உயிர் காக்கும் ,
உலக நாடுகளை விட இன்று அதிக அளவில் சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடு இந்தியா.
தினசரி தமிழக நாளிதழ்களை திறந்தால் சாலை விபத்தில் இத்தனை பேர்கள் இறந்தார்கள் என்ற செய்தி இல்லாமல் இருக்காது.
அதில் சாலையில் ரத்தம் வழிய நெடு நேரம் கவனிப்பாரின்றி அல்லது 108 வர தாமதமாவதால் இறந்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12
மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது. ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு
மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது.இந்த நிலையை போக்க சென்னை ஐ.ஐ.டி ,ஆய்வு வழி கண்டு பிடித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
மூன்றாண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.இந்த முயற்சிக்கு மத்திய
அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தேவையான நிதியை வழங்கியது.
டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான ,
குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர்.
வெற்றியான ஆய்வை குறித்து டாக்டர் சோமா கூறும் போ து:
" அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த
வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் .
ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு
தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும். இந்த செயற்கை ரத்தம், ரத்த
வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே
ஆகும்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை
செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும்.இதன் மூலம்
விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள்
பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது. இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு
செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடி.,யின் பயோ டெக்னாலஜி துறை
முடிவு செய்துள்ளது.இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி
செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது.
ஆனால் இந்த செயற்கை ரத்தம்
நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் எய்ட்ஸ் போன்ற நோய் கிருமிகள் தொற்று
இல்லாததாகவும் இருக்கும். அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த
முடியும்.
இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக உயிர் காக்கும் விதமாக இருக்கும்."
என்று தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் இணைந்து செயல்பட்ட அனைத்து அறிவியலாளர்களுக்கும் சாலையில் உயிரை கையில் அல்லது ஹெல்மெட்டில் பிடித் துக்கொண்டு செல்லும் மனிதர்கள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.
--------------------------------------------------------------------------
உயிர் காக்க உதவும் முகனூல்
------------------------------------
பெங்களூரு நகரின், பெல்லாண்டர் பகுதியில், "பார்பர் ஷாப்' நடத்தி வருபவர், ரஷீத் ஆலம், 30. இவரின் கடைக்கு, பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், ரஷீத் கான், 22, முடிவெட்டி கொள்ள, அவ்வப்போது செல்வது வழக்கம்.அதுபோன்றே, ரஷீத் கானின் நண்பர், நிலாப் என்ற, கை நிறைய சம்பாதிக்கும், தகவல் தொழில்நுட்ப துறை இளைஞரும், அந்த கடைக்கு செல்வது உண்டு.
ஒரு நாள், கடையில் முடிவெட்டி கொண்டிருந்த ரஷீத் ஆலம், சோகமாக காணப்பட்டார். முடி வெட்ட சென்ற நிலாப் மற்றும் ரஷீத் கான், "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்' என, கேட்டுள்ளனர். பார்பர் ஷாப் உரிமையாளர் தெரிவித்த தகவல், அந்த இளம் உள்ளங்களை கரைத்தது.
"என் மகன் சிசானுக்கு, ரத்த புற்றுநோய் உள்ளது. 6 வயதே ஆகும் அவனுக்கு இது வரை கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து, சிகிச்சை அளித்தோம். பணம் அனைத்தும் கரைந்து விட்டது; அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறேன்' என, கூறினார்.
ரஷீத் ஆலம் சோக கதையை கேட்டு மனம் இரங்கிய அந்த இளைஞர்கள், சிறுவன் சிசானின் மருத்துவ சான்றுகளை வாங்கி பார்த்தனர்.
"நிரந்தர நிவாரணத்திற்கு வழியே இல்லை; 20 லட்ச ரூபாய் செலவழித்தால், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்தால், குணம் கிடைக்க வாய்ப்பு உண்டு' என, மருத்துவர்கள் கூறியிருந்தனர்.உடனே, நண்பர்கள் இருவரும், "பேஸ்புக்' இணையதளம் மூலம், "சேவ் சிசான்' என்ற பெயரில் ஒரு பக்கத்தை துவக்கி, அதில், சிறுவன் சிசானின் நோய், சிகிச்சை, அதற்கான செலவு என அனைத்து தகவல்களையும் சேர்த்து, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து, நிதியுதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர்.இணைய பக்கத்தை துவக்கிய முதல் நாளில் மட்டும், 40 ஆயிரம் ரூபாய் சேர்ந்ததால், நம்பிக்கை அடைந்த அந்த இளைஞர்கள், தொடர்ந்து பலருக்கும், அனுப்பி, உதவி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.
