எதிர்ப்பு.....,



விஸ்வருபத்துக்கு இப்போது எதிர்ப்பு முஸ்லீம் அமைப்புகளிடம் இருந்து.
காரணம்.
தாலிபான் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கோவையில் சில நாட்கள் இருந்ததாகவும்,முஸ்லீம் சிறுவன் ஒருவன் ஆயுதங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பதாகவும் காட்சிகள் வருகிறதாம்.
இது எதிர்ப்பு தெரிவிக்க வலுவான காரணமாக அமையுமா?
முஸ்லீம் மதத்துக்கு ,அல்லது அதன் பழக்க -வழக்கங்களுக்கு எதிராக,அல்லது கிண்டல் செய்து காட்சிகள் வந்தால் எதிர்ப்பது சரியாக இருக்கும்.கோவையில் தீவிரவாதி தங்கியிருந்தார் என்று சொல்வது  எப்படி முஸ்லீம் மதக்கொள்கைகளுக்கு எதிரானதாக அமையும்?
கோவையில் அத்வானி வந்த பொது குண்டு கள் வெடித்தது உண்மையான நிகழ்வுதானே.
மும்பை கலவரத்தில் இந்துக்களையும் ,முஸ்லீமகளையும் காட்டாமல் கிறுத்துவர்களையும் -புத்த பிட்சுகளையுமா காட்ட இயலும்.
தாவூத் இப்ராகிமை பயங்கரவாதி என்றால் கூட இனி அது முஸ்லீம்களை  அவமானப்படுத்துவதாக கூறும் நிலை உருவாக்கி விதம் போல் தெரிகிறது.
எவ்வளவோ மதக்கலவரங்கள் நடந்த போதும் இன்னமும் முஸ்லீம்களும் -இந்துக்களும் ஒற்றுமையுடந்தான் இந்தியாவில் ,தமிழகத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
பல மசாலாப் படங்களில் பயங்கர வில்லனை நெற்றியில் குங்குமம்.திருநீறு பூசி பக்கா இந்துவாக காட்டி வருகின்றனர்.
அதற்கு எதிர்ப்புகள் இதுவரை கிளம்பவில்லை.
 இந்தியாவில் பெரும் மக்கள் தொகை இந்துக்களும்,முஸ்லீம்களும்தான் அவர்களை வைத்துதான் பிரச்னைகள் உருவாகின்றன.அதை வைத்துதான் படம் எடுக்க இயலும்.
அதில் மதத்தையே குறை கூறி அல்லது விமர்சித்து வசனங்கள் காட்சிகள் வந்தால்
கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் .தடைசெய்ய வேண்டும்.
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமல்ல.பாகிஸ்தான் தயார் செய்து இந்தியாவுக்கு அனுப்பும் தீவிரவாதிகளில் எத்தனை சிறுவர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர்களின் ஆயுத அறிவு எப்படி அவர்களின் மூளைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்றும் பட எதிர்ப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதி என்ற கருத்தை ஏற்க்க முடியாது.அதேபோல் தீவிரவாதிகளில் முஸ்லீம்கள் என்பதையும் எற்க முடியாது.
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது.
அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட அடியாட்கள்தான்.அவர்களை  பிற நாடுகளில் குழப்பம் செய்ய பயன்படுத்திக்கொள்கிறார்கள்.அதற்கு மதம் ஓரு முக முடியாக இருக்கிறது.
பயங்கரவாதத்தையும் மதத்தையும் சேர்த்து குழ்ப்பாதிர்கள்.
பயங்கரவாதத்துக்கு மதத்தின் பெயரால் வக்கலாத்து வாங்க வே ண்டாம்.வாங்காதீர்கள்.மதத்தின் அடிப்படியில்தான்  முந்தைய  இந்தியா ,இந்தியா-பாகிஸ்தான் என இரு துண்டாடப்பட்டது.அதை இப்போது மாற்றிக்கூற இயலுமா?
வரலாறை வரலாறாகவே பார்ப்போம்.அதை மாற்ற வேண்டாம்.
து ப்பாக்கி படம் மும்பை கலவரத்தின் பின்னணி.அதிலும் இந்துக்கள் -முஸ்லிகள் பங்கு உண்டு.  அதில் முஸ்லீகளாக காட்டக் கூடாது என்றீர்கள்.போராடினீர்கள் அதில் உள்ள நியாயம்.அந்த குண்டுவெடிப்பு நடக்கும் முன்னர் அதை செய்பவர்கள் முஸ்லீகள் தான் என்று கட்டப்பட்டதால் உண்டான கோபமாக இருக்கலாம்.
ஆனால் நடந்த கதையை மாற்ற வேண்டுமா?அவை பதிவுகள்.மதம் ,வழிபாட்டுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்பை காட்டுங்கள்.

இதே கோபத்தை உங்கள் மதத்தின் பேரால் பயங்கரவாதம் உருவாக செய்யும் சிலர் மீது காட்டி மதத்தின் பேரை கெடுக்க வைக்காமல் இருக்க செய்யுங்கள்.அதுதான் உங்களின் உண்மையான போராட்டமாக அமையும்.

suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?