பழைய சாதத்தில் விட்டமின்கள்.



  "எல்லா மீனும் கிடைக்குது.ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல"
எல்லோரும் சிரித்த திரை நகைசுசுவை.

அம்மாள் இந்த விட்டமின்கள் கடைகளில் உணவுப்பொருட்களாகவும்,மாத்திரைகளாகவும் கிடைக்கும்.
இவை நம் உடல் நலத்துக்கு முக்கியமான காரணி மீன்கள்.

மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம். 
வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. 

உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. 

சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். 

அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. 
இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.


அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. 

அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.
இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். 

இந்த உணவுச் சத்துகள் அவற் றின் சுத்தமான வடிவத்தில் பிரித் தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண் டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக் கும் முறைகளும் கண்டறியப் பட்டன.இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.

ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்த போது அவை விரைவிலேயே உடல்நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சி யாளர்கள் கண்டனர்.

எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க் கைக்கு கட் டாயமாக தேவைப் படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அதுபோன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள்(Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. 
பழைய சாதத்தில் விட்டமின்,பி 6,பி 12.இருக்கிறது.


அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். 

உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமினை ((Amine - - அமின் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமின் ((Vital + Amine = Vitamine) ) என்று பெயர் சூட்டினர். 

அதைத் தொடர்ந்து மற்ற விட்டமின்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. 

பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது.வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. 

எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. 

ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.)
எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. 

அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது.
இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. 

அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும்.எனவே, வைட்டமின்கள் என்றால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். 

வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. 
அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் பழைய சாதத்தில்  பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் அதை ஆய்வு செய்த  அமெரிக்க மருத்துவர்கள் .
உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். 
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.
காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
2.இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் 6 இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல்ப் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.
5. இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.
9. எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது.
10. பழைய சாதம் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.
===================================================================================================================================
இன்று,
ஜூலை-17.
  •    உலக  நீதி தினம்
  • தென்கொரியா அரசியலமைப்பு தினம்
  • கலிபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் ஆரம்ப நிகழ்வுகள் டிவி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
  • கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது(1976)
=====================================================================================
முகநூல் 

=======================================================================================

" ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தையும்
காண்பிப்பாயாக என்று ஏசுநாதர் சொல்லுகின்றார் "
என்று ஒரு கிறிஸ்துவ துறவி போதனை செய்தார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் உண்மை தானா என்று அந்த துறவியையே பரிசோதிக்க விரும்பினான்.

அவர் கன்னத்தில் அறைந்தான்.
உண்மையான அந்த துறவி மறு கன்னதையும் காட்டினார்.

அவன் தன் வலு முழுவதும் கூட்டி மறு கன்னத்திலும் அறைந்தான்.
உடனே அவனை பாய்ந்துபிடித்த துறவி செம்மையாக உதைக்கத் தொடங்கினார்.
வலி தாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.
" நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? 
இன்று காலையில் தானே ஒரு கன்னத்தில் ஒருவன் அறைந்தால் மறு கன்னத்தையும் அவனுக்கு காட்டு என்று உபதேசம் செய்தீர்கள் ? "
துறவி சொன்னார்:
" ஏசு மறு கன்னத்தைக் காட்டு என்பதுடன் நிறுத்திவிட்டார். மறு கன்னத்திலும் அறைந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லை. அதை நம்முடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டார் ! "
                                                                                                                            - சந்திரன் வீராசாமி 
====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?