"பேஸ்புக்' இணைய பக்கத்தில், சிசானின் தந்தை ரஷீத் ஆலம் வங்கி, கணக்கு எண் விவரங்களை அளித்துள்ளதால், நாள் தோறும், குறைந்தபட்சம், சில ஆயிரம் ரூபாயாவது சேர்ந்து வருகிறது.
"சில மாதங்களில், பணத்தை சேர்த்து, மகனுக்கு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்து விட முடியும்' என்ற, நம்பிக்கை அடைந்துள்ள பார்பர் ரஷீத் ஆலம், தன் வாடிக்கையாளர்கள் ரஷீத் கான் மற்றும் நிலாப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் உதவும் எண்ணம் உள்ளவர்கள் உதவலாமே.
___________________________________________________________________________________
உயிர் காக்க உதவும் முகனூல்
------------------------------------
முகனூல் எனப்படும் பேஸ் புக் அரட்டை அடிக்கவும்,சிலர் ஏமாற்றிப் பணம்பறிக்கவும்,காதல் கொள்ளவும் மட்டுமின்றி
பிறர் உயிரை காக்கவும் பயன் படுகிறது.அது அவரவர் மனதை பொறுத்தது.இதோ ஒரு நிகழ்வு.பெங்களூரு நகரின், பெல்லாண்டர் பகுதியில், "பார்பர் ஷாப்' நடத்தி வருபவர், ரஷீத் ஆலம், 30. இவரின் கடைக்கு, பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், ரஷீத் கான், 22, முடிவெட்டி கொள்ள, அவ்வப்போது செல்வது வழக்கம்.அதுபோன்றே, ரஷீத் கானின் நண்பர், நிலாப் என்ற, கை நிறைய சம்பாதிக்கும், தகவல் தொழில்நுட்ப துறை இளைஞரும், அந்த கடைக்கு செல்வது உண்டு.
ஒரு நாள், கடையில் முடிவெட்டி கொண்டிருந்த ரஷீத் ஆலம், சோகமாக காணப்பட்டார். முடி வெட்ட சென்ற நிலாப் மற்றும் ரஷீத் கான், "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்' என, கேட்டுள்ளனர். பார்பர் ஷாப் உரிமையாளர் தெரிவித்த தகவல், அந்த இளம் உள்ளங்களை கரைத்தது.
"என் மகன் சிசானுக்கு, ரத்த புற்றுநோய் உள்ளது. 6 வயதே ஆகும் அவனுக்கு இது வரை கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து, சிகிச்சை அளித்தோம். பணம் அனைத்தும் கரைந்து விட்டது; அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறேன்' என, கூறினார்.
"நிரந்தர நிவாரணத்திற்கு வழியே இல்லை; 20 லட்ச ரூபாய் செலவழித்தால், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்தால், குணம் கிடைக்க வாய்ப்பு உண்டு' என, மருத்துவர்கள் கூறியிருந்தனர்.உடனே, நண்பர்கள் இருவரும், "பேஸ்புக்' இணையதளம் மூலம், "சேவ் சிசான்' என்ற பெயரில் ஒரு பக்கத்தை துவக்கி, அதில், சிறுவன் சிசானின் நோய், சிகிச்சை, அதற்கான செலவு என அனைத்து தகவல்களையும் சேர்த்து, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து, நிதியுதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர்.இணைய பக்கத்தை துவக்கிய முதல் நாளில் மட்டும், 40 ஆயிரம் ரூபாய் சேர்ந்ததால், நம்பிக்கை அடைந்த அந்த இளைஞர்கள், தொடர்ந்து பலருக்கும், அனுப்பி, உதவி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.
"பேஸ்புக்' இணைய பக்கத்தில், சிசானின் தந்தை ரஷீத் ஆலம் வங்கி, கணக்கு எண் விவரங்களை அளித்துள்ளதால், நாள் தோறும், குறைந்தபட்சம், சில ஆயிரம் ரூபாயாவது சேர்ந்து வருகிறது.
