ராஜ [பக்ஷே] விசுவாசம் ?

"முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது"
என்று இலங்கையின்   ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
jeyasurya
ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசிஇலங்கைப் படையினர் தாக்கியதால்  48,000 க்கும் அதிகமா தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு தற்பொது பல்வேறு நெருக்கடிகலில் உள்ள து.
இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் அழித்ததாக ஒப்புதல்  வாக்குமூலம் கூறியுள்ளார்.

"கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது.
 ஏனென்றால் அந்த பகுதியில் 48,000-க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
அதானால்  அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம்.
ஆனால் அவரோ " எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் .நான் பார்த்துக்கொள்கிறேன்."என்று  தாக்குதலை நடத்த  உத்தரவிட்டார்.
அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் காட்டியிருந்தால் இறுதிகட்டப்போரில் இலங்கை படை வென்றிருக்க முடியாது.
இறுதிகட்டப் போரில் ஈழத்தமிழர்களை அழித்து இலங்கை  வெல்ல உறுதுணையாக இருந்த இந்தியா,சீனா பொன்ற நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது "என்று இலங்கைப் படையினர் மத்தியில் பேசியுள்ளார்  ஜெயசூர்யா.
இலங்கை படையின் தளபதி ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. 
 மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்றும் அவர் கூறியுள்ளதால்ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான இது வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உள்ளது.
suran
இனியாவது ஐ.நா,தனது உறக்கத்தையும் ஈழத்தமிழர்கள் மீதான பாராமுகத்தையும் விட்டு விட்டு ஈழத்தமிழர்கள் அழித்தொழிப்புக்கு ஏதாவது நடவடிக்கையில் இறங்குமா?
இலங்கையின் படைத்தளபதியே கொடுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் காணாதா?
பாலஸ்தீனர்கள்,சிரியா,சூடான் ,ஈராக் ,ஈரான் பொன்ற நாடுகளில் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை தொடரும் ஐ.நாவுக்கு ஈழத்தமிழர்கள் மட்டும் ஏன் இந்த பாராமுகம்?அவர்கள் மனித வகையில் சேரவில்லையா ?அல்லது ராஜபக்ஷே போடும் அல்லது போட்ட எழும்புத்துண்டுகளுக்கு காட்டும் ராஜ[பக்ஷே]விசுவாசமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதிலும் ரசாயனம்.
===============
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம்,படுகொலைக்குப்பின்னர்.கற்பழிப்புகளுக்கு கடுமையான தணடனை கொடுக்க பலரும் வற்புறுத்துகின்றனர்.
தூக்குத்தண்டனை வரை அதற்கான தண்டனையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதிலும் காயடிப்பு போதும் என்பதே பலரின் யோசனையாக உள்ளது.அதுதான் பொருத்தமானதாகவும் இருக்கும்.
காயடிப்பிலும் இப் போது புதிய தொழில் நுணுக்கம் வந்துள்ளது.அதுதான் ரசாயனக் காயடித்தல் .
"காயடித்தல்' என்பது ஆண்கள் என்றால் விதைப் பையை நீக்குதல்.
 பெண்கள் என்றால் கருப்பையை நீக்குதல். 
பயிற்சி பெற்ற மருத்துவர்கள்தான்  இதை செய்ய இயலும்.
ஆனால்  ரசாயன காயடித்தல் என்பது இதில் இருந்து மாறுபட்டது. பாலியல் உணர்வை தூண்டும் ஆன்ட்ரோஜன் ஹார்மோனுக்கு எதிராக வினை புரியும்  "சைப்ரோடெரோன் அசிடேட், மெட்ரோசைப்ரோஜெஸ்ட்ரோன்"போன்ற மருந்துகளை ஆண்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீதம், ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும். 
இதன் பிறகு அந்த ஆணுக்கு பாலியல் இச்சை- வன்முறை சிந்தனைஎதுவும் ஏற்படாது. தண்டனை காலம் முடிந்த பின்னர்  இவர்களுக்கு  மீண்டும் மாற்று மருந்து கொடுத்து, மீண்டும் பழைய உணர்வுள்ள நிலையை உண்டாக்கி விடலாம்.
இம்மருந்தை கொடுப்பதில் சில பாதிப்புகள் எற்பட லாம் .
வயதான காலத்தில்  இதய நோய், எலும்பு உதிர்தல் போன்ற நோய்சிலருக்கு எற்படும் வாய்ப்புள்ளது . 
அல்லது  பெண்களைப் போல் மார்பகம் வளர்ச்சி அடையலாம். முடிகள் உதிரலாம்.  
இப்போது அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் இந்த ரசாயன காயடிப்பு  தண்டனை சட்டப்பூர்வமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
 
எல்லாவற்றிலும் அமெரிக்காவை பின்பற்றும் நம் அரசு இதிலும் பின்பற்றலாமே?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?