ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஐ.நா,வும்- குறட்டையும்இரண்டும் வேறு -வேறு பதிவுகள்தான் .
 
இலங்கை இறுதிகட்ட போரின்போது சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சானல்-4 டி.வி காணொளித் தொகுப்பாக வெளியிட்டு உலகில் பரபரப்பை எற்படுத்தியது.அதில் இடம் பெற்ற காட்சிகள் உலகம் முழுவதையும் குலுக்கும் வகையில் இருந்தன.
 அந்த காணொளிகள் ஈழத்தில் ராஜபக்ஷே மேற்கொண்ட இனப்படுகொலைகளை ,கொடுரக்கொலைகளையும்-சிங்களப் படையினர் வெறியாட்டத்தையும் பகிரங்கப்படுத்தியது.உலகநாடுகளை இலங்கைத் தமிழர்கள்
ஒழிப்புஇன் கொடுரத்தை ,ராஜபக்சேயின் போர் குற்றத்தை உணரச் செய்தது.அதற்கு வலுவான ஆதாரமாகவும் அமைந்தது.
ஆனால் இக்கொடுரம் உலக நாட்டாண்மையான ஐ.நா.சபையினரின் கண்களை மட்டும் திறக்கவில்லை.சூடான்,சிரியா,ஈராக்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் தலையை கொடுத்து அந்நாட்டு அரசை மிரட்டி அமைதியை நிலைநாட்டுவதாக கூறும் ஐ.நா.இலங்கைத்தமிழர் பிரச்னையில் மட்டும் தமிழர்கள் மனித வகையினர் இல்லை என்ற சந்தேகத்தில் இருப்பது போல் தெரிகிறது.
கடைசிக்கட்ட அழித்தொழிப்பு நடக்கும் போது தனது பொறுப்பை தட்டிக்கழித்த ஐ.நா.சபை அலுவலர்கள் பற்றிய அறிக்கை அச்சபையின் நடுநிலை உலக சமாதான பொறுப்பை சந்தேகத்திற்கு இடமாக்கி விட்டது.
இப்போது  சானல்-4 டி.வி மேலும் 2 காணொளித்  தொகுப்புகளை இப்போது தயாரித்து வருகிறது.
வருகிற மார்ச் மாதம் ஐ.நா சபை மனித உரிமை அமைப்பின் கூட்டம் நடக்கிறது. அதற்கு முன் இந்த  காட்சிகளை ஒளிபரப்ப சானல்-4 முடிவு செய்துள்ளது.

இந்த காணொளிக் காட்சிகள் இலங்கைக்கு மேலும் பல சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை அரசு இப்போது கொஞ்சம் நடுக்கத்தில் உள்ளது.ஆனால் ஐ.நாவின் மீதுதான் அதன் நோக்கம் பற்றிதான் சந்தேகமாக இருக்கிறது.அங்கு ராஜபக்ஷேக்குத்தான் ஆதரவு உள்ளதாக இதுவரையிலான அதன் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்கள் அடிப்படை யில்  அது இதுவரை சிறுத்துரும்பைக்கூட நகர்த்தவில்லை.இனி நகர்த்தும் என்பதும் சந்தேகமே.
இப்போதும் ஈழத் தமிழர்களை  சிங்களப்படையினர் பாதுகாப்பில்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை .தமிழர்கள் வாழ்விடங்கள்,நிலங்கள் அனைத்தும் சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது.அவர்களின் கோவில்கள் புத்த மடங்களாகவும்,இடித்தும் உருமாற்றமடைகின்றன.
பல்கலைகழகத்தில் கூட நான்கு தமிழர்கள் சந்தித்து பேசினால் உடனே கைது.இது போன்ற அவசரகால மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.இது பற்றியும் ஐ.நா.விடம் நித்தம் குற்றம் சாட்டி கடிதங்கள் போகின்றன.பலன்தான் இல்லை.அந்த கடிதங்கள் இதுவரை நடவடிக்கைகளுக்காக போனதில்லை .போன இடம் குப்பைக்கூடையாகத்தானிருக்கும்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------