"சில மாதங்களில், பணத்தை சேர்த்து, மகனுக்கு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்து விட முடியும்' என்ற, நம்பிக்கை அடைந்துள்ள பார்பர் ரஷீத் ஆலம், தன் வாடிக்கையாளர்கள் ரஷீத் கான் மற்றும் நிலாப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் உதவும் எண்ணம் உள்ளவர்கள் உதவலாமே.
___________________________________________________________________________________
சிஐஏ சதித்
திட்டம்
---------------------------------
ஈக்குவடார் அதிபர் ரபெல் கொரியாவை கொல்ல அமெரிக்காவின் சிஐஏ சதித்
திட்டம் போ ட்டியிருப்பதாக சிலி நாட்டை சேர்ந்த பத் திரிகையாளர் சியோ மெரி
பெல் எழு தியுள் ளார்.
லத்தீன் அமெரிக்க நாடு களில் ஒன்றான
ஈக்குவடார் அமெரிக்க ஏகாதிபத்தியத் தை எதிர்த்தும், சோசலிச இடதுசாரி
நாடுகளுடன் இணைந்து செயலாற்றி வரு கிறது.
ஈக்குவடார் ஜனாதி பதி ரபெல்
கொரியா அமெ ரிக்காவின் எந்த நிர்ப்பந்தத் திற்கும் அடிபணியாமல் இடதுசாரி
பாதையில் நாட் டை வழிநடத்தி வருகிறார்.
பொருளாதார வல்லுந ரான ரபெல் கொரியா
நவீன தாராளமய கொள்கை களுக்கு மாற்றாக லத்தீன் அமெரிக்க சோசலிச நாடு களுடன்
இணைந்து, ஏழ் மை நிலையில் இருந்த ஈக்குவடாரை தனது ஆட்சி காலத்தில்
மீட்டெடுத்து நடுத்தரமான அளவிற்கு வளர்ச்சியடைய செய்திருக் கிறார்.
இது
அமெரிக்கா விற்கு எரிச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது.
குறிப்பாக 10 ஆண்டுகால
குத்தகை அடிப்படையில் ஈக்குவடா ரின் மான்டா பகுதியில் அமெரிக்காவின் 7
ராணுவ தளங்கள் இயங்கி வந்தன. இந்த குத்தகை கடந்த 2008ம் ஆண்டோடு
நிறைவுற்றது. இதனை புதுபிக்க வேண்டும் என அமெரிக்கா ஈக்கு வடாரை
நிர்ப்பந்தித்தது. ஆனால் ஈக்குவடார் அதிபர் ராபெல் கொரியா அதற்கு உடன் பட
மறுத்ததோடு, உடனே காலி செய்ய வேண் டும் எனவும் வலியுறுத்தி அந்நாட்டு
நாடாளுமன்றத் தில் தீர்மானமும் இயற்றப் பட்டது.
இதையடுத்து அமெரிக்கா மன்டா ராணுவ முகாமை மூடிய தோடு, அங்கிருந்து வெளி யேறியது.
இதையடுத்து அமெரிக்கா மன்டா ராணுவ முகாமை மூடிய தோடு, அங்கிருந்து வெளி யேறியது.
இதையடுத்து அமெரிக்க
ராணுவம் வெளி யேற்றத்தை தொடர்ந்து ஈக்குவடாரின் இறையாண் மை
பாதுகாக்கப்பட்டி ருப்பதாக அந்நாட்டினர் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். அதே
நேரத் தில் மன்டா ராணுவ தளத் தில் இருந்தே கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில்
அமெரிக்க தலையிட்டு தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதற்கு தற்போது
தடங்கல் ஏற்பட்டிருக் கிறது. அதோடு, அமெரிக்கா வின் அத்துமீறிய தலையீடு கள்
உலக நாடுகளில் எப்படி இருந்தது என்பதையும், தூத ரகங்களை பயன்படுத்தி உலக
நாடுகளில் குழம்பம் விளைவித்ததையும் விக்கி லீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே
அம்பலப்படுத்தி னார். அவரை எப்படியா வது கைது செய்து கொலை செய்திட
அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதற்கு சுவீடன் உள்ளிட்ட
நாடுகளை பயன் படுத்தி வருகிறது. இந்நிலை யில் ஜூலியன் அசாஞ் சேவுக்கு
அடைக்கலம் கொடுக்க தயார் என ஈக்குவடார் அறிவித்தது. இது அமெரிக்காவிற்கு
மேலும் எரிச்சலை ஏற்படுத் தியது. அத்தோடு லண்ட னில் வைத்து ஜூலியன்
அசாஞ்சேவை அமெரிக்க, கைது செய்ய முயன்ற போது லண்டனில் உள்ள ஈக்குவடார்
தூதரகத்தில் அசாஞ்சேவுக்கு அடைக்க லம் கொடுத்து அவரை பாதுகாத்து வருகிறது.
