய அரசின் மின்துறை அமைச்சர் ப்யூஸ்கோயல் தமிழகத்தை குறைகூறக்கூடாது.மத்திய அரசின் மின்கொள்கையால் ஏற்பட்ட இந்த நிதிபிரச்சனையை தீர்த்திட ஏன் மத்திய அரசை தமிழக மின்வாரியத்தின் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் கோராதது ஏன்?

தற்போது ஒப்பந்தக்காலம் முடிவடைந்த தனியார் மின்நிலையங்களை தமிழக அரசேகையகப்படுத்திட தேவையான உத்த ரவை மத்திய அரசிடம் கேட்கலாம். 

கேட்கமாட்டார்கள். 

ஏனென்றால் இது முதலாளிகளின் நலனை பாதிக்கும் ஒன்றல்லவா...!
                                                                                                                                                  கே.விஜயன்,
நன்றி:தீக்கதிர் .
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று,
ஜூலை-16.
  • சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
  • ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
  • எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)
  • பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)
  • டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++