குறட்டை 
------------

ஐ.நா.சபைக்கு மட்டுமல்ல சுமாராக 25 வயது முதல் 50 வயதானவர்களுக்கும்  குறட்டை  வருகிறது.
 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வருவதாக தெரியவில்லை.
தூங்கும்  போது குறட்டை விட்டுகொண்டிர்ப்பவர்களின் குறட்டை  திடீரென நின்று விடும். அவர்கள் அப்போது சில வினாடிகள்  மூச்சு, பேச்சு இன்றி காணப்படுவார்கள். இந் நிலை   உயிருக்கு ஆபத்தானவை. இதனை உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இல்லையெனில் தூக்கத்திலேயே மாரடைப்பு  ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது .
 குறட்டை இரு வகைப்படும். ஒன்று துங்கும் போது மெல்லியதாக சப்தம் ஏற்படுத்துவது. மற்றொன்று அதிக சப்தத்துடன் குறட்டை விடுவது. அதிக  சப்தத்துடன் குறட்டை விட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதய கோளாறு, வாயு கோளாறு, சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு  ஏராளம் உள்ளன.
 மூக்கில் சுவாச காற்று குறைவாக சென்றால் குறட்டை வரலாம். தொண்டையில் காற்று செல்லும் பகுதி குறைவாக இருந்தாலும்  வரும். மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் வரும். மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து. மற்ற இரு வகையான குறட்டைகளை  எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம்.
60 வயது கடந்தவர்கள் அதிகமாக குறட்டை விட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு குறட்டையை  கட்டுப்படுத்த நவீன கருவிகள் உள்ளன. இந்த கருவியின் டீயுப்பை மூக்கில் பொருத்தினால் போதும் குறட்டை சப்தம் குறைந்து விடும்.
மூக்கு துவாரங்களில் சதை வளருதல், தொண்டையில் டான்சில் கட்டி அதிகமாக இருத்தல், நாக்கின் பின் பகுதி தடிமனாக இருத்தல், பற்களின்  கீழ்தாடை எலும்பு உள்வாங்கி இருத்தல், உள்நாக்கு பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருத்தல் போன்றவைகளால் குறட்டை அதிகமாக  ஏற்படுகிறது. தூங்கிய போது அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு திடீரென நின்று விடும். அப்போது ஒரு நிமிடம் மூச்சு, பேச்சு இன்றி  காணப்படுவார்கள். இவை உயிருக்கு ஆபத்தானவை. இதனை உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இல்லையெனில்  தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும்.
அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு மறுநாள் சோர்வு ஏற்படும். 
காலையில் தூக்கம் வரும். ஞாபக மறதியும் ஏற்படும். ஏப்பம் விடுவார்கள்.  குறட்டை விட்டால் வயிறு பெருகும். கொழுப்பு சத்து அதிகரித்தால் குறட்டையும் வந்து விடும். உடல் எடையை குறைக்க வேண்டும். நடை பயணம்,  உடற்பயிற்சி செய்யலாம். மூக்கில் சதை வளர்ந்தால் அவற்றினை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். லேசர் மூலம் சதை வளர்ச்சியை  குறைத்து விடலாம்.
 உள்நாக்கு பகுதியில் சதையை குறைக்கவும் லேசரை பயன்படுத்தலாம். காலையில் வந்து அறுவை சிகிச்சை செய்தால்  மாலையில்வீடு திரும்பி விடலாம். இதற்கான நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
குறட்டை விடுவதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் மட்டுல்ல.நமக்கே சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
நாட்டில் மக்கள் நலனை மறந்து குறட்டை விடும் ஆட்சியாளர்களால் நாம் படும் அவலங்களை எண்ணியாவது  நாம்  நமது  குறட்டையை கட்டுப்படுத்தப் பார்ப்போம்.
 -----------------------------------------------------------------------------------------------------------

புல்டோசர் ஓடலை.அந்த டிரைவர் குறட்டை சத்தம்தான் இது.

suran