இது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு ஈக்குவ டார் அதிபர் ரபெல் கொரியா
மீது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. பிப்ரவரி மாதம் 17ம் தேதி
ஈக்குவாடாரில் ஜனா திபதி மற்றும் துணை ஜனா திபதியை தேர்ந்தெடுக்கும்
தேர்தல் நடைபெறவிருக் கிறது. இதனை பயன்படுத்தி அமெரிக்கா தனது சிஐஏ மூலம்
ரபெல் கொரியாவை கொல்ல சதிதிட்டம் தீட்டி யிருக்கிறது. குறிப்பாக தேர் தல்
பிரச்சாரம் துவங்கும் ஜனவரி 15 க்குள் முடித்து கட்ட வேண்டும். அல்லது
ஜனவரி 15ல் துவங்கி தேர்தல் நடைபெறும் முன்பு அவ ரை கொலை செய்ய சதி திட்டம்
தீட்டியிருக்கிறது.
அதற்கு ஏதுவாக ஈக்குவடா ரில் உள்ள அதிதீவிரவாத
குழுக்கள், இடதுசாரி பழ மைவாத குழுக்கள் மற்றும் கொலைகார கும்பலுக்கு 8
கோடியே 80 லட்சம் அமெரிக்க டாலர்களை கொடுத்திருக்கிறது. இதனை பயன்படுத்தி
ரபெல் கொரி யாவை கொல்வது மற்றும் ஈக்குவடார் அரசை சீர் குலைப்பது உள்ளிட்ட
நட வடிக்கைகளை ஏவி விட்டி ருப்பதாக சிலி நாட்டு பத்தி ரிக்கையாளர் தனக்கு
கிடைத்த ஆதாரங்களை வைத்து ஈக்குவடார் அரசை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு
அறிவுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரபெல் கொரியா,
அமெரிக்காவின் சிஐஏவிற்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே லத்தீன் அமெரிக்கா
நாடுகளில் இது போன்ற பல வேலைகளில் சிஐஏ ஈடுபட்டு வருகிறது என்று
தெரிவித்தார். மேலும் இது குறித்து அமெ ரிக்க தூதரிடம் தனது எச் சரிக்கையை
தெரிவித்துள் ளார். அதில் தொடர்ந்து அமெரிக்க ஏஜென்சிகள், சிஐஏ தனது
தொடர்பு களை பயன்படுத்தி ஈக்கு வடார் அரசு நடவடிக்கை களில் அடிக்கடி தலை
யிட்டு தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலை அரங் கேற்ற முயற்சிக்கிறது.
இத னை
உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு
பதிலளித்துள்ள அமெரிக்கா “ சிஐஏவின் கொலை சதி திட்டத்தை மறுத்ததோடு,
நாங்கள் ஈக்கு வடார் தேர்தல் நடவடிக் கைகளில் தலையிடவில்லை எனவும்
தெரிவித்திருக்கிறது.
__________________________________________________________________________________
___________________________________________________________________________________
__________________________________________________________________________________
உலக வரலாற்றில் இன்று | ||||
0475 | பசிலிஸ்கஸ் பைசண்டைன் பேரரசனாக முடி சூடினான். | |||
1528 | சுவீடனின் மன்னனாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினான். | |||
1539 | புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. | |||
1853 | தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது. | |||
1875 | சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான். | |||
1908 | முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது. | |||
1915 | அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. | |||
1918 | பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள். | |||
1940 | இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது. | |||
1945 | இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது. | |||
1964 | சான்சிபாரின் புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர். | |||
1967 | எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார். | |||
1970 | நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. | |||
1976 | பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது. | |||
1992 | மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. | |||
2004 | உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது. | |||
2005 | புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது. | |||
2006 | சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர். | |||
2006 | 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். | |||
2007 | மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